Saturday, 4 Jul 2009

Hating yourselves continues?

lena-tamilvanan.jpgநீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

நீங்கள் விரும்புகிறீர்களா விரும்பவில்லையா என்பதை உணராமலேயே உங்கள் வட்டத்தினர் உங்கள்முன் சில செயல்களை  நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள்.

நீங்களோ உங்கள் உணர்வுகளை வெளிக்காட்டாமலேயே இருக்கிறீர்கள். சில நேரங்களில் உணர்வுகளை வெளிகாட்டினால் சண்டை வந்துவிடும். பிரச்னையாகிவிடும் என்று உங்களுக்குள் நினைத்துக் கொள்கிறீர்கள். உங்களைத் சுற்றியிருப்பவர்களோ உங்கள் உணர்வுகள் வெளிப்படாததாலோ என்னவோ அதே தவறைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

சில நேரம் நீங்கள் சமாதானம் அடைந்தாலும் உள்ளுக்குள் நீங்கள் வெறுப்புணர்வையும் சலிப்பையும் சேமித்துக் கொண்டே வருகிறீர்கள்.

இது வம்பான விஷயம். காரணம் உங்கள் மனம் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத நேரத்தில் வார்த்தைகள் வெடித்துச் சிதறும்.

எப்படித் தெரியுமா?

“நானும் போனால் போகட்டும்னு பொறுமையா இருந்தா, நீ பண்ற அக்கிரமத்துக்கு அளவே இல்லாமல் போயிட்டிருக்கு. என்ன நினைச்சிட்டிருக்கே உன் மனசுல? பொறுமையைச் சோதிக்கிறதுக்கும் ஓர் எல்லை வேண்டாமா?” என்று ஆரம்பித்து கூரை வரை குதிக்கிறீர்கள்.

இந்த எரிச்சல் நிகழ்ச்சி மீண்டும் நிகழாது என்று நீங்கள் நம்ப இடமிருந்தால் விட்டு விடுங்கள். திரும்பவும் நிகழும் என்றால், இது எனக்குப் பிடிக்கலை என்பதை மிக மென்மையாக ஆரம்பித்திலேயே உணர்த்திவிடலாம்.

நீங்கள் பலர்முன் கேலி செய்யப்படும்போது நம்மால் ஒரு சிரிப்பலை எழுந்ததே என மகிழும் மனப் பக்குவம் உங்களுக்கு இல்லை என்றால் உங்களைக் கேலி செய்பவரை இச்சம்பவம் ஓய்ந்தபிறகு தனியே அழைத்துச் சொல்லிவிடலாம். நீங்கள் இதைத் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்று அவராகக் கற்பனை செய்து கொள்ளும் போதுதான் தவறுகள் தொடர்கின்றன.

ஆக, தவறு உங்களிடமிருந்துதான் ஆரம்பிக்கிறது என்பேன்!

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப்  பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

Related Posts Title


Leave a Reply