பட்டர் புரூட் - விஜயகுமாரி பாஸ்கரன்
பழவகைகளில் முதலைப் பேரி என்றும் வெண்ணெய் பழம் என்றும் கூறுவார்கள். மிகச் சத்துள்ள பழங்களில் இது ஒன்று. இந்தப் பழம் பசு வெண்ணெயைப் போல இருக்கும். மணம் இளநீரின் உட்புறம் உள்ள வழுக்கைப் போலவே இருக்கும். இக்கனி தரும் மரம் 18 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது.இதன் மலர்கள் சிறியதாகவும், பச்சை நிறத்தில் நுனியில் கொத்தாகப் பூக்கும். பழம் உருண்டையாகவோ, நீள் வட்ட வடிவிலோ, பேரிக்காய் போன்று இருக்கும். இதன் மேல் தோல் பச்சை நிறத்திலோ கருஞ்சிவப்பு நிறத்திலோ அல்லது ஊதா நிறத்திலோ இருக்கும். தோல் பருமனாகவும், உள்ளே பச்சை, மஞ்சள் நிறத்தில் பழச்சதை இருக்கும். அந்தப் பழம் சதையினுள்ளே ஒரு பெரிய விதை இருக்கும்.
அழுத்தமான பச்சை நிறங்கொண்ட இப்பழங்கள் ஒரே கொட்டையுடன் சதைப்பற்று மிகுந்து காணப்படும். சதைப்பகுதி வெண்ணெய் போன்று வழவழப்பாக ஐஸ்கிரீம் போன்று காணப்படும். எண்ணெய்ச் சத்து மிகுந்த இப்பழத்தின் சதைப் பகுதி வைட்டமின், புரதம் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்தது.
வறண்ட சருமத்தினருக்கு இப்பழம் ஒரு வரப் பிரசாதம். எண்ணெய் சத்து மிகுந்த இப்பழம் அழகு சாதனப் பொருட் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கின்றது.
பழச்சாறுகள்
ஆப்பிள், திராட்சை என அனைத்து வகைப் பழங்களிலிருந்து எடுக்கப்படும் சாறுகள் சர்க்கரை மற்றும் வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்து காணப்படுகின்றன.
இச்சாறுகள் செல்களைப் புதுப்பிக்கவும், லெமனின் எனும் சருமத்திலுள்ள நிறமிகளை ஊக்கப்படுத்தவும், சருமத்திலுள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கவும் என பெரும்பங்கு வகிக்கின்றன.
குறிப்பாகத் திராட்சையில் பலவித திராட்சைகள் இருப்பினும், பொதுவாகத் திராட்சையில் பெருமளவு நீரும், மாவுப் பொருளும் உப்பு நீர் மற்றும் கொழுப்புச் சத்துகளும் உண்டு. உடலுக்கு குளிர்ச்சி தரவல்லது. கோழையை அகற்றும். ஜீரண உறுப்புகளுக்கு வலிமை தருவதுடன், அது பழுதுப்பட்டால் அதனைத் தீர்க்கும் சக்தியும் கொண்டது. இரத்தத்தைச் சுத்தி செய்யும். மேக நோய் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர தோலின் நிறம் பாதுகாப்புக்குரியதாகும்.
அழகுக்கூடும்…
அழகுக் குறிப்புகள்
2009/04/17 அமுக்கிராங்கிழங்கு (அஸ்வகந்தி)
2009/03/13 கடற்பாசி (ஸ்பைருலினா)
2008/12/26 குப்பைமேனி, பொன்னாங்கண்ணி
2008/10/31 வேப்பிலை (மார்கோசா, வேம்பு)
2008/10/17 கற்பூரவல்லி, ஓமவல்லி - விஜயகுமாரி பாஸ்கரன்
2008/09/12 அழகுக் குறிப்புகள் - புவனா
2008/09/05 அஜீரணத்தைத் தவிர்க்கலாமே!
2008/08/29 அலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள்
2008/08/15 புகைப்பிடிப்பவர்களுக்கு
2008/08/08 நடிகர்களின் ஆரோக்கியக் குறிப்புகள்
2008/08/01 நடிகர்களின் ஆரோக்கியக் குறிப்புகள்
2008/06/13 உடற்பயிற்சி கூடங்கள்
2008/06/06 ஆண்களும் அழகு செய்து கொள்ளலாமே!
2008/05/16 தலைமுடிக்குச் சாயமிடுதல் (டை)
2008/05/09 மணப்பெண் ஆவதற்கு முன்
2008/05/02 தலைமுடிப் பாதுகாப்பு
2008/04/25 புவனாவின் ஆரோக்கிய அழகுக் கலை முறைகள் - 4
2008/04/18 புவனாவின் ஆரோக்கிய அழகுக் கலை முறைகள் - 3
2008/04/11 புவனாவின் ஆரோக்கிய அழகுக் கலை முறைகள் - 2
2008/04/04 புவனாவின் ஆரோக்கிய அழகுக் கலை முறைகள் - 1
2008/03/28 அழகுக் குறிப்புகள் - தமிழ்வாணன்
Most Commented Posts































