 |
| ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன் |
 |
 |
மு.எத்திராஜ், சென்னை-15.
|
 |
மாவோயிஸ்டுகள் பிரச்னை?
|
 |
சிறுகாயம் பட்டதுமே மருத்துவம் பார்க்காமல் புண்ணாகி, சீழ்வடியும் வரை இதைக் கவனிக்காத பாமரன் செய்கிற தவறை மன்மோகன் சிங் அரசும் செய்வது புரியாத புதிராக உள்ளது.
|
|
 |
 |
எஸ்.கமால் பாட்ஷா, திருநெல்வேலி.
|
 |
ஓட்டுப்போடும் போது கை விரலில் மை வைப்பதேன்? உட்பொருள் என்ன?
|
 |
பெரிய அளவில் விரைவில் கரிபூசப் போகிறோம் என்று சொல்லாமல் சொல்லும் விதம் இது!
|
|
 |
 |
எம்.சொர்ணவேல், சிங்காநல்லூர்.
|
 |
உங்களை மந்திரியாக்கி, அதுவும் நிதி மந்திரியாக்கி அழகு பார்க்க வேண்டுமென்று ஆசை. என்ன சொல்லுகிறீர்கள்?
|
 |
மந்திரியாக்கினாலே போதும்! அதிலே நிதி மந்திரியெல்லாம் வேண்டாம்! மந்திரியானாலே ‘நிதி’தானே?
|
|
 |
 |
என்.பூங்காவனம், கொடுங்கையூர்.
|
 |
உடல் நல மருத்துவர், இலக்கிய மருத்துவர் மீண்டும் இணைவார்களா?
|
 |
இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. மருத்துவரின் வரிசைக்கிரமப்படி அடுத்த தேர்தலுக்கு இலக்கிய மருத்துவருடன்தான்! தேர்தலுக்குத் தேர்தல் சொல்லி வைத்தாற்போல் மாறுகிறவர் யார்?
|
|
 |
 |
ஏ.அப்துல்ஹரீம், வேலூர்.
|
 |
பாகிஸ்தான் உலக சேம்பியன் என்பதை ஜீரணிக்க முடிகிறதா?
|
 |
கிரிக்கெட் ஓர் அதிசய ஆட்டம். இதன் அதிர்ஷ்டக் காற்று எந்தப் பக்கம் வீசுமென்றே தெரியாது. உலகத் தர வரிசையில் பல காலமாய்ப் பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்த பாகிஸ்தானுக்குப் புது வாழ்வு வந்திருக்கிறது. பயிற்சி ஆட்டத்தின்போது இந்தியாவிடமும் சுமாரான அணியான இங்கிலாந்திடமும் அடி வாங்கிய பாகிஸ்தான் உலக சாம்பியனா? இந்தப் பெருமையை இன்னும் இரு ஆண்டுகள் காப்பாற்றிக் கொள்வதைப் பொருத்து பின்னர் இன்னும் கமெண்ட் அடிப்போம்!
|
|
 |
 |
டி.ஐயப்பன், ஹைதராபாத்.
|
 |
இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறதே?
|
 |
மிரட்சி வேண்டாம். பன்றிக் காய்ச்சலெல்லாம் நமக்கு ஜுஜுபி. இயல்பிலேயே நமக்கு எதிர்ப்புச் சக்தியும் தாங்கும் திறனும் அதிகம். கூவத்தில் குளித்தாலும் நம்மவர்களுக்கு ஒன்றும் ஆவதில்லை. மினரல் வாட்டர் குடித்தாலும் அமெரிக்காவிலிருந்து வந்து தங்குபவர்களுக்குக் காய்ச்சல் வந்துவிடுகிறது. பாதுகாப்பற்ற, ஆரோக்கியமற்ற சூழலுக்கு நம்மவர்கள் பழகிப்போனார்கள். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இறக்குமதி ஆனவர்களே.
|
|
 |
 |
சி.ராமதாஸ், முகப்பேர்.
|
 |
பெட்ரோல், டீசல் விலை உயர்வு?
|
 |
நியாயம். மத்தியில் வலுவான அரசு. எதிர்க்க முடியாதபடி கம்யூனிஸ்டுகளின் கைகளில் கட்டுகள். தி.மு.க. போன்ற கட்சிகளின் வாய்களிலோ பிளாஸ்திரிகள். காங்கிரஸ் அரசு நினைத்ததை முடிக்கும். எண்ணெய் நிறுவனங்களும் ஏராளமான நஷ்டங்களைத் தாங்கி வருகின்றன. இதை வெகுகாலம் தாக்குப் பிடிக்க முடியாது.
|
|
 |
 |
எஸ்.பத்ரி, ஆடுதுறை.
|
 |
வாங்கும் சக்தி அதிகரிப்பதால் விலைவாசி அதிகரித்துள்ளது என்கிறாரே தமிழக அமைச்சர் வேலு?
|
 |
பொருளாதாரத்தை நன்கு படித்திருப்பதற்காகப் பாராட்டலாம். நல்ல உருப்படியான வழிமுறைகளால் கட்டுப்படுத்தினால்தான் படித்த படிப்பிற்கும் வகிக்கும் பதவிக்கும் மதிப்பு.
|
|
 |
 |
ச. மெய்யநாதன், இராமனாதபுரம்.
|
 |
கூஜாக் குண்டுகள் பற்றிய மர்மம் இன்னும் விலகாதிருக்கிறதே?
|
 |
குற்றவாளிகளைக் காவல்துறை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டதுபோல்தான் தெரிகிறது. ஆனால் ஒன்று சொல்லவா? கூஜாக்களே ஆபத்தான குண்டுகள்தாம்! நமக்குக் கூஜா தூக்குகிற வேலையைச் செய்கிறார்களே, அவர்களைச் சொல்கிறேன்.
|
|
 |
 |
ராம. பழனியப்பன், காரைக்குடி.
|
 |
விஜய் அரசியலுக்கு வந்தால் என்னாகும்?
|
 |
இருக்கிற பணத்தை இழந்து புகழைத் தோற்று; ஒரு சில இடங்களை மட்டும் வென்று; ஏண்டா அரசியலில் இறங்கினோம் என்று வருந்துகிற பத்துத் திரைக் கலைஞர்களுள் இவரும் ஒருவராக ஆகிவிடுவார்!
|
|
 |
 |
எல்.பி.மகேந்திரன், கல்பாக்கம்.
|
 |
தமிழில் அர்ச்சனை எப்போது சாத்தியம்?
|
 |
அர்ச்சனைச் சீட்டுகள் மட்டும் தமிழில்! ஆனால் அர்ச்சனைகள் எல்லம் வடமொழியில். ஆண்டவனுக்கும் மொழிபெயர்ப்பாளர் தேவைப்படுகிறது. நீங்களும் நானும் வேண்டுமானால் அறநிலையைத் துறையைத் தமிழில் அர்ச்சனை செய்யலாம்.
|
|
 |
 |
ஆர். செங்குட்டுவன், சென்னை.
|
 |
விபத்து வழக்குகளில் நஷ்ட ஈடு வழங்காததால், நீதிமன்றத்தில் அரசுப் பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டு நிறுத்தப்படுவது தொடர்கிறதே?
|
 |
போகிற போக்கைப் பார்த்தால், நெல்லை நீதிமன்ற வளாகத்தில் விரைவில் ஒரு பணிமனை ஆரம்பித்துவிடுவார்கள் போல இருக்கிறதே?
|
|
 |
 |
ஏ.ரஹ்மான், விழுப்புரம்.
|
 |
இன்றைய சென்னை மக்களுக்கு எதில் அதிக ஆர்வம்?
|
 |
ஃபுட் கோர்ட்டுகள். இதிலும் வம்பு வழக்குகள் வரத்தான் செய்கின்றன. விரைவு உணவு; விரைவில் நோய்!
|
|
 |
 |
ஏ. அற்புதராஜ், பாளையங்கோட்டை.
|
 |
அரசாங்க ஊழியர்கள் பத்திரிகைக்கு எழுதலாமா?
|
 |
துறையின் அனுமதி பெற்று, பகல் நேரக் கனவுகளைப் பத்திரிகைக்கு அனுப்பலாமே?
|
|
 |
 |
‘வரலாறு’ சந்திரா, கரூர்.
|
 |
இன்னும் வரதட்சணை வேண்டாம் என்பவர்கள் இருக்கிறார்களே?
|
 |
சில ஆண்டுகளுக்குப் பிறகு நீ என்னடி கொண்டு வந்தே என்று கேட்காதவர்களே உண்மையான வரதட்சணை எதிர்ப்புவாதிகள்!
|
|
 |
 |
எஸ்.விமல், காங்கேயம்.
|
 |
சிலர் தங்கள் நாயை வளர்க்கிற அளவுகூட தங்கள் குழந்தைகளை வளர்க்க மாட்டேன் என்கிறார்களே!
|
 |
இது கூடப் பரவாயில்லை. நாய் வாலாட்டினால் மகிழ்கிறார்கள். குழந்தை வாலாட்டினால் அடித்து நொறுக்குகிறார்கள்.
|
|
 |
 |
சி.எஸ்.மணி, காஞ்சிபுரம்.
|
 |
உங்களுக்குப் பிடித்தது விபூதியா, நாமமா?
|
 |
இம்மாதிரி கேள்விகளால் உடனே எனக்குத் தேவைப்படுவது தைலம்தான்!
|
|
 |
 |
பி.சுகுமார், திண்டுக்கல்.
|
 |
கடிதம் எழுதுவதே குறைந்து போனதே?
|
 |
‘ஊருக்குப் போய் லெட்டர் போடுகிறோம்’ என்கிற அந்த (பஞ்சாங்க) வார்த்தைகளை இப்போதும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் எனக்குத் தெரிந்தவரை மாப்பிள்ளை வீட்டார்தான்!
|
|
 |
 |
ஆர்.பொன்ராஜ், மணலி.
|
 |
உங்களுக்கு மிரட்டல் கடிதங்கள் வருவதுண்டா?
|
 |
பள்ளி, கல்லூரி அட்மிஷன் நேரங்களில் வரும் பல கடிதங்கள் மிரட்டல் கடிதங்களே.
|
|
 |
|
|