இதயங் கவர்ந்த இந்தோனேசியா!
வந்திறங்கியதும் வந்த கேள்வி!
ஆசிய நாடுகளுள் நான் பார்க்காதவற்றின் பட்டியலைப் பார்த்தேன். முழு நீளமெல்லாம் இல்லை. உள்ளங்கைக்குள் அடங்கிவிடக்கூடிய பட்டியல்தான்.
இந்தப் பட்டியலிலிருந்து இந்தோனேசியாவை நீக்க முடிவு செய்தேன்.
என் பெரியம்மா மகள் என் அக்கா கோதையும் அத்தான் திரு.விஸ்வநாதனும் ஜாகர்த்தாவில் (இத்தோனேசியத் தலைநகரில்) இருந்ததும் இதற்கு ஒரு காரணம். அக்கா, அத்தான் இருக்கிற தைரியத்தில் எல்லா ஏற்பாடுகளும் நடக்க, இவர்கள் இருவருக்கும் இந்தியாவில் ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.
நில நடுக்கங்களும், கிறித்துவ எதிர்ப்புகளும், குண்டு வெடிப்புகளும் பற்றிய செய்திகள் இந்த நேரம் பார்த்து வந்து தொலைக்க, ‘என் மனைவி, போகாதே போகாதே என் கணவா! பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்’ என்று பாடாத குறையாய் என் பயணத்திற்கு 144 போடாத குறைதான்.
இவற்றிற்கெல்லாம் நான் மசிவதாக இல்லை. ஆனால் எனக்கு மனத்தளவில், அசெளகரியமாகப்பட்ட விஷயம், அக்கா வீட்டில் செல்லத் தம்பியாய்த் தங்கிக் கொண்டு அவர்களின் வழிகாட்டுதலில் ஆலோசனையில் இந்தோனேசியாவை வலம் வரலாம் என்று பார்த்தால் இப்படி ஒரு தடை!
நமக்குத் தெரிந்த உள்ளூர் வாசிகள் இல்லாவிட்டால் பல இடர்ப்பாடுகள். முதலாவது மொழிப்பிரச்னை, இரண்டாவது பொருந்தா உணவு, மூன்றாவது வீண் செலவு, நான்காவது தகவல்களைத் திரட்ட முடியாமல் போவது, ஐந்தாவது சரியான வழிகாட்டல் இன்மை!
ஆனால் இதுவும் ஒரு புதுவித அனுபவமாக இருக்கட்டுமே என்று தோன்றியது.
இந்தோனேசியாவிலிருந்து தமிழகத்திற்கு நேரிடையாக சுனாமி அலைதான் வருமே தவிர, நேரிடை விமானச் சேவை கிடையாது.
ஒன்று, மலேசியா சென்று, செல்ல வேண்டும் அல்லது சிங்கப்பூர் சென்று, செல்ல வேண்டும். இதற்கும் கெட்டிக்காரத்தனமாக டிக்கெட் வாங்க வேண்டும். சிங்கப்பூர் ஏர்லைன்சில் நேரிடையாக டிக்கெட் வாங்கினால் தாளித்து விடுவார்கள்.
சிங்கப்பூர் வரை டிக்கெட் எடுத்துக்கொண்டு விட்டு, அங்கிருந்து கருடா ஏர்வேஸ் (இந்தோனேசியாவிற்குச் சொந்தமானது) மூலம் தனி டிக்கெட்டாக எடுத்துக் கொண்டால் மிக மலிவு. அதுவும் மிக முன்னதாக இணையதளம் மூலம் எடுத்தால் மகா மலிவு.
நான் குறிப்பிட்ட இரு வகை டிக்கெட்டுகளுக்கும் இடையே எவ்வளவு வித்தியாச விலை தெரியுமா? நம்பவே முடியாத மலிவு என் பாணியில் எடுப்பது. உண்மையைப் போட்டு உடைத்து விட்டேன். இனிப்போகிறவர்களின் சமர்த்து!
சிங்கப்பூரில் இறங்கி எங்களுடைய பெரியம்மா பேரன் சரவணகுமாரின் ஆலோசனைகளை நிறையவே கேட்டுப் பெற்றேன். சரவணகுமார் அடிக்கடி ஜாகர்த்தாவுக்கு அலுவலகப் பணி நிமித்தமாகப் பயணிப்பவர் என்பதால் பல உபயோகமான விஷயங்களைச் சொன்னார்.
மலேசியா, சிங்கப்பூர் செல்கிற எவரும் இந்தோனேசியாவைப் பார்த்தே தீரவேண்டும். அதுவும் இரவுப் பயணமாக இருந்தால் இந்தோனேசியா விமானத்தில் வலப்பக்கம் சிறுசிறு தீவுக்கூட்டங்களாக இரவில் விளக்கொளியில் கண் சிமிட்டுவதைக் கவனிக்கத் தவறியிருக்கமாட்டார்கள்.
சிங்கப்பூரிலிருந்து நான் பயணித்தது ஒரு காலைப் பொழுதில். இந்தோனேசிய நிலப்பகுதி சில நிமிடங்களிலேயே தெரிய ஆரம்பித்துவிட்டது. குளத்தில் பாசிக்கூட்டம் சிதறிக் கிடக்கிறமாதிரி கடலில் இந்தோனேசியத் தீவுகள் பசேல் என்று துண்டு துண்டாகக் கிடக்கின்றன.
இப்படிச் சிறுசிறு தீவுக் கூட்டங்களாக இருக்கும் அங்கே போக்குவரத்து, உணவு விநியோகம், மின் விநியோகம், சட்டம் ஒழுங்குப் பராமரிப்பு இவற்றையெல்லாம் எப்படித்தான் சமாளிக்கிறார்களோ என்று வியந்தேன்.
ஜன்னலோர இருக்கை கேட்டு வாங்கினாலும் விமானம் காலியாக இருந்ததால் நடைபாதையை ஒட்டிய இருக்கைக்கு - உணவு உண்ண பானம் அருந்த என மாறினேன்.
ஓர் ஆடவன் அமர்ந்திருக்கிறானே அவன் மீது நம் உடல் படக்கூடாதே என்கிற உணர்வெல்லாம் இல்லாமல் என் தோள்பட்டையில் தங்கள் இடுப்புகளால் இடித்தபடியே நடந்து கொண்டிருந்தார்கள் கருடா விமானப் பணிப்பெண்கள்.
நாம் தான் கூச்சத்தில் தோளை இருக்கைப் பகுதிக்குள் வரும்படி சாய்ந்து அமர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
ஒரு நாட்டிற்குள் நுழையும் முன்பே அந்த நாட்டுப் பெண்கள் தங்கள் கலாசாரத்தை மெல்ல, இப்படி உணர்த்த ஆரம்பித்துவிடுகிறார்களே என்று எண்ணத் தோன்றியது.
ஏஷியன் வெஜிடேரியன் மீல்ஸ் (AVM) வேண்டுமென்று கேட்ட எனக்கு, ஏமாற்றமே காத்திருந்தது. சரி, ஃப்ரூட் பை கொடுங்கள் என்றேன் . ‘பைன்னா பையில் பழம் கேட்கிறேன் என்று பொருளல்ல, நான் கேட்டது Fruit Pie.
வெறும் பழங்களாக ஒரு தட்டு நிறையக் கொடுப்பார்கள். இவர்கள் தரும் உணவெல்லாம் தொண்டையைத் தாண்டும் என்று தோன்றவில்லை.
இந்தோனேசிய விசாவைத் தர ரொம்பத்தான் அதிசயம் செய்தார்கள். பத்திரிகையாளர் என்றாலே பயப்படுகிறார்கள். ஏதேனும் ஒன்றுகிடக்க ஒன்று எழுதிவிடுவேனோ என்கிற பயம். மற்ற நாடுகளில் பத்திரிகையாளர்களுக்கு, அவர்களது எழுத்துகளுக்கு ஏக முக்கியத்துவம் உண்டு. நம் நாடு போல அல்ல, ஏதோ மீது ஏதோ பெய்த மாதிரியெல்லாம் இருக்கமாட்டார்கள்.
பத்திரிகையில் ஏதும் ஏடாகூடமாக வெளியாகிவிட்டால் ஒன்று அதற்கு விளைவு தெரியும். எதுவும் இல்லாவிட்டால் எழுதியவரை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்கள்.
“எதற்கு வந்திருக்கிறீர்கள?” இது குடியேற்ற அதிகாரி கேட்ட கேள்வி.
“நான் பயணக் கட்டுரையாளன். உங்கள் நாட்டைப் பற்றி எழுதப்போகிறேன்!”
பொதுவாக எந்த உணர்வும் காட்டாமலிருப்பதில் வல்லவர்களான குடியேற்ற அதிகாரி, சற்றே மிரண்டு போனார்! “ஓ! தாங்க்யூ!” குடியேற்ற அதிகாரியிடம் இப்படி ஒரு சொல்லைச் சாமானியத்தில் பெறவே முடியாது. நாம் நன்றி சொன்னால் கூட முகத்தைப் பாறை மாதிரி வைத்துக் கொள்வார்கள்.
சிங்கப்பூரில் முஸ்தபா கடையிலேயே இந்தோனேசிய நோட்டுக்களை மாற்றி வைத்திருந்தேன். அவற்றில் இருந்த எண்கள் மிரட்டலாக இருந்தன. ஏகப்பட்ட சைபர்கள்!
டாக்சிக்கு இதற்கு மேல் கொடுக்காதே என்று அக்கா எச்சரித்திருந்ததால் பேரம் பேசினேன். படியவில்லை என்று நகர்ந்ததும் ‘சரிசரி வாங்க’ என்றார் டாக்சி டிரைவர்! அட! அதே நம்ம ஊர் கலாசாரம்!
சற்றுத் தூரம்தான் போயிருப்போம். வண்டி நத்தையாகி ஊர ஆரம்பித்துவிட்டது.
“பொதுவாக இந்த நேரம் இப்படியாகவா போக்குவரத்து நெரிசல் இருக்கும்?” ஓட்டுநரிடம் கேட்டேன்.
“இல்லை ஏதும் விபத்தாக இருக்கும்” என்றார் சர்வ சாதாரணமாக.
இத்தனைக்கும் மிக அகலமான சாலைகள். நடுவே பாதுகாப்புத் தடுப்புகள். விபத்து நடக்க வாய்ப்புக் குறைவு. ஆனாலும் இவர் ஏதோ டீ சாப்பிடறேன் என்பதுபோல் சர்வ சாதாரணமாகச் சொல்கிறாரே!
நேரமோ வெறிபிடித்த மாதிரி ஓடிக்கொண்டிருக்க, எங்கள் வாகனம் தொடர்ந்து அதே வேகம்!
முக்கால் மணி நேரத்திற்குப் பிறகு எங்கள் வரிசைக்கு எதிர் வரிசையில் ஏதோ விபத்து. இதைப் பார்க்கும் ஆவலில் எங்கள் பகுதி வாகன ஓட்டுநர்கள் நின்று நிறுத்தி அந்த எதிர்த்திசை விபத்தின் கோரத்தை மனத்திரையில் படம் பிடிக்கவே மெதுவாகச் செல்கிறார்கள் என்பதை உணர்ந்தபோது, இதை மனிதாபிமானம் என்பதா, பின்னால் வருகிறவர்களின் கஷ்டங்களை உணராத மனிதர்கள் இவர்கள் என்பதா என்று மனம் கணிதம் போடத்துவங்கியது.
நான் பதிவு செய்திருந்த கெய்சர் ஓட்டலை அடையுமுன் கெய்சர் ஓட்டலின் காலை ஓசி உணவு நேரம் முடிந்துவட்டது. பசியோ காந்தப் பசி. அறைக்குள் நுழைந்து பெட்டியைப் போட்டுவிட்டு வேட்டி சட்டைக்கு மாறி, அழைப்பு மணியை அழுத்தி, ஓட்டல் ஊழியரை வரவழைத்தேன்.
“இந்தியர் சாப்பிடும்படி என்ன இருக்கிறது?”
“சாதம், கிரேவி இருக்கிறது சார்.”
“பலே! வேண்டும்” ஆர்டர் செய்தேன். “வேறு என்ன சார் வேண்டும்?”
“தண்ணீர்” - “அது கழிவறையில் இருக்கிறது சார்.”
“குடிக்கிற தண்ணீரா?”
“ஆமாம் சார்.”
“சரி. எடுத்துக் கொள்கிறேன்” என்று அவரை வெளியேறச் சொல்லும் பாணியில் கதவைச் சாத்த முயன்றபோது
“வேறு என்ன சார் வேண்டும்?”
“ஒன்றும் வேண்டாம்”
“வேறு எதுன்னாலும் சொல்லுங்க சார்”
“நன்றி!”
“வேறு எதுவும்?” என்றார் மறுபடியும்.
“நீ போய்த் தொலை போதும்!” என்று தமிழில் கத்தலாம் போல இருந்தது. அடக்கிக் கொண்டேன்.
“வேறு எதுவும் என்றால்?”
“லேடீஸ் சார்! பியூட்டிஃபுல் இந்தோனேசியன் லேடீஸ்” என்றானே பார்க்கலாம்! எனக்குத் தலை கிறுகிறு என்றது!
(தொடரும்)
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Most Commented Posts































