Saturday, 4 Jul 2009

Travel around Taiwan

taiwan.jpgதைவான் சென்று வந்தேன்!

தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

பழைய தமிழ்ப்படம் ஒன்றில் ஒரு பாடல் வரும்.

“அவளா சொன்னாள்?
இருக்காது அப்படி எதுவும் நடக்காது!
நடக்கவும் கூடாது!
நம்பமுடியவில்லை இல்லை இல்லை!”

என்பன அந்தப் பாடலின் ஆரம்ப வரிகள்.

ஷான்யான் குடும்பம் ஒய்.எம்.சி.ஏ.வை விட்டு என்னிடம் சொல்லாமல் காலி செய்து கொண்டு போவதா?

இருக்காது? அப்படி எதுவும் நடக்காது! நடக்கவும் கூடாது நம்ம முடியவில்லை என்று அந்தப் பாடலின் வரிகளுள் ‘அவளா சொன்னாள்?’ என்கிற வரியை மட்டும் நீக்கிவிட்டுப் பார்த்தால் மற்றவை எனக்கு அப்படியே பொருந்தின.

என் ஊகங்கள் விதவிதமான திசைகளில் புறப்பட எத்தனித்தன.

ஏதும் எதிர்பாராத அவசர அழைப்பு வந்திருக்குமா? ஏதும் விபரீதம் நடந்திருக்குமா?

வரவேற்பாளரின் வாயைக் கிளறினேன். கேட்ட கேள்விக்கெல்லாம் நான் ஏதோ தைவான் நாட்டு இராணுவ இரகசியத்தைக் கேட்டவனைப்போல் நடந்துகொண்டார்.

எனக்கு இது அவமானமாகப் பட்டது.

“நான் அவர்களின் குடும்ப நண்பன். நானும் அவர்களுமாகப் பல தினங்கள் இந்தத் தைப்பே நகரையே வலம் வந்தோம். அவர்களின் திடீர்ப் புறப்பாடு எனக்கு மிகுந்த அச்சத்தைத் தருகிறது. என்னவோ ஏதோ என்று அஞ்சுகிறேன். அதற்காகத்தான் கேட்கிறேன்.”

“சாரி எனக்கு எதுவும் தெரியாது” என்றார் சற்றும் கனிவு இல்லாமல். நான் கடுப்பாகிவிட்டேன். ஆனாலும் இவரிடம் கோபப்பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை. இவர் நமக்கு ஏதும் சொல்லக் கடமைப்பட்டவருமில்லை. நம் கோபம் இவரிடம் செல்லாது.

“புறப்படும்போது ஏதும் பதற்றம், அவசரம் காட்டினார்களா என்பதை மட்டும் சொல்ல முடியுமா?”

சற்றே பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டேன்.

“ஆமாம்!”

நான் நினைத்து சரி. ஏதோ விரும்பத்தகாதது நடந்திருக்கிறது. என் ஊகம் சரி. அதனால்தான் இப்படி அவசர அவசரமாகக் கிளம்பியிருக்கிறார்கள். என்ன நடந்ததோ தெரியவில்லை.

ஆனால், என் அக்கறையெல்லாம் என் மூலம் இக்குடும்பத்திற்கு அறிமுகமான பாவி மனுஷன் ஸ்டீவன்சனால் ஏதும் நிகழந்திருக்கக் கூடாது. பாவம் ரொம்பவும் அப்பாவிக் குடும்பம், இந்த ஷான்யான் குடும்பம்.

இந்த ஸ்டீவன்சன் ஏதும் கெடுதல் செய்திருப்பாரா?

வரவேற்பாளரிடமிருந்து மேற்கொண்டு எந்தப் பதிலும் பெறமுடியாது என்பது விளங்கிவிட்டது. இந்தப் பாறை முகத்தானோடு பேசிப் பயனில்லை.

என்ன செய்யலாம்?

ஊம்! ஷான்யானும் ஸ்டீவன்சனும் தங்களது விசிட்டிங் கார்டுகளைத் தந்தார்களே, அவற்றை வைத்து அவர்களுடன் பேசினால் விவரம் தெரியவரும்.

இவையெல்லாம் தேவையில்லை. உனக்கு வேலையற்ற வேலையும்கூட. தைவான் வந்தாயா? சுற்றிப் பார்த்தாயா! கிளம்பிப் போய்க்கொண்டே இரு! என்று என் உள்ளுணர்வு தலைதூக்கிப் பேச ஆரம்பித்தது. அப்படியில்லை. நம்மிடம் நகமும் சதையுமாகப் (?) பழகிய ஒரு குடும்பம் இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் ஓட்டலைக் காலி செய்துகொண்டு போயிருக்கும்போது, என்ன ஏது என்று கேட்பதுதான் மனிதாபிமானம் என அந்த உள்ளுணர்வை அடக்கினேன்.

மாடிக்கு விரைந்தேன். என் இதயம் இயல்புக்கு மாறாகப் படபடத்ததை உணர்ந்தேன். என்ன நடந்தது என்று தெரிந்துகொண்டால்தான் படபடப்பு அடங்கும்போல் இருந்தது.

மேலும் படபடக்கும்படி ஏதும் அவர்கள் சொன்னால் என்ன செய்வாயாம்?

என் உடமைகளுக்குள் ஒளிந்துகொண்டு அந்த இரு விசிட்டிங் கார்டுகளும் கிடைப்பேனா என்றன.

திருடர்கள் வீட்டிற்குள் நுழைந்தால் தங்களுக்குக் கிடைக்க வேண்டியவற்றை எடுக்கும்வரை வீட்டை ஒரு கலை கலைத்துப் போடுவார்களே, அப்படி என் உடமைகளை நானே கலைந்துப் போட்டேன்.

‘எதையும் ஒரு முறையாக வைத்துக்கொண்டால்தானே சட்டென்று எடுக்கலாம்!’ என்னை நானே கடிந்து கொண்டேன்.

ஸ்டீவன்சன் கார்டுதான் முதலில் கிடைத்தது. முதலில் இவருடன் பேசலாமா? அது சரியான முடிவா? தெரிந்தால் கூடச் சொல்வானா அந்த ஆள்?

‘முதலில் ஷான்யான்.’ மேலும் தேட ஆரம்பித்தேன். என் பெட்டியில் உடமைகள் அதிகம். சிறிய கோடவுன் என்றே சொல்லலாம். போகிற இடங்களிலும் செளகரியத்தைக் குறைத்துக் கொள்ளாமல் எல்லாமும் எல்லா இடத்திலும் வேண்டும் என்கிற கொள்கையின் அடிப்படையில் ஏகப்பட்ட சுமைகளை எடுத்து வந்து இப்படி அடிக்கடி அவதிப்படுவேன்.

கடைசியாக ஒரு பாண்ட் பாக்கெட்டில் இருந்தது. வரவேற்பறையிலிருக்கும் பொதுத் தொலைபேசியிலிருந்து பேசினால் காசு குறைவு, அறையிலிருக்கும் போனில் பேசினால் கட்டணம் அதிகம்.

எவ்வளவாயிருந்தால் என்ன? உடன் பேசியே தீருவேன்!

தொடர்பு கிடைத்து மணி அடித்ததே தவிர, அடித்தபடியே இருந்தது. எடுத்துக் தொலைய்யா!

மூனும் டினுவும் என்னதான் செய்கிறார்கள்? கார்டில் இன்னொரு தொலைபேசி எண்ணும் இருந்தது. ஆனால் அது அவர்களது இல்லத்து எண். இல்லத்தில் யார் இருக்கப்போகிறார்கள்? இவர்களும் இல்லத்தை இன்னமும் அடைந்திருக்கமாட்டார்கள்.

மறுபடி மறுபடி… ஊகும் என் முயற்சியில் தோல்விதான்.

முயன்றால் முடியும்; முயற்சியோ வெற்றி தரும் என்பனவெல்லாம் பொருந்தாத கணங்கள் இவை. வேறு வழியில்லை. ஸ்டீவன்சனுடன்தான் பேசவேண்டும். அந்த ஆள் என்ன குண்டைப் போடப்போகிறானோ தெரியலையே!

மணி அடித்ததுமே ஸ்டீவன்சன் எடுக்க “மிஸ்டர் ஸ்டீவன்சன்! லேனா ஹியர்.”

“யெஸ் லேனா! எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன்.”

“உங்களுடன் பேசணும். பேசலாமா?”

“சாரி லேனா! ஒரு சேல்ஸ் பிரமோஷன் மீட்டிங்க இருக்கேன். அப்புறம் பேசறேன்.”

தாட்சண்யமே இல்லாமல் தொடர்பை உடனே கத்தரித்துவிட்டார் ஸ்டீவன்சன். இது என்ன பதில்? அப்புறம் பேசறேன் என்று பொத்தாம் பொதுவாக? பத்து நிமிஷம், அரை மணி நேரம் என்று ஒரு குறிப்பிட்ட நேரத்தைச் சொல்லாமல் இப்படியா தவிர்ப்பது? இந்தத் தவிர்ப்பு ஏதும் பொருள் பொதிந்த ஒன்றா? அல்லது ஏதும் உண்மையை மூடி மறைக்கும் செயலா? ஒன்றும் பிடிபடவில்லை. என் மனதிற்குள் ஏற்பட்ட வெற்றிடம் என்னை என்னவோ செய்தது!

‘சே! ஏன் இந்த ஷான்யான் குடும்பம் என்னிடம் இவ்வளவு பாசம் காட்டியது? பிறகு ஏன் இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறியது?’

விடிந்து இவ்வளவு நேரம் ஆகிவிட்டதே! விடிகாலையில் தொடர்பு கொண்டு பேசுவது என் தூக்கத்திற்குத் தொந்தரவு என்று நினைத்திருந்தால் இந்நேரமாவது அழைத்திருக்கலாமே!

அல்லது என் அழைப்பையாவது ஏற்றுப் பதில் சொல்லியிருக்கலாமே! நான் தவிர்க்கப்படுமளவு என்ன தவறு செய்தேன்!

ஏன் இப்படிக் சிறு குழந்தையிடம் பொம்மையைக் காட்டி ஆவலை ஏற்படுத்திவிட்டுப் பிறகு, அதைத் தராமல் தூக்கி எறிந்த கதையாய் என் அன்பைப் பாதியிலேயே வெட்டி எறிந்தீர்கள்? ஏன் இந்தக் குறுகிய நாளில் என் இதயத்தில் பேரிடத்தைப் பிடித்தீர்கள். பின்னர் ஏன் ஒரே நாளில் அந்த அன்புக் கதவை அடைத்தீர்கள்?

கலைத்துப் போட்ட பொருள்களை எடுத்து வைத்தபடி என் கலைந்துபோன இதயச் சிந்தனைகளையும் ஒழுங்குபடுத்த முயன்றேன். முடியவில்லை.

என் நினைவுகளில் திரும்பத் திரும்ப ஷான்யான் குடும்ப உறுப்பினர்களின் முகங்கள்; பேச்சுகள்; நடையுடை பாவனைகள்!

பசி நேரம் கடந்தும் சாப்பிடப் போகவில்லை. சாப்பிடப் பிடிக்கவும் இல்லை.

தொலைக்காட்சியைத் தட்டிவிட்டேனே தவிர உள்ளுக்குள் வேறு காட்சிகள் ஓடிக்கொண்டிருந்ததால் தொலைக்காட்சி நிகழ்ச்சி எதுவும் பதியவில்லை.

சட்டென்று இந்த உலகிற்குத் திரும்ப உதவியது தொலைபேசி. சிணுங்கிச் சிணுங்கி அழைத்தது.

“மிஸ்டர் லேனா! ஸ்டீவன்சன் ஹியர்!”.

(தொடரும்)

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

Most Commented Posts


Leave a Reply