Tamilvanan » Blog Archive » AR Rahman is in, Gowtham Menon says

AR Rahman is in, Gowtham Menon says

ஏ.ஆர். ரகுமானுடன் பிரச்னை இல்லை

ன்கிறார் இயக்குநர் கெளதம் மேனன். இவர் இப்போது இயக்கி வரும் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் விலகிவிட்டதாக செய்திகள் வந்தன. இதற்கு சம்பளப் பிரச்னைதான் காரணம் என்றும் கூறப்பட்டது.

அந்தச் செய்தியை மறுத்துள்ள கெளதம் மேனன் தன்னுடைய விளக்கத்தில்,

”ரகுமான் குறித்த எல்லாச் செய்தியும் பொய். அவரே எனக்கு போன் செய்து, ‘ஏன் இப்படியெல்லாம் செய்திகள் வருகின்றன’ என வருத்தப்பட்டார். அவர் பெரிய டெக்னீசியன். சம்பளத்திற்காக பிரச்னை செய்பவர் அல்ல. இந்தச் செய்தி வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இப்படத்திற்காக அவர் 5 பாடல்களை ஏற்கனவே கொடுத்துவிட்டார். அவை அனைத்துமே சர்வதேச தரத்தில் உள்ளன. இதில், மூன்று பாடல்களின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்த இருபாடல்களின் படப்பிடிப்பு முடிந்ததும் படத்தின் பின்னணி இசையை  ஏ.ஆர். ரகுமான்அமைத்துத் தருவார்.  தீபாவளிக்கு ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ வரும்” என்கிறார் கெளதம் மேனன்.

Related Posts Title

Tags: , , , , , ,

Leave a Reply