தைவான் சென்று வந்தேன்
கண்ணடித்தால் தவறில்லை!
இந்தியாவில் எத்தனை அருங்காட்சியகங்கள் இருக்கின்றன, அதில் எவ்வளவு பொருள்கள் இருக்கும்? என்ற தைவானிய அருங்காட்சியக வழிகாட்டி கேட்டதற்கு என்னால் பதில் சொல்ல முடியாமல் போனது குறித்து அவருக்கு சற்று வியப்பு; ஏமாற்றம், ஏன் - அதிர்ச்சி என்றுகூடச் சொல்லலாம்.
இதற்கு மேலும் ஒரு கேள்வி கேட்டார். அது என் தலையில் ஒரு குட்டு வைத்ததைப் போல் இருந்தது.
“நீங்க பத்திரிகையாளர் தானே?”
என்னய்யா இதுகூடத் தெரிஞ்சு வச்சிருக்காமே இருக்கிறே? என்பது இந்தக் கேள்விக்குள் அடைக்கப்பட்ட மறைமுகக் கேள்வி.
‘ஆளை விடுப்பா சாமி! நான் புறப்படறேன்’ என்பதுபோல் நான் ஒரு பார்வை பார்க்க, நானோ பத்திரிகையாளர் என்றால் விரல் நுனியில் தங்கள் நாட்டைப் பற்றிய செய்திகளை வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களே! ‘நாம் ஏன் இதற்கு ஈடு கொடுக்கவில்லை’ என்று சற்றே உடல் குறுகிப்போனேன்.
தைவானை நான் பார்த்தது சில பார்வையற்றவர்கள் யானையைத் தடவிப் பார்த்துவிட்டு யானை என்றால் உலக்கை; யானை என்றால் முறம் என்று சொன்ன பழங்கதை போலத்தான்.
தைவானை விரிவாகச் சுற்றிப் பார்க்க இரயிலில் சீசன் டிக்கெட் போல் தருகிறார்கள். 10 நாள், 20 நாள், 30 நாள் பாஸ் என்று தனித்தனியே டிக்கெட்டுகள் கிடைக்கின்றன.
நாம் வெளிநாட்டவர் என்பதற்கான ஆதாரத்தை மட்டும் காட்டினால் இந்த சீசன் டிக்கெட்டைத் தருவார்கள். எங்கு வேண்டுமானாலும் ஏறி எங்கு வேண்டுமானாலும் இறங்கிக் கொள்ளலாம். இதே போல் தைப்பே நகரத்திற்கும் ஒரு பாஸ் உண்டு.
இதற்கு தைப்பே டூரிஸ்ட் பாஸ்போர்ட் என்று பெயர். ஆனால் அதிகபட்சம் 5 நாள் பாஸ்தான். இந்த டிக்கெட்டை வைத்துக் கொண்டு பஸ், இரயில் என்று எதில் வேண்டுமானாலும் பயணிக்கலாம். இது மட்டுமல்ல, குறிப்பிட்ட ஒட்டல்கள், சூப்பர் மார்க்கெட்டுகளில் இந்த பாஸ்போர்ட்டுக்குச் சிறப்புச் தள்ளுபடியும் உண்டு.
அடடே, இது நமக்கு ஆரம்பத்திலேயே தெரியாமல் போய்விட்டதே என்று நான் வருந்தினாலும் தைவான் போகிறவர்களுக்குப் பயன் உள்ள செய்தியாக இருக்கும் என்றே இதைக் குறிப்பிடுகிறேன்.
தைப்பேயில் என்னைக் கவர்ந்த அம்சம் சைக்கிளோட்டிகளுக்கு இந்த நகரில் தரப்படும் முக்கியத்துவம்!
என்ன பெரிய முக்கியத்துவம் போங்க என்கிறீர்களா?
சைக்கிளோட்டிகளுக்கு இரயிலில் சைக்கிளோடு ஏறிக் கொள்ளக் கடைசிப் பெட்டியை ஒதுக்கியிருக்கிறார்கள்.
நகரம் முழுக்க சைக்கிளோட்டிகளுக்குத் தனிப்பாதைகள் அடா! அடா! என்ன சொகுசாய் தைவானியர்கள் மனம் இலயித்து சைக்கிள் ஓட்டுகிறார்கள் தெரியுமா? தண்ணீர் லாரிகளால் ஏற்றிக் கொல்லப்படும் அச்சம் இல்லை.
இது மட்டுமா? தைப்பே நகரில் ஓடும் நான்கு நதிகளின் கரை ஓரங்களிலும் சைக்கிள்களுக்கென அழஅழகான தனிப்பாதைகள், ஆற்றின் அழகை இரசித்தபடி ஓட்டினால் எத்தனை கி.மீ. ஓட்டினாலும் அசதியே தெரியாது.
சைக்கிளோட்டிகளுக்கு ஏன் இப்படி இவ்வளவு முக்கியத்துவம் என்று விசாரித்தேன். வியப்பான பதில் காத்திருந்தது.
எரிபொருள் உபயோகத்தைக் குறைக்கவும் காற்று மாசுபடுவதைக் கட்டுபடுத்தவும், தைவானிய மக்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டும் இந்த ஊக்கமாம்.
சைக்கிள் வாடகைக் கடைகள் அங்கங்கே தென்படுகின்றன. பல ஆசிய நாடுகளில் இல்லாத ஒன்று இந்த சைக்கிள் வாடகைக் கடை.
தைவானை விட்டுப் புறப்படும் நாள் வந்தது. சுரேஷ்குமாரிடம் தொலைபேசியில்தான் சொல்லிக்கொள்ள முடிந்தது.
டாக்சி செலவு பிய்த்து எடுத்துவிடும் என்பதால் பேருந்தையே தேர்ந்தெடுத்தேன்.
ஒய்.எம்.சி.ஏ. ஓட்டலைக் காலி செய்து இரண்டு பெரிய பெட்டிகளையும் சக்கரம் இருந்ததால் இழுத்தபடி வெகு தொலை நடந்து பேருந்து நிலையம் வந்தேன். என் நேரக் கணிப்புப் பொய்க்கும்படி சாலைப் போக்குவரத்து நெரிசல் சதி செய்தது.
எங்கள் பேருந்து அங்குல அங்குலமாய் நகர்ந்தது. சே! இன்னும் ஒரு பேருந்து முன்னதாகப் பிடித்திருக்க வேண்டும். ஒரே டென்ஷன்.
நேரம் ஆக ஆக, விமானத்தைக் கோட்டைவிட்டால் என்ன செய்யலாம் என்று சிந்திக்கிற நிலைமைய உருவாக்கிவிட்டது.
வெளிநாடுகளில் விமானத்திற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என்பது விதி. இன்னும் ஒரு மணி நேரமே இருந்தது.
இதற்குள் எனக்கான விமானத்திற்கு அடுத்த விமானப் பயணிகள் கியூ வரிசைகளை நிறைத்து விட்டார்கள். நான் செல்லவேண்டிய சிங்கப்பூர் விமானத்திற்கு இன்னும் ஒரு மணி நேரமே உள்ளது என்று கியூவைத் தாண்டிப் போய் பரிதாபமாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னேன்.
‘ஓ! வாருங்கள் உங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு’ என்று கூடுதலாக இருந்த ஒரு பெண்மணியை அழைத்து இவருக்கு உதவு என்கிற பாணியில் சொன்னார் மேலதிகாரி போன்ற ஒருவர்.
முகம் சுளிக்காமல் எனக்கு உதவிய அந்தப் பெண்மணி ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தார் “உங்கள் பெட்டி 22 கிலோ உள்ளது. 20தான் அனுமதிக்க முடியும். 2 கிலோவுக்குப் பணம் கட்டுங்கள்” என்றார்.
“எடையைக் குறைத்துவிடுகிறேனே!”
“அதற்கு நேரமில்லை”
“இரு நிமிடங்கள் கொடுங்கள்”
“சரி சரி”
1800 ரூபாயை கட்டுவானேன்? மனமில்லாமல் சில நல்ல பொருள்களை அவள் கண்ணெதிரே குப்பைக் கூடையில் போட்டேன்.
“கை லக்கேஜில் சேர்த்து விடாதீர்கள்” என்று கண்ணடித்தாள், அந்தப் பெண்மணி.
“இல்லையில்லை. செய்யமாட்டேன்” என்று பதில் சொன்னேன். கண்ணடிப்பது இந்த நாட்டில் தவறில்லை; வேறு பொருளில்லை போலிருக்கிறது.
ஜெட் ஸ்டார் விமான நிறுவனத்தினர் படுத்தினார்கள். உணவு, தண்ணீர் எதுவும் நாம் எடுத்துவரக் கூடாது. இவர்களும் தாங்களாகத் தரமாட்டார்கள். விமானத்திற்குள் விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். ஆனால் செம விலை. ஆபத்திற்குப் பாவமில்லை. வாங்கிவிட்டேன், விழுங்கினேன். சுவைத்து எங்கே சாப்பிடுவது?
தைவானில் நான் எதிர்பார்த்துப் போனது வேறு. ஆனால் இந்தக் குட்டி நாடு இந்தப் போடு போடுகிறதே! என்ன உழைப்பு! என்ன கட்டுப்பாடு! எப்பேர்ப்பட்ட ஆட்சியாளர்கள்! என்ன அருமையான மக்கள்!
இவற்றையெல்லாம் நம் மக்களுக்குள் கொண்டு வந்து இறக்குமதி செய்துவிட்டால்?
ஊம்! பெரிய பெருமூச்சு ஒன்றை விட்டு என் ஏக்கத்தைக் காற்றில் கரைத்தேன்.
(முற்றியது)
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…