» Distance Healing .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 10 Jul 2009

Distance Healing

distance-healing.jpgவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்

ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை – கே.எஸ்.சுப்ரமணி

தூரத்தில் இருந்தபடியே சிகிச்சை அளிக்கும் முறை () இப்போது பிரபலமாகி வருகிறது. காரணம், மிகவும் பயனுள்ள நலம் பயக்கிற உறுதி செய்யப்பட்ட ஆற்றல் வாய்ந்த சிகிச்சை முறையாக இந்தச் சிகிச்சை இருந்து வருகிறது.

இந்தச் சிகிச்சை முறையில் பிரார்த்தனை, அக்குபிரஷர், தொடும் மருத்துவம் எனப் பலவும் இடம்பெற்றுள்ளன. இந்த மூன்றினுள் ஏதேனும் ஒன்றை விடாது பின்பற்றி வந்தால் விரைந்து குணம் தெரியும்.

டாக்டர் ஜான் ஏ. ஆஸ்டின் என்ற அமெரிக்க டாக்டர். யூனிவர்சிட்டி ஆப் மேரிலாண்ட் ஸ்கூல் ஆப் மெடிசனில் உதவி பேராசிரியர்.இவர் இந்த முறைகளை ஆய்வு செய்து, ‘பொதுவான உண்மை ஒன்று உள்ளது. அது, தூரத்து சிகிச்சை அனைத்தையும் குணப்படுத்தும்’ என்று கண்டுபிடித்துள்ளார். இது பற்றிப் புத்தகமும் எழுதியுள்ளார். தூரத்து சிகிச்சை என்பது அது பிரபஞ்ச சக்திதான் என்கிறார்.

தினமும் குறிப்பிட்ட நேரத்தில் நோய் குணமாக நோயாளி பிரார்த்தனை செய்வது, ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் அவரது நண்பர்கள், உறவினர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தும் பிரார்த்தனை செய்வது ஆகியவை மிகவும் நலம் பயக்குமாம். காலை 7 மணிக்கு நமக்காக வேறு ஊர்களில், நாடுகளில் உள்ளவர்கள் பிரார்த்தனை செய்யும்போது, நாம் அந்த நேரத்தில் ஓய்வான மனநிலையில் படுக்கையில் படுத்திருக்கலாம் அல்லது உட்கார்ந்திருக்கலாம். பிரார்த்தனை நேரம் பத்து முதல் இருபது நிமிடங்கள் வரை இருக்க வேண்டும். பிரார்த்தனையைப் பெறும் நோயாளி அந்த நேரத்தில் அமைதியாக இருப்பதே மிகவும் முக்கியம்.

ஆங்கில மருத்துவமோ அல்லது வேறு மருத்துவமோ செய்து கொள்பவர்கள் இந்தத் தூரத்துச் சிகிச்சையை மேற்கொள்ளும்போது தூரத்து சிகிச்சை மற்றும் மருந்துகள் இணைவதால் குணமளிப்பது நிறைவேறி விடுகிறது.

ஆங்கில மருத்துவர்கள், ‘அறிவியல் ரீதியாக நிரூபிக்காமல், சக்திமிக்க மருத்துவம் இது என்று நீங்கள் சொல்வதை எங்களால் ஏற்றக் கொள்ள முடியாது’ என்று டாக்டர் ஆண்டினை அவமதித்து எதிர்ப்பும் தெரிவித்தார்கள்.

ஆனால், அமெரிக்க மக்கள் தொகையில் 4% பேர் இந்த தூரத்துச் சிகிச்சையை செய்து நன்கு குணம் பெற்றுள்ளனர். இப்போது இந்த சதவிகிதம் உயர்ந்துவிட்டது.

2000 ஆம் ஆண்டு 2,774 நோயாளிகளை 23 விதமான ஆய்வுகள் மூலம் மீண்டும் ஆராய்ந்தபோது பிரார்த்தனை, தூரத்தில் இருந்து குணப்படுத்துவது முதலியன அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகபட்ச பலன்களைத் தந்துள்ளது. டாக்டர்களின் எதிர்ப்பால் ஆழ்ந்து செல்லாமல் ஆய்வு செய்தபோதே இந்தச் சிகிச்சையின் நன்மைகள் பிரமிக்கத்தக்கதாக இருப்பது ஆச்சரியம்தான் என்கிறார் டாக்டர் ஆஸ்டின். உடல் நோய்களுடன் மனக்கவலைகளும் உறுதியாய் குணமாகிவிடுகின்றனவாம், இந்த தூரத்துச் சிகிச்சையில்!

அமெரிக்காவில் இருந்துகொண்டு காரைக்குடியில் உள்ள உங்கள் தாயார் குணமாக பத்து நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் மூளை அனுப்பும் அதிர்வுகள் விண்வெளியில் பயணிக்கும். தாயாருடைய உடல் நம்முடைய அதிர்வுகளைக் கிரகிக்கும். முடிவில் அது தாயாரின் உடல் உள்ளே வரை உடனே சென்றடைந்து விடும். நம்முடைய அதிர்வுகள் எங்கும் நிறைந்துள்ள உயிர்ச்சக்தியை () அனுப்புவதால், அது நோயாளி உடலில் இறங்கி குணப்படுத்தி விடுகிறது. அமெரிக்காவில் பிரார்த்தனை செய்பவர், தன் பிரார்த்தனை தன் தாயாரிடம் சென்றடைவதை கற்பனையில் காட்சியாகப் பார்ப்பது தான் தூரத்து சிகிச்சையில் மிகவும் முக்கியம். ‘ரெய்கி’ மருத்துவர்கள் தூரத்துச் சிகிச்சை முறையில் தங்கள் அருகில் இல்லாத நோயாளிகளையும் எளிதாகக் குணப்படுத்திவிடுவது இதனால் தான்.

தூரத்துச் சிகிச்சையில் மற்றவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யும் போது, பிரார்த்தனை செய்பவரின் உடலில் இண்டர்லெகின்ஸ் என்ற பொருள் சுரந்து, இரத்தத்தில் கலப்பதால் உடலில் உள்ள நோய்களும், தொற்றுநோய்க் கிருமிகளும் கட்டுப்பட்டு ஆரோக்கியத்தை திரும்பப் பெற்றுவிடுவார்.

கூட்டுப் பிரார்த்தனை, கூட்டுத் தியானம் முதலியன நடந்தால், நீங்கள் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். நீங்கள் பரபரப்பின்றி அரைமணி நேரம் அமைதியாக இருப்பதால் நீங்களும் உங்களைச் சுற்றியுள்ளவர்களும் நன்மை அடையும்விதத்தில் நல்ல சூழ்நிலைகள் உண்டாகும். அமெரிக்க டாக்டருக்கு புரிந்த இந்த உண்மைகளை நாமும் பின்பற்றுவோம். நலம் பெறுவோம்.

முற்றும்.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

Most Commented Posts


Leave a Reply