» Disease relief plants - Akbar Kausar .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 31 Jul 2009

Disease relief plants - Akbar Kausar

akbar-kausar.jpgமணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள்

- வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

ஆனைப் புளிய மரம் (ADANSONIA DIGITATA)

ஆனைப் புளியமரத்துக்கு வேறு பெயர்களாக சீமைப்புளி, பப்பாளிப்புளி, பூரிமரம் என பல வகைகளில் அழைக்கப்படுகிறது. இம்மரம் ‘அடன் சோனியா டிஜிடேடா’ எனும் அறிவியல் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. ‘மால்வாசியே’ எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

இம்மரம் ஆப்பிரிக்கா நாட்டினைச் சேர்ந்தது. தற்போது இந்தியாவிலும் பயிராகிறது. இதன் புளி அழுக்கு படிந்த நிறமாயிருக்கும். இலங்கை போன்ற பகுதிகளில் 60 அல்லது 70 அடி உயரமாக வளரும் தன்மை கொண்டவை.

இம்மரத்தின் பழம் மீது உள்ள ஓடு, சன்னியாசிகளின் கையில் உள்ள ஓடு போல இருக்கும்.

இம்மரத்தின் கீழ்தான் முற்காலத்தில் ‘கோராக்’ என்று அழைக்கப்பட்ட ஒரு சன்னியாசி தனது சீடர்களுக்கு அருளுரை வழங்கியுள்ளார் என்றும் அவர் பெயரில் ‘கோராக்’ என்ற இன்னொரு பெயரும் இம்மரத்துக்கு வழங்கப்படுகிறது.

இதன் இலை, பட்டை, பழச்சதை, விதை என அனைத்தும் மருத்துவப் பயன்பாட்டுக்கு உவுகின்றன. இனிப்பும், புளிப்பும் கலந்த சுவையுடனும், வெப்பத்தன்மையும் கொண்டுள்ளது.

இலை : இலைச்சாற்றில் சுக்கு சேர்த்து அரைத்து கீல்வாயு, பறங்கிப் புண் முதலியவற்றிற்குப் பூசலாம்.

* இலையைப் அவித்து கை, கால், வீக்கம், வலி முதலியவைகளுக்குச் சூட்டுடன் ஒற்றடம் தந்து அதைக் கட்டியும் வரலாம்.

* இலையை உலர்த்திப் பொடி செய்து உள்ளுக்குக் கொடுத்து வந்தால் அதிக வியர்வை கொட்டுவது குணமாகும்.

பட்டை : பட்டையை இடித்து எடுத்து, தண்ணீர் சேர்த்து முறைப்படி குடிநீர் செய்து 50 அல்லது 100 மி.லி. அளவு கொடுத்து வந்தால் முறைக் காய்ச்சல் நோய் நீங்கும்.

இப்பட்டையின் சத்தை கொய்னாவுக்குப் பதிலாகப் பயன்படுத்துகின்றனர்.

பழச்சதை : இப்புளி சீதபேதியைப் போக்குகிறது.

இத்துடன் அத்திப்பழம் சேர்த்து, மணப்பாகு செய்து கொடுத்து வந்தால் உடல் உற்சாகம் பெறும். உடல் வெப்பம் தணிக்கும். காயச்சலால் உண்டாகும் தண்ணீர்த் தாகம் குறையும். இளைப்பு நோயால் இரவில் உண்டாகும் வியர்வையைத் தடுக்கும். வாய்க்கசப்பு, புளிப்பு, ஏப்பம் போகும்.

விதைப்பருப்பு : இதன் பருப்பை அரைத்து மோருடன் கலந்து குடித்து வந்தால், சீதபேதி குணமாகிறது.

அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்

2009/07/24 ஆலயங்களில் கற்பூர தீபம் ஏற்றப் பயன்படும் கற்பூர மரம்

2009/07/17 இந்து, ஜைன் புத்த மதங்களின் புனித மரம் ஆல மரம்

2009/07/10 அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம் ஆடாதொடை

2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்

2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு

2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி

2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி

2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்

2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்

2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்

2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்

2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்

2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்

2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்

2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி

2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்

2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்

2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி

Most Commented Posts


Leave a Reply