இதயங்கவர்ந்த இந்தோனேசியா!
தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
இந்த அத்தியாயத்தை எழுத அமர்ந்த வேளையில் சேலத்திலிருந்து வாசகர் ராமநாதன் தொலைபேசியில் பேசினார்.
ஓட்டல் அறைப் பையன், ஓட்டலின் ஆஸ்தான வாகன ஓட்டுநர் இவர்களெல்லாம் இப்படி அழைக்கையில், நாட்டைவிட்டே காலி செய்துவிடலாமா என்று யோசிக்கவைக்குமளவு அங்குள்ள நடப்புகள் இருக்கையில், எப்படி நீங்கள் இதயம் கவர்ந்த இந்தோனேசியா என்று கூப்பிடலாம் என்று என்னைக் கேள்வி கேட்டதுடன், இவற்றையெல்லாம் நீங்கள் இரசிப்பதால்தான் இப்படி ஒரு தலைப்பையும் கொடுத்திருக்கிறீர்கள்? இது முரண்பாடாக இல்லையா என்றும் மடக்கினார்.
நான் வகையாகச் சிக்கினேன். பதில் சொல்லத் தேவையான எச்சில் விழுங்கினேன்.
பிறகு சுதாரித்துக் கொண்டு சொன்னேன். இந்தோனேசியாவில் பல நல்ல அம்சங்கள் இருக்கின்றன. நான் தெரியாத்தனமாக இப்படிப்பட்ட ஓட்டலிலும், சூழ்நிலையிலும் வந்து மாட்டிக்கொண்டேன். நான் மனம் இலயித்த, என் இதயம் கவர்ந்த விஷயங்கள் இனிமேல்தான் வரப்போகின்றன. அதற்குள் நீங்கள் என்னை மடக்க அவசரப்பட்டுவீட்டீர்கள் என்று சொல்லி சமாளித்தேன்.
என் வியப்பெல்லாம் ஒரு தரமற்ற லாட்ஜில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்தால் வியப்பில்லை.
ஒருவகையில் நட்சத்திர ஓட்டலாகவே விளங்கும் இந்த ஓட்டலிலுமா இப்படி நடப்பதுதான் என் ஏமாற்றத்திற்குக் காரணம்.
சுவாங்கை எப்படிச் சமாளித்தேன் என்று உங்களுக்குச் சொல்லவில்லையே! மற்றவர்களைப்போல் நான் பிரதிபலிக்கவில்லை. யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்டாய் நீ? என்னைப் பார்த்தால் அப்படிப்பட்ட ஆளாகவா தெரிகிறது என்றெல்லாம் குதிக்காமல் ‘நான் சொல்லட்டுமா?’ என்றேன் சர்வசாதாரணமாக.
சுவாங் இந்தப் பதிலுக்கே சுவாரஸ்யமாகிவிட்டார். இதையெல்லாம் ‘மாமா வேலை’ என்று இவன் கருதவில்லை. தொழிலின் ஒரு பகுதி என்றுதான் நினைக்கிறான். இங்கு இதெல்லாம் வெகு சாதாரணம்.
காலையில் எழுந்து நடைப் பயிற்சி மேற்கொண்டபோது ஒருசில விஷயங்கள் விநோதமாகப்பட்டன.
இதற்குமுன் ஒன்றைச் சொல்லிவிட வேண்டும். அரை டவுசர், வெள்ளை பனியன், ஷூ சகிதமாய் நான் புறப்பட்டபோது ஓட்டல் பாதுகாவலர் என்னைத் தடுத்து நிறுத்தினார்.
“என்ன விஷயம்?”
“நிறையப் பணம் எடுத்துச் செல்கிறீர்களா?”
“இல்லை. சிறிய தொகைதான்.”
“அப்படியானால் சரி.”
“ஏன் இப்படிச் கேட்டீர்கள்?”
“இங்கே பிக்பாக்கெட் திருடர்கள் சர்வசாதாரணம்.”
“அப்படியா?”
“ஆமாம்.”
“இவ்வளவு காலையிலா?”
“நேற்றிரவு நல்ல வேட்டை என்றால், குடித்து ஆட்டம் போட்டுவிட்டுப் போயிருப்பார்கள். எதுவும் கிடைத்திராவிட்டால்…
‘கிடைத்திராவிட்டால்?”
“காலையில் வாக்கிங் போகிறவர்கள்தாம் இலக்கு.”
“ஓ!”
“சங்கிலி போட்டிருக்கிறீர்களே!”
“ஆமாம்.”
“கழற்றிக் கொடுத்து விடுங்கள்.” கையில் கத்தியை நீட்டிக் கேட்பவர் போல் உரிமையாகக் கேட்டார்.
“பிறகு அவரே தொடர்ந்தார். என்னிடமல்ல, ரிசப்ஷனில் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்.”
சரி நன்றி. நல்ல யோசனையாகப்பட்டது.
வரவேற்பறையை நோக்கி நடந்தேன். என் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியைக் கழற்றி வரவேற்பறையில் கொடுத்தேன்.
“என்னது இது?”
“தங்கச் சங்கிலி”
“தெரிகிறது. என்னிடம் ஏன் தருகிறீர்கள்?”
“வாக்கிங் போகிறேன். பாதுகாப்பிற்காகக் கொடுத்துவிட்டுச் செல்கிறேன்.”
“இப்படியெல்லாம் கையில் வாங்கமாட்டேன்.”
“உங்கள் ஓட்டல் பாதுகாவலர்தான் சொன்னார்.”
‘அவன் கெடக்கான்’ என்பதுபோல் பார்த்துவிட்டு “இந்தாருங்கள்” என்று ஒரு சாவிக் கோர்வையுடன் கூடிய சாவியைக் கொடுத்தார்.
என்னது இது?
“இங்கு தங்குபவர்களுக்கு நாங்கள் லாக்கர் தருகிறோம். அதில் மதிப்புமிகு பொருள்களை மட்டும் வைத்துக்கொள்ளலாம். போகும் போது காலி செய்து சாவியைக் கொடுத்துவிட்டு செல்லலாம்.”
சாவியை வாங்கத் தயங்கினேன்.
“கட்டணம் கிடையாது.”
“ஓ! அப்படியானால் தாருங்கள். ஆனாலும் நான் நடக்கப்போகும் அரை மணி நேரத்திற்கு லாக்கர் தேவையா என யோசிக்கிறேன்.”
“நான் டூட்டி மாறுகிறேன். நீங்கள் வாக்கிங் முடித்துக் திரும்பும் நேரம் இருக்கமாட்டேன். இல்லாவிடில் வாங்கிக் கொள்வேன். இதனால்தான் லாக்கர் எடுத்துக் கொள்ளச் சொன்னேன்.”
“உங்கள் ஊர் லாக்கர்களை இயக்கி எனக்கு பழக்கமில்லை.”
“இதென்ன பிரமாதம்? வாருங்கள் சொல்லித் தருகிறேன்” வரவேற்பறையிலிருந்து வலப்புறம் திரும்பி மறுபடி இடப்புறம் சென்றதும் ஒரு சிறிய அறை.அதில் சிறுசிறு லாக்கர்கள். பாஸ்போர்ட், பணம், பர்ஸ், கேமரா வைக்கலாம் அவ்வளவுதான்.
சொல்லிக் கொடுத்தார். சங்கிலியை உள்ளே வைத்துவிட்டுப் புறப்பட்டேன்.
‘நான் சொன்னதைக் கேட்டு அதன்படி நடந்ததற்கு நன்றி’ என்கிற அர்த்தப் பார்வையைப் பாதுகாவலர் என்மீது வீச, நான் அதை ஏற்றவனாக நடந்தேன்.
ஜாகர்தாவில் காலையில் இளநீர் ஏகமாய்க் கிடைக்கிறது. அவர்களே ஒரு மிக்ஸியும் வைத்திருக்கிறார்கள். “எதற்கு இளநீர்க் கடையில் மிக்ஸி?” கேட்கணும், தயக்கம். கேட்டுப் பதில் பெறவும் முடியாது. காரணம் இந்தோனேசியாவில் மொழிப் பிரச்னை அதிகம்.
இளநீர் சாப்பிட்டுவிட்டு அப்படியே உரையாடி விஷயத்தை வாங்கலாம் என முடிவு செய்தேன். என் கேள்விக்கு அந்தக் கடைக்காரம்மா வேலை வைக்கவில்லை.
இளநீரைச் சீவி, நீர் எடுத்து, அதை மிக்ஸியில் போட்டார். இளநீரை வெட்டினார். அதில உள்ள வழுக்கை எனப்படும் இளம் தேங்காய் தோசைப் பதத்தில் இருந்தது. அதையும் மிக்ஸியில் வழித்துப் போட்டார்.
மிக்ஸியைத் தட்டினார் பாருங்கள் இளநீர் கிட்டத்தட்ட தயிர்ப் பதத்திற்கு வந்தது.
அழகான கண்ணாடி டம்ளரில் (எவ்ளோ பெரிசு!) ஊற்றித் தந்தார். ஒரு மடக்குக் குடித்தேன். அடா அடா! என்ன்ன ருசி!
இனி இளநீர் குடிக்க நேர்ந்தால் இப்படித்தான் குடிப்பது என்கிற தீர்மானத்திற்கும் வந்தேன்.
(தொடரும்)
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Most Commented Posts
































August 22nd, 2009 at 12:08 am
வழுக்கை… Its not வழுக்கை its வழுவல்