» World’s youngest smoker: Video .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 31 Jul 2009

World’s youngest smoker: Video

வயசோ இரண்டு, புகைப்பதோ பத்து சிகரேட்!: விடியோ

லியாங்லியாங்கிற்கு வயசு இரண்டுதான். அவன் தினசரி பிடிப்பதோ பத்து சிகரேட். அவன் தன்னுடைய பிஞ்சு விரல்களில் சிகரெட்டை பற்றவைத்து புகைப்பதைப் பார்த்தால், ஏதோ 40 வயது ஆள் பிடிப்பதைப் போல இருக்கிறது.

சீனாவில் உள்ள டியான்ஜின் நகரைச் சேர்ந்த யோ மிங்கின் மகன்தான் இந்த லியாங்லியாங். இதில் என்ன கூத்து என்றால், மகனுக்குப் புகைக்க கற்றுக் கொடுத்ததே இந்த அருமையான தந்தைதான். ஏனாம்?

“அவன் பிறந்து ஒன்றரை ஆண்டுகளில் அவனுக்கு, ஹெர்னியா பிரச்னை வந்துவிட்டது. வலியால் துடிப்பான். வயது காரணமாக அறுவை சிகிச்சையும் செய்ய முடியவில்லை. அவனுடைய வலியைப் போக்கவும், மனதை திசைத்திருப்பவும் புகைக்க கற்றுக்கொடுத்தேன். வலியை மறந்து, அவன் சிரித்தபடி இருந்தாலே எனக்குப் போதும்” என்றுசப்பைக்கட்டு கட்டுகிறார் யோ மிங்.

இப்போதே தினசரி ஒரு பாக்கெட் அளவுக்கு சிகரேட்டுகளை ஊதித் தள்ளுகிறான் இந்தப் பொடியன். லியாங்லியாங்கின் புகைப்பழக்கம் உள்ளூரில் அவனை பிரபலமாக்கியுள்ளதுடன், இரண்டு பெருமைகளையும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. ஒன்று, உலகிலேயே மிகச்சிறிய வயதில் புகைப்பவன் என்ற பட்டம். இரண்டாவது, புகை பிடிக்க உதவும் லைட்டரை சிறப்பாகப் பயன்படுத்துபவன் என்ற பெயர்.

சிறுவயதில் ஏற்பட்டு விட்ட புகைபழக்கத்தால் லியாங்லியாங்கின் எதிர்காலம் எந்தளவுக்கு பாதிக்கப்படும் என்பதை யாராலும் அனுமாகிக்க முடியவில்லை.

ஆனால், அவன் புகைபிடிக்கும் அழகைக் காண விரும்பும் ரசிகர்கள் கூட்டம் பெருகிக் கொண்டேயிருக்கிறது.

விடியோ:

Most Commented Posts


Leave a Reply