» Beer in blue colour? .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Monday, 20 Jul 2009

Beer in blue colour?

பீர் தெரியும் பில்க் தெரியுமா?

bluebeer.jpg

ப்பானியர்கள் எதில்தான் சாதிக்காமல் இருப்பார்கள் என்றே தெரியவில்லை. பாட்டில் எந்த நிறமாக இருந்தாலும் அதிலுள்ள பீர் ஒரே நிறத்தில தான் இருக்கும். ஓயின் ஷாப் பக்கம் ஒதுங்காதவர்களுக்குக் கூட இது தெரியும். ஆனால், ஜப்பானியர்கள் அதிலும் கலக்கி விட்டார்கள். நீல நிறத்தில் பீர் தயாரித்துவிட்டார்கள். அதுமட்டுமா, பெண்கள் விரும்பி அருந்தும் வகையில் பீரையும் பாலையும் கலந்து ‘பில்க்’ தயாரித்துவிட்டனர். பீரையும் மில்க்கையும் சேர்த்து ‘பில்க்’ ஆக்கிவிட்டார்கள்.

இந்த இரண்டும் இப்போது அங்கே சக்கைப்போடு போடுகிறதாம்.

ஜப்பானில் வட மூலையில் இருக்கிறது ஹொக்கைடோ தீவு. இதை பூர்வீகமாகக் கொண்டது பிரபல சரக்கு தயாரிப்பு நிறுவனமான அபாசிரி பிரேவரி. விதவிதமாக பீர் தயாரித்து அசத்துவதில் கில்லாடிகளான இவர்கள் உலகில் முதல்முதலாக கடல் தாவரம் ஒன்றின் விதையில் இருந்து பீர் தயாரித்ததுடன், அதற்கு நீல நிறத்தையும் கொடுத்திருக்கிறார்கள்.

அதேபோல் பெண்களைக் கவரும் வகையில் ‘பில்க்’கையும் கொண்டு வந்து அசத்தியிருக்கிறார்கள்.
பீரில் உள்ள ஈஸ்ட் மற்றும் உட்பொருட்களை தேவையான அளவில் பாலுடன், குறிப்பிட்ட முறையில் கலந்து, வழக்கமான குளிர்நிலையை விட சற்றே குறைவான குளிர்நிலையில் வைத்து தருகிறார்களாம். பெண்கள் கூட்டம் சப்பு கொட்ட குவிகிறதாம்.

நாம் சாதிக்க ஒண்ணக்கூட விட்டு வைக்க மாட்டாங்க போலிருக்கே!

Related Posts Title


Leave a Reply