Saturday, 4 Jul 2009
ஒபாமாவுக்கு ஆண்டுச் சம்பளம் ரூ.2 கோடி
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு எவ்வளவு சம்பளம் நிர்ணயிப்பது என்று கடந்த சில தினங்களாக நடந்து வந்த ஆலோசனையில் முடிவு எட்டப்பட்டுள்ளது. ஒபாமாவுக்கும், வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கும் சம்பளத்தை ஓரளவு உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
நீண்ட ஆலோசனைக்குப் பிறகு புதிய சம்பளப்பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதற்கு அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. இந்த பட்டியல்படி ஒபாமாவுக்கு ஆண்டு ஒன்றுக்கு 2 கோடியே 20 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும். மற்ற அல்வன்சுகள் தனியாக கொடுக்கப்படும். வெள்ளை மாளிகை இணையத்தளத்தில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
ஒபாமா உத்தரவுப்படி செயலாற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள், ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளில் 487 பேருக்கு சம்பள உயர்வு அதிகமாக உள்ளது.
மூத்த அதிகாரிகள் பலருக்கு ஆண்டு சம்பளம் ஒரு கோடி ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1995-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் சம்பள உயர்வு அதிக விகிதத்தில் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
































