» Travel around Taiwan .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 24 Jul 2009

Travel around Taiwan

sun-yat-sen-mausoleum.jpgதைவான் சென்று வந்தேன்

ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

தைவானிய அருங்காட்சியகப் பொருள்களை இதற்கு முன்பு நகர்த்தியமைக்குக் காரணம் படையெடுப்புகளும், சமூகப் புரட்சிகளும். ஆனால் 1963இல் லண்டனில் உலகக் கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டபோது தைவானியர்களுக்கும் சீனர்களுக்கும் தங்கள் கலாசாரத்திற்கும் பெருமைகளை பாரம்பரியச் சிறப்புகளை உலகிற்கு எடுத்துச் செ(சொ)ல்ல இது ஒரு அருமையான களம் என்று தோன்றியது.

எனவே அரிய கலைப்பொருகளையெல்லாம் சேதமாகும், திருடுபோகும் என்றெல்லாம் கவலைப்படாமல் லண்டனுக்கு நகர்த்தி கண்காட்சியைப் பார்த்தவர்களையெல்லாம் அசத்திவிட்டார்களாம் அசத்தி.

இப்படி 1000 கலைப்பொருள்களை மிகப்பாதுகாப்பாகவும் ரொம்பச் சிரமப்பட்டும் நகர்த்தி, பிறகு பத்திரமாக இங்கேயே கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள். கலைப் பொருள்கள் உடையவில்லை; சேதமடையவில்லை என்பவையெல்லாம் பெரிய வார்த்தைகள். ஒரு சிறு கீறல்கூட விழவில்லை என்று சொல்லுமளவு கண்ணுங் கருத்துமாகப் பாதுகாத்துக் கொண்டு வந்துவிட்டார்கள்.

இது பற்றிய அக்கறை அடிமட்ட வேலையாள்கள் வரை உணர்த்தப்பட்டதாம்.

இதையெல்லாம் கேள்விப்பட்டபோதும், விசாரித்து அறிந்தபோதும், பழமைக்கும் பழம் பொருள்களுக்கும் நாமும் ஏன் இப்படிப்பட்ட முக்கியத்துவம் தரக்கூடாது என்கிற உணர்வே மிகுந்து நின்றது.

கலைச் சின்னங்களில் தங்களது பெயர்களையும் தாங்கள் வந்து சென்ற தேதிகளையும் குறித்து அந்த இடங்களை அசிங்கமாக்குகிறவர்கள் மனம் மாற என்ன செய்யலாம் என்று கூட எனக்குச் சிந்தனை தோன்றலாயிற்று.

இது என்ன அறியாமையா, அல்லது ஆணவமா? இதில் என்ன பெருமிதம் வேண்டிக் கிடக்கிறது? இதன் தூய்மையும் அழகும்தானே இந்த மண்ணுக்குப் பெருமை என்பது ஏன் இவர்களுக்குப் புரியமாட்டேன் என்கிறது? பேனா மை, காகிதம், தேநீர், காகிதத்தால் ஆன பணம் என்று மனித இனத்திற்குப் பல அரிய கண்டுபிடிப்புகளைத் தந்தவர்கள் சீனர்கள். சீனர்களின் அருமை பெருமைகளை அறிந்துகொள்ள விரும்புபவர்கள் வேறு எங்கும் போகவேண்டாம். தைவானின் தேசிய அருங்காட்சியகத்திற்கு வந்தாலே போதும்.

இந்த அருங்காட்சியத்திற்கு உள்ள தனித்தன்மை உலகில் வேறு எந்த அருங்காட்சியகத்திற்கும் இராது என்று நம்புகிறேன். 365 நாள்களும் இதை மூடாமல் திறந்து வைத்திருக்கிறார்கள் என்றால் இதற்குத் தைவானியர்கள் தரும் முக்கியத்துவம் புரிகிறது அல்லவா? உலகில் வேறு எங்காவது இப்படி உண்டா வாசகர்களே! அதிகார பூர்வமாகவும், ஆதாரபூர்வமாகவும் இதுபற்றி எனக்கு அறியத் தாருங்கள்.

சற்று நேரம் வலம் வந்த பிறகுதான் இங்கு உள்ள ஒரு செளகரியம் புரிகிறது. இதுவும் உலகில் எங்குமில்லாத வசதி என்று உறுதியாகச் சொல்வேன்.

ஆம். இங்கு தைவான், சீனம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பேசும் சுற்றுலா வழி காட்டிகள் (Tourist Guide) உண்டாம். அதுவும் எப்படி என்கிறீர்களா? இலவசமாக! நீங்களாகப் பிரியப்பட்டுக் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்களாம். அடடே! இது முன்பே தெரியாமல் போயிற்றே! புறப்படும் நேரம்தானா இதுபற்றி எனக்குத் தெரிய வரவேண்டும்? இலவசம்! என்றாலும் கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துப்போட்டுவிட முடியாது. ‘வழிகாட்டி வேண்டும்’ என்று இங்குள்ள ஓர் ஊழியரிடம் சொல்ல வேண்டுமாம். அவர் உடனே சற்று ஓரமாக நம்மை நிற்கச் சொல்லுகிறார். ‘ஏன்யா நிற்கணுமா? அனுப்புய்யா வழிகாட்டியை உடனே’ என்று நமக்குப் பல்லை நறநறக்கத் தோன்றுகிறது.

இப்படிக் கேட்டுக் கொள்ளும் சிலர் கும்பலாகச் சேர்த்த பிறகே வழிகாட்டி அங்கு வந்து தோன்றுவாராம். பிறகு இந்தக் கும்பலை அழைத்துக் கொண்டு வலம் வருவாராம்.

என்னைப் போல் ‘Free tourist guide available here’ என்கிற அறிவிப்புப் பலகையைப் பலரும் பாராமல் சிறு சிறு குழுவாக நகர்ந்துகொண்டே இருக்கிறார்கள்.

ஆள் சேருமுன் எனக்குப் பொறுமையே போய்விட்டது. நடந்து நடந்து வலம் வந்ததில் கால்களைக் கழற்றி வைத்து விடலாம் என்கிற அளவுக்கு அவை கெஞ்சின.

இன்னும் சிறிது நேரம் காத்திருந்து கூட்டம் சேருகிறதா எனப் பார்ப்போம். ஆள் சேராவிட்டால் வீட்டிற்கு நடையைக் கட்டவேண்டியதுதான் என்று முடிவு செய்தேன்.

சற்றுத் தள்ளி ஓர் அறையில் சிலர் ஆழமான சீருடையோடு காணப்பட அட! இந்தச் சீருடையை எங்கோ இதற்கு முன்பு பார்திருக்கிறோமே! எங்கு?

ஊம்! நினைவிற்கு வந்துவிட்டது. இந்தக் கண்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு புரியாத மொழியில் ஒரு குழுவாய் வந்திருந்த சீனர்களுக்கு, இந்தக் கண்காட்சியின் அருமை பெருமைகளைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாரே ஒருவர், அவர் உடைதான் இந்த உடை. ஆளே கூட அவரேதானே? கதவுக்கு வெளியே நின்று அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்த சூழலைக் கலைக்கும் விதமாய் ‘குட் ஈவினிங்’ என்றேன்.

“யெஸ்” என ஒருவர் மட்டும் வெளியே வர,

“நான் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன். உங்களது சேவை எனக்கு எப்போது கிடைக்கும்?” என்றேன்.

“அந்த அலுவலகத்தில் சொல்லிவிட்டீர்களா?”

“ஓ!”

“இன்னும் சிலர் சேர்ந்த பிறகு எங்களைக் கூப்பிடுவார்கள், வருவோம்” என்று சொன்னவர் போய்யா அந்தண்டை!” என்பது போல் என்னை நடத்தாமல், மேலும் என்ன வேணும்னாலும் கேளு என்பதுபோல் நின்று கொண்டே இருந்தார்.

கேட்ட கேளவிக்குப் பதில் என் கடமை முடிந்தது என்று நகர்ந்துவிடாமல் நாமாக நகரும் வரை அவர் காத்திருந்தது நல்ல பண்பு என்று தோன்றியது.

மெல்லப் பேச்சுக் கொடுத்தேன். “எவ்வளவு பேர் சேர்ந்தால் உங்களுக்கு அழைப்பு வரும்?”

“அப்படி ஒன்றும் கட்டாயமில்லை. நேரம் அதிகமாகி ஓரிருவர் காத்திருந்தால்கூட வந்துவிடுவோம். ஆனால் பொதுவாக 10 பேர் இருந்தால் சொல்கிற எங்களுக்கும் சுவையாக இருக்கும்.”

“உண்மைதான். ஆனால் பலரும் இந்த இலவச டூரிஸ்ட் போர்டைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அதனாலேயே கூட்டம் சேரவில்லை. போர்டை இன்னும் தெளிவாக பளிச் என்று தெரியும்படியாக வைக்க வேண்டும்.”

“நல்ல யோசனை” என்றவர் ஏதோ இதுவரை யாரும் கண்டுபிடித்துச் சொல்லாத விஞ்ஞானியைப் பார்ப்பதுபோல் ஒன்றிப் பார்த்தார்.

அவரது சீருடை மிக அழகாக கச்சிதமான இருந்தது. காலில் அழகான ஷூக்கள். அனைவரும் ஒரே மாதிரி ‘சிக்’ என்று இருந்தார்கள். சீருடை அணிவதில்தான் எவ்வளவு நேர்த்தி. தோள்பட்டையில் உள்ள பட்டை கழன்று பட்டன் இல்லாத சாயம்போன சட்டையைப் போட்டு ஷூவுக்குப் பதிலாக செருப்பை மாட்டிக் கொண்டு சரியா தப்பா என்று தொள தொள உடைகளை மாட்டிக்கொண்டு ஊகும்! இப்படி எவருமே இல்லை!

“இந்தியாவிலிருந்து வருவதாகச் சொன்னீர்கள்! அங்கு எவ்வளவு அருங்காட்சியங்கள் இருக்கின்றன? அங்கு மொத்தம் எவ்வளவு பொருள்கள் இருக்கும்?” என்று அந்த வழிகாட்டி கேட்க, நான் திருத்திரு என்று விழிக்க ஆரம்பித்தேன். சற்று வெட்கமாகவும் இருந்தது.

(தொடரும்)

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

Most Commented Posts


Leave a Reply