Monday, 13 Jul 2009

Blue Roses sale in Japan

நீல நிற ரோஜா வந்தாச்சு!
blue-rose.jpg
பூக்களின் ராணியான ரோஜாவைப் பற்றி பேசினால் எந்தெந்த நிறமெல்லாம் உங்கள் நினைவுக்கு வரும்? சிவப்பு, வெள்ளை, மஞ்சள், பிங்க் போன்ற நிறங்கள்தான் சட்டெனத் தோன்றும். நீல நிற ரோஜா பற்றி நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா? அந்த நிறத்தில் ரோஜாவை நீங்கள் பார்த்திருகக்கவும் வாய்ப்பில்லை. காரணம் ரோஜாக்களின் இதழ்களில் நீல நிறத்தை தக்கவைத்துக்கொள்ளும் தன்மை இல்லை.

நீல நிற ரோஜா வெறும் கனவு என்றே இதுவரை கருதப்பட்டு வந்தது. இப்போது அதை நிஜமாக்கி விட்டனர் ஜப்பான் விஞ்ஞானிகள்.

நீல நிற ரோஜாக்களை உருவாக்கும் முயற்சிகள் உலக முழுக்க நடந்துவந்தன. ஜப்பானைச் சேர்ந்த சன்டோரி கார்ப்பரேஷன் மற்றும் ஆஸ்திரேலிய பயோ - வென்சர் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு நீல நிற ரோஜாவை உருவாக்கிவிட்டது.

14 வருட தொடர் ஆராய்ச்சியில், புதிய மரமணு வித்தைகள் பலவற்றை பிரயோகித்துப் பார்த்து கடைசியில் நீல நிற ரோஜாவை உருவாக்கி விட்டனர் ஆராய்ச்சியாளர்கள். பான்சிஸ் மலரில் உள்ள நீல நிறத்திற்கான மரபணுவை ரோஜாவில் முறைப்படி கலந்துப் பார்த்ததில் நீல நிற ரோஜா மலர்ந்தே விட்டது.

ஆண்டுக்கு லட்சக்கணக்கான நீல நிற ரோஜாக்களை உற்பத்தி செய்து, அவற்றை விற்பனைக்கு விட சன்டோரி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் விலையும், வர்த்தகப் பெயரும் இன்னும் முடிவாகவில்லை. ‘சாதாரண ரோஜாவை விட இது விலை அதிகமாகவே இருக்கும்’ என்கிறார் சன்டோரி நிறுவன செய்தியாளர் கசுமாசா நிசிசாகி(உங்கள் பெயர்போல கச்சாமுச்சான்னு வச்சுருராதீங்க நண்பரே!).

இந்த நீலநிற ரோஜா முதலில் ஜப்பானில் விற்பனைக்கு வர உள்ளது. அது உலகம் முழுக்க உள்ள பெண்களின் கூந்தலை அலங்கரிக்க கொஞ்சகாலம் பிடிக்கும்.

Related Posts Title


One Response to “Blue Roses sale in Japan”

  1. emgeaar

    very good scientist.
    pl try to find sweet bitterguard.
    good for all

Leave a Reply