 |
| ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன் |
 |
எம்.பாண்டியன், தேவகோட்டை.
|
 |
|
ஊழலில் மாட்டிக் கொள்பவர்கள் தப்பித்து விடுகிறார்களே?
|
 |
|
போனதும் ஊழலாலே, வந்ததும் ஊழலாலே என்கிற ஃபார்முலா யார் கையிலிருந்தாலும் அவர்களுக்கு புழல் ஒரு குற்றாலம். சீசனுக்கு சீசன் அவர்களே குளிக்கப் போய்விடுவார்கள். தலை முழுகத்தான்!
|
|
 |
எஸ்.சிதம்பரம், மன்னார்குடி..
|
 |
|
இடைத்தேர்தலில் தமிழக பா.ஜ.க., ஐந்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறதே?
|
 |
|
நீங்க என்ன சொல்ல வர்றீங்க? அ.தி.மு.க.விற்கு இல்லாத தைரியம் பா.ஜ.க.விற்கு இருப்பதாகச் சொல்கிறீர்களா? அ.தி.மு.க.வினர் தங்கள் முடிவை திருவுளச் சீட்டு முறையில் தெரிந்து கொண்டார்கள். பா.ஜ.க.வினரோ அதே முடிவைக் கொஞ்சம் அதிகாரபூர்வமாகத் தெரிந்து கொள்ளப் போகிறார்கள்.
|
|
 |
டி.பழனிவேல், பட்டுக்கோட்டை.
|
 |
|
உங்களால் மட்டும் எப்படி எப்போதும் சிரித்துக் கொண்டிருக்க முடிகிறது?
|
 |
|
இன்றைக்குச் சிரித்தால் நாளைக்கு அழுகையோ என்ற லாஜிக்கில் எப்போதும் நான் இருந்தது இல்லை. இந்த லாஜிக்கான மேஜிக்தான் என்னை எப்போதும் அழாமல் பார்த்துக் கொள்கிறது.
|
|
 |
ஆர்.பாண்டுரங்கன், காங்கேயம்.
|
 |
|
அண்மையில் உங்களைக் கலக்கிய விஷயம்?
|
 |
|
நம் தேசத்தில் ஆவணப் படங்கள் பலவற்றைச் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் குப்பைத் தொட்டியில் போட நேர்ந்ததைச் சொல்லலாம். இவர்களுக்கெல்லாம் இவற்றின் அருமை தெரியாது. வரும் தலைமுறைக்கு இவற்றைக் காட்ட முடியாதபடி மறுக்கப்பட்டதை நினைத்தால் நெஞ்சு பொறுக்குதில்லை. தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஜகத்ரட்சகன் நிச்சயம் நிலைமைகளைச் சீர் செய்வார் என்று நம்புகிறேன்.
|
|
 |
டி.லியாகத் அலி, எட்டயபுரம்.
|
 |
|
மு.க.ஸ்டாலின் டாக்டர் பட்டம் பெற்றது பற்றி?
|
 |
|
தகுதி உடையவர்தான். சந்தேகமில்லை. ஆனால் தமிழக எல்லைக்குள் இருக்கிற ஒரு பல்கலைக்கழகத்திடமிருந்து பெறுவதைவிட எல்லைக்கு அப்பால் உள்ள ஒரு மதிப்புமிக்க பல்கலைக்கழகம் தந்திருந்தால் பெரும்பான்மையானவர்களுக்கும் பெருமிதமாக இருந்திருக்கும்.
|
|
 |
எம்.சீனிவாசன், வேலூர்.
|
 |
|
அஜ்மல்கசாப் என்கிற பாகிஸ்தான் தீவிரவாதி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளது பற்றி?
|
 |
|
ஊட்டியில் கொதிக்கக் கொதிக்க வெந்நீர் வைத்துக் குளித்த மாதிரி இருக்கு. நமது மனசுக்கும் உடம்புக்கும் இந்தக் குளியல் ஆரோக்கியமானதுதான்.
|
|
 |
ஏ.நசீர்அலி, சென்னை.
|
 |
|
டெல்லி மெட்ரோ இரயில் தூண்களில் மீண்டும் விரிசல்களாமே?
|
 |
|
டெல்லியென்றாலே எப்போதும் விரிசல்கள்தான்! இங்கு பேட்ச் ஒர்க் எப்போதும் நடந்து கொண்டேயிருக்க வேண்டும். அது தெரிந்தும் ஏன் மெட்ரோவைக் கோட்டை விட்டார்கள்? எனது கேள்வியெல்லாம் இதுதான்!
|
|
 |
டி.வி.சந்திரன், ஆவடி.
|
 |
|
ஒரு ஆரம்பப் பேச்சாளர் எப்படி இருக்க வேண்டும்?
|
 |
|
இன்றைய காஷ்மீர் சட்டப்பேரவைத் தலைவர் மாதிரி இல்லாமல் எப்படி வேண்டுமானாலும்! அவர் மாதிரி மனத்தில் தோன்றியதையெல்லாம் பேசினால் மைக் பறிபோகும். ஒவ்வொரு வார்த்தைக்கும் அதைக் கெட்டியாகப் பிடிக்க வேண்டியிருக்கும்.
|
|
 |
பி.சந்தானம், தூத்துக்குடி.
|
 |
|
விஜயகாந்தின் அடுத்த படம்?
|
 |
|
அடியேன், அறியேன். அதுபற்றிய ஆர்வமும் இல்லை. அதைப் பார்க்கணும் என்கிற தூண்டுதலும் இல்லை. எம்.ஜி.ஆரை, சிவாஜியை, ரஜினியை, கமலை 50கள்-60களாலும் இரசிக்க முடிந்தது; முடிகிறது. விஜயகாந்தை 50களில் இரசிக்க மனம் ஒப்பமாட்டேன் என்கிறது.
|
|
 |
ஏ.மாதுங்கி, ஹைதராபாத்.
|
 |
|
சோம்நாத் சாட்டர்ஜி-மீராகுமார் - ஒப்பிடுங்கள் பார்ப்போம்?
|
 |
|
தொண்டைத் தண்ணீர் வற்ற கத்தி பாராளுமன்ற உறுப்பினர்களை அடக்குவது; டென்ஷன் ஆவது; கன்னத்தில், தலையில் கை வைத்துக் கொண்டு சோர்வடைவது; சலிப்பு முகம் காட்டுவது; விடுங்கப்பா போதும் என்று கெஞ்சுவது இவை சாட்டர்ஜி பாணி. ஒரு சிறு புன்னகையுடன், சிறு குழந்தைகள் செய்கிற சேட்டைகளை இரசிப்பாளே ஒரு தாய். அந்தப் பாணியில் இருப்பது மீரா குமாரின் பாணி! அம்மணியோவ் உங்ககிட்ட நிறையக் கத்துக்கணும் அம்மணியோவ்!
|
|
 |
என்.ஜீவா, பம்மல்.
|
 |
|
ஆளுங்கட்சியென்றால் இடைத்தேர்தலில் ஜெயித்துத்தான் ஆகணுமா?
|
 |
|
சினிமா ஹீரோக்கள் போய்த் தோற்கலாமா? அவர்கள் ஜெயித்தே ஆக வேண்டும். இல்லாவிடில், வில்லன்கள் எழுந்து கொள்வார்களே!
|
|
 |
சி.கலியமூர்த்தி, தஞ்சை.
|
 |
|
இடைத் தேர்தலைப் புறக்கணித்த அ.இ.அ.தி.மு.க.வின் முடிவை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
|
 |
|
இந்த முடிவைதான் புறக்கணிக்கிறேன். வலுவிழந்த வீணை நரம்புகளை இழுத்துக்கட்டி இசைப்பதுதான் நியாயம். நரம்பு போச்சுன்னு சொல்லி, அதைத் தூக்கிப் பரண் மேல் கடாசுவதற்கா வீணை? கட்சியும் ஒரு வீணை மாதிரிதான்.
|
|
 |
ஏ.அப்துல்ஹரீம், வேலூர்.
|
 |
|
பாகிஸ்தான் இந்த உதை வாங்குகிறதே இலங்கையிடம்?
|
 |
|
கேப்டன் யூனிஸ்கான் 20-20 கோப்பையை வென்ற கையோடு தன் வருங்கால ஓய்வை அறிவித்தது ஏன் தெரியுமா? நாங்கள் குருட்டு அதிர்ஷ்டத்தில் ஜெயித்து விட்டோம். இந்த வெற்றியை நாங்கள் தக்க வைத்துக் கொள்ளமாட்டோம் என்று அடைப்புக் குறிகளுக்குள் சொல்லித்தான். அதுதான் இலங்கையில் நடந்தது.
|
|
 |
ஏ.கண்மணி, பெங்களூரு-1.
|
 |
|
வீடுகளுக்கு கன்னா பின்னான்னு வண்ணத்தில் பெயிண்ட் அடிப்பது சகிக்கவில்லையே?
|
 |
|
இன்று 100 வீடுகளுக்கு 1 வீடு இப்படி ஆகிவருகிறது. கேட்டால் வாஸ்துவாம். வீட்டை அடையாளம் கண்டுபிடிக்க உதவுமே தவிர, வேறு பலன்கள் இரா. இந்த மூட நம்பிக்கையின் பின்னணியில் பெயிண்ட் நிறுவனங்கள் கொழிக்கின்றன!
|
|
 |
எஸ்.ஆறுமுகம், அமைந்தகரை.
|
 |
|
தமிழகத்தின் இன்றைய கூட்டணிக் கட்சிகள் தங்களுக்குள் மோதிரம் மாற்றிக் கொள்ள யோசிக்கிறதே?
|
 |
|
இதிலும் அரசியல்! ஒருவரது மோதிரம் ஒரு சவரனாயிருந்து அடுத்தவர் மோதிரம் அரை சவரனாயிருந்தால் அவர்களுக்குள் எப்படி மனசு ஒப்பும்!
|
|
 |
என்.குப்புசாமி, முகப்பேர்.
|
 |
|
தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ.க்களின் சம்பள உயர்வு மற்றும் வீட்டுமனை விநியோகம் பற்றிப் பொது நல வழக்கு ஒன்று வந்துள்ளதே?
|
 |
|
எத்தனை வழக்கு நிலுவை இருந்தாலும் அத்தனையையும் ஒதுக்கி முதலில் இதை விசாரித்தால், இவர்களுக்கு ஓட்டுப் போட்ட நம் முன்னோரும் நிதிமன்றத்தை ஆசிர்வதிப்பார்கள்.
|
|
 |
பி.குணசீலன், மதுரவாயல்.
|
 |
|
இடைத்தேர்தலை புறக்கணித்த ஜெயலலிதாவின் நாடகம்?
|
 |
|
நாடகம் வெற்றி! தொண்டர்களுக்குத்தான் படுதோல்வி.
|
|
 |
ரோஷினி, பெங்களூர்-2.
|
 |
|
வருமான வரித்தாக்கல் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது எதைக் காட்டுகிறது?
|
 |
|
பயத்தை! நம்மவர்கள் ஏமாற்றுக்காரர்கள். பலரும் ஏகமாய்ச் சம்பாதிக்கிறார்கள். வருமானவரி கட்ட மட்டும் இவர்களுக்கு வலிக்கிறது 2 சதவிகித மக்கள் தரும் வரிப்பணத்தில் 98 சதவிகித மக்களைப் பராமரிக்க வேண்டியிருக்கிறது. வருமான வரியின் கயிற்றுப்பிடிகள் இன்னமும் இறுகவேண்டும். இறுகினால் பெருகும்!
|
|
 |
சா.மலையாண்டி, தேனி.
|
 |
|
தொடரும் பட்டாசுத் தொழிற்சாலைச் சாவுகள் பற்றி?
|
 |
|
கவனக் குறைவும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள ஓட்டைகளும் மையக் காரணம், இது தொடர்ந்தால் வேலை செய்ய ஆள் வரமாட்டார்கள். தொழில் நசிந்து நமத்துப்போகும்!
|
|
 |
எஸ்.சிதாராமன், கும்பகோணம்.
|
 |
|
தானிய விலைகள் கடுமையாக ஏற என்ன காரணம்?
|
 |
|
மூன்று நான்கு வருடங்களாகவே வடக்கே பருவமழையின் ஜாலத்தினால் (வெள்ளம், வறட்சி) விளைச்சல் பாதிக்கப்பட்டுவிட்டது. இதன் தாக்கம் இப்போதுதான் தெரிய ஆரம்பித்திருக்கிறது. தானிய விஷயத்தில் பர்மா மட்டும் நமக்குக் கைகொடுக்காவிட்டால் நிலைமை மோசமாகிவிடும். கருணையோடு நிலைமைகள் சீராகும் என நம்புவோம். அதுவரை தானியப் பயன்பாட்டைக் குறைப்போம்.
|
|
 |
டி.மாரிமுத்து, மன்னார்குடி.
|
 |
|
சுதந்திரதினம் நல்லபடியாக நடக்குமா? அச்சுறுத்தல் தொடர்கிறதே?
|
 |
|
வருடாவருடம் இந்த மிரட்டலும், இதனைத் தொடர்ந்து அசம்பாவிதம் இல்லாத இனிய சுதந்திரதினமும் வாடிக்கையாகிவிட்டனவே!
|
|
 |
|
|