Saturday, 4 Jul 2009
கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்
கள் வேண்டும் என்கிற குரல் சமீப நாள்களாகவே வலுத்து வருவதைப் பார்க்கிறேன்.இவர்கள் சற்றும் அடங்காமல் குரல் கொடுத்துக் கொண்டே இருப்பதைப் பார்க்கும்போது இவர்கள் பக்கமும் ஏதோ நியாய வாதங்கள் இருக்கும் போலிருக்கிறதே என்று சிந்திக்கலானேன்.
இந்தச் சிந்தனையில் இறங்கு முன்பு ‘என்னது இது? இருக்கிற டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை போதாது என்று இந்தக் கள்ளுக் கடைகளை வேறு திறந்து ஊருக்கு ஊர் கள்ளாறு ஓட வேண்டுமா? என்கிற கோபமே உயர்ந்து நின்றது.
ஆனால் இவர்கள் தரப்பு வாதங்களைக் கேட்டறிந்தபிறகு நானே கூடக் கள் வேண்டுவோர் கழகத்தில் பதிவு செய்து கொள்ளாத உறுப்பினன் போல ஆகிவிட்டேன்.
தமிழகம் ஒன்றும் குஜராத் அல்ல. முழுக்க முழுக்க பூரண மதுவிலக்கு அமலில் இருக்க.
சோம பானம் என்று ஆரம்பித்து நம்மவர்கள் காலங்காலமாகக் குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பூரண மதுவிலக்கு தமிழகத்தில் நிலவிய காலங்களில் கள்ளச் சாராயத்தின் ஆதிக்கம் அதிகமாகி விடவே, மக்கள் நலன் கருதியே மது விலக்கை இரத்து செய்தோம் என்று பதவியில் அமர்பவர்கள் தங்களது டாஸ்மாக் சாம்ராஜ்யத்தை நியாயப்படுத்த முனைகிறார்கள்.
பூரண மதுவிலக்கை அமலுக்குக் கொண்டு வந்தால்கூட நிதித் தட்டுப்பாடு ஏற்படாது; அதற்கு வழிவகைகளை, திட்டங்களை வைத்திருக்கிறேன் என்று ஆலோசனை சொல்ல வந்த மருத்துவர் ராமதாஸை, ஏனோ அரசியல் காரணங்களுக்காகப் புறக்கணிக்கிறார்கள். அது சரியல்ல.
கள்ளில் இருக்கும் போதையின் அளவு டாஸ்மாக் போதையின் அளவில் பத்தில் ஒரு மடங்கு தானாம். ஆனால் கள்ளை இறக்க அனுமதித்தால் வருமான இழப்பு ஏற்படும் என்கிற கோணத்திலேயே தி.மு.க. அரசு சிந்திப்பது வருத்தத்திற்குரியது.
கள் மருத்துவக் குணம் கொண்டதாம். ஒரு கெடுதலும் செய்வது இல்லையாம்.
தென்னகத்தில் உள்ள மாநிலங்களில் தமிழக அரசு மட்டும் தான் கள் விற்பனையைக் தடை செய்திருக்கிறது. ஆம். கர்நாடகா, ஆந்திரா, கேரளாவெங்கும் கள்ளுண்ண அனுமதி உண்டு. தமிழகம் ஏன் விதிவிலக்காக இருக்க வேண்டும்?
தென்னை, பனை உள்ள விவசாயிகள் கள் இறக்க அனுமதி கிடைத்தால் மரத்திற்கு மாதத்திற்கு 250 ரூபாய் கிடைக்குமாம். தேங்காய்களும் நுங்குகளும் இந்த வருமானத்தை தருவது இல்லை. விவசாயிகளின் வறுமை விலக, வாழ்வு மேன்மை அடைய அரசின் மனமாற்றம் உதவும்.
சேலம் ராசிபுரத்தைச் சேர்ந்த என் நண்பர் ஒருவர் என்னுடன் கல்லூரியில் பயின்றவர். விடுமுறைக்கு இவரது ஊருக்குப் போயிருந்தபோது “கள்ளு தயார் பண்ணி வச்சிருக்கேன் குடி” என்று என் நண்பரின் தாய் தம் மகனை வற்புறுத்திய காட்சியைக் கண்டு நான் வியந்து போயிருக்கிறேன். தென்னக மாவட்டங்கள் பலவற்றில் கள் என்பது ஏதோ ஓர் உணவுப்பொருள் போலவே இன்னமும் கருதப்பட்டு வருகிறது. கள்ளுக்கு அனுமதி வேண்டும் என்று கேட்பவர்களின் முன்பு வலிமையான மறுப்பு வாதங்களை முன் வைக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு வந்துவிட்டது என்றே நினைக்கிறேன்.
லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்
2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி
2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?
2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!
2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!
2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!
2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!
2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!
2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?
2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!
2009/04/10 தீயினும் கொடியது காமம்!
2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!
2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!
2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?
2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?
2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!
2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!
2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?
2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?
2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?
2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்
2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?
2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…
2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!
2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!
2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்
2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!
2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!
2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!
2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!
2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!
2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!
2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..
2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்
2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?
2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்
2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?
2008/09/05 இருபக்க இடைவெளிகள்!
2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!
2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்
2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!
2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்
2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு
2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்
2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?
2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…
2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!
2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!
2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!
2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!
2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?
2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?
2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?
2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!
2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!
2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!
2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!
2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?
2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!
2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?
































