Thursday, 2 Jul 2009
சினிமாவில் தமிழ்: சிவக்குமார் பேச்சு

நடிகர் சிவக்குமாரின் பேச்சை கேட்டால் காது குளிர்கிறது. மனம் மலர்கிறது. மூளை புத்துணர்ச்சி பெறுகிறது. தமிழ் மணக்கிறது.
2007இல், ஈரோட்டில் நடந்த புத்தகக்காட்சியில் சிவக்குமாரை பேசச் சொன்னார்கள். தலைப்பு ‘சினிமாவில் தமிழ்’. ‘அப்பல்லாம் தமிழ் பேசினார்கள். இப்போ ஓசை மட்டும்தான் வருகிறது’ என்று தொடங்குகிறார் சிவக்குமார். அதன்பின்னர் சுமார் 1 மணி 20 நிமிடங்களுக்கு தமிழைப் பற்றி அவருடையத் தமிழ் பேசுகிறது.
சிவாஜி, கலைஞர் கருணாநிதி, அண்ணா, எம்.ஜி.ஆர்., பெரியார், வசனகர்த்தா ஏகே வேலு, இயக்குநர் ஸ்ரீதர் என்று பிளந்து கட்டுகிறார் சிவக்குமார். குறிப்பாக அவருடையக் குரலில் பராசக்தி, மனோகரா, கந்தன் கருணை திரைப்பட வசனங்களை கேட்கையில் சிவக்குமார் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் என்பது தெரிகிறது.
கடைசியாக அவர் 70ஆம் வருடத்திற்கு முன்பாவே தமிழ், தமிழ் சினிமாவில் இருந்து வெளியேறிவிட்டது என்று வருத்தம் அடைகிறார். கேட்டுப் பாருங்கள் உங்களுக்கும் அவருடைய ஆதங்கம் புரியும்.
Click + symbol to hear Sivakumar speech

































July 14th, 2009 at 5:31 am
nalla vepsite
August 3rd, 2009 at 8:56 am
வாழும் மகாத்மா நடிகர் சிவகுமார் ( முதல் காதல் )
திருப்பூரின் எல்லைப்புறத்தில் இருந்தது அந்த திருமண மண்டபம். ஒரு ஊர் விட்டு வேறொரு ஊருக்கு பயணிப்பது போல் மையப்பகுதி போக்குவரத்தில் ஊர்ந்து உள்ளே நுழைவதற்கு முன்பே சற்று பயமும் உடன் வந்து தொலைத்தது.
கடைக்கோடி கிராமத்தில் சராசரிக்கு கீழே வாழ்ந்துகொண்டுருப்பவர்கள் செய்யக்கூடிய மொத்தச் திருமணச் செலவு அந்த மண்டபத்திற்கு திருமண வைபோகத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செலுத்த முடிந்தவர்களால் உபயோகிக்கப்படும் மண்டபம்.
தாராபுரம் சாலையில் அதைக் கடந்து செல்லும் போதே அதன் பிரமாண்டமும் உள்ளேயிருந்த வசதிகளும் வியப்பையும் ஆச்சரியத்தையும் உருவாக்கும். இன்று உள்ளே அழைத்த போது சற்று தயக்கத்துடன் கால்கள் முன்னேறியது.
” கம்பன் என் காதலன் ” திருப்பூர் கம்பன் கழகத்தினரால் நடத்தப்படுவதாக சுவரொட்டிகள் கண்ட போது மூளை மனதிற்குள் வரவு வைத்துக்கொண்டது. ஆனாலும் ஊருக்குள் உள்ளே நடக்கும் எந்த இலக்கிய கூட்டங்களும்
முடியும் போது தனிப்பட்டவர்களின் முன்னிறுத்தல்கள் மட்டுமே மிஞ்சுவதால் தயக்கத்துடன் குறிப்பிட்டபடி நான்கு மணிக்கு பத்து நிமிடம் முன்னதாக நுழைந்த போது ஆச்சரியம் காத்துருந்தது?
முக்கிய அரங்கத்திற்கு உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டு பக்கத்து அரங்கினுள் நுழைய வைக்க ஆழியாறு மனவளக்கலை சங்க மக்கள் முயற்சிக்க ஏமாற்றத்துடன் போய் அமர அடுத்த அதிர்ச்சி காத்துருந்தது. ஓலி ஓளியாக ஏற்கனவே பேசிய குறுந்தகட்டின் மூலமாக நிகழ்ச்சி நடத்தப்பட இருக்க வௌியேறி விடலாம் என்ற எண்ணம் மாறியது உள்ளே திரு. சிவகுமார் நுழைந்த நேரம். குறிப்பிட்டபடி சரியாக 4.00 மணி. ஓரு நிமிடம் முன்னதாகவே?
குளிரூட்டப்பட்ட அரங்கத்திற்கு இரு பக்கமும் இருந்த அரங்க வேறுபாடுகள் வேதனையளித்தாலும் வௌியேற முடியவில்லை. காரணம் வழி நடத்திக்கொண்டுருப்பர்களில் ஒருவராக இருப்பவர் நிஜத்தில் எப்படி நிகழ்ச்சியை நடத்தப்போகிறார்? என்ற ஆவல் அதிகரித்ததால் அமைதியாய் அமர்ந்துருந்தேன்.
கதர்ச்சட்டை கண்ணியவான்களுடன் கணவானாக திரு. சிவகுமார் உள்ளே வந்ததும் ஓலிநடா உயிர் பெற்று இருண்ட அரங்கம் என்னை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்றது.
தாய் மொழியை போற்றுதல் வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தாலும் போற்றத்தக்க எந்த விஷயங்களும் என்னுள் இல்லை. பள்ளி இறுதியில் வந்த தமிழாசிரியர்கள் திரு. அண்ணாமலை, திரு. மீனாட்சி சுந்தரம் (மீனவன்) இருவருமே தந்த தமிழ், தங்க தாம்பாளத்தில் கல்லூரியில் நுழைந்த போது சமஸ்கிருதம் வந்து உட்கார்ந்து கொண்டது. கல்லூரி முடிந்து வாழ்க்கை வந்து வழங்கி ஹிந்தி வந்து அமர ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு ஆங்கிலத்தை அசரவையில் அமர்த்திவிட்டு அவரவர்கள் அக்கடா என்று விலகிவிட்டார்கள்.
நானும் இதிகாசங்களை படித்தவன் தான். ஆனால் அத்தனையும் ஐந்து மற்றும் பத்து மதிப்பெண்கள் வாங்கும் கேள்விகளுக்குத் தான் பயனாய் இருந்தது. வகுப்புகள் கூடக்கூட அது கூட மறந்து ஆதரவு அற்ற இல்லத்தில் குடிபுகுந்தவனாய் ஆகிவிட்டது.
ஓளி ஓலி நாடா ஓடிக்கொண்டுருந்தது. கதாநாயக சகோதர்கள், சிறை பிடித்ததால் கலக்கமடைந்த கதாநாயகி, பன்ச் டயலாக் பேசாத வில்லன் என்று எல்லோரையும் நூறு பாடல்கள் மூலம் திரு. சிவகுமார் சொல்லி முடித்த போது பிரமிப்பாய் இருந்தது.
இரண்டு மணி நேர முடிவதற்குள் தொன்மை வரலாறு, வாழ்வியல் சம்பவங்கள், வாழ்க்கை சூத்திரங்கள், இடர்பாடுகளையும் இன்னல்களை எடுத்துக்கொள்ள வேண்டிய விதங்கள் போன்ற விகிதாசாரங்களை விளக்கவுரையாய் விளங்கும் உரையாய், நடைமுறை வாழ்க்கையாய் வாழ்ந்து காட்டிய திரு. சிவகுமார் ஒரு விளங்கிக்கொள்ள முடியாத புதிர் தான்.
வரலாறு என்று இங்கு வாசிக்கப்பட்டவைகள் எல்லாமே வாழ்ந்து முடித்தவர்களின் வானளாவ புகழ்ச்சியுரையாய் தான் இருந்து தொலைக்கின்றது. இதிகாசங்கள் என்றவைகள் எல்லாமே எச்சத்தின் மிச்சமாய் திரித்து கூறப்பட்டவைகளாகத்தான் முடிகின்றது.
இன்று ஆங்கில அறிஞர்களின் பொன்மொழிகள் வைத்து பிழைக்க வருவர்கள் அனைவருமே, அவர்களின் பார்வைக்கும், பாடங்களாக படித்து தொலைக்க வேண்டிய மாணவர்களுக்கும் இந்த இதிகாசங்கள் இன்னலாகத்தான் தெரிகின்றது.
எழுதிய நடை விளங்கிக்கொள்ள முடியாதது என்பதை விட அதன் விளக்கங்கள் அத்தனையும் விபரீதத்தை தான் வினாக்குறிகளாக விட்டுச் செல்கின்றது.
அதனால் தான் என்னவோ ஏன் இந்த வீர விளையாட்டு என்று அனைவருமே திருட்டு விசிடி பின்னால் போய்க்கொண்டுருக்கிறார்கள்.
பதிந்து வைத்துள்ள எத்தனையோ துறை சார்ந்த மின் அஞ்சல்கள் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. சில நாட்களுக்கு முன் வந்து விடுதலை பெருமகன் ஒளி ஓவியா மின் அஞ்சல் வாசித்த போது விபரிதமாய் இருந்தது.
நாலைந்து தலைப்புகளில் ஒன்று.
……………….. பார்த்தால் இங்கே வாடா விலைமகள் பெற்ற மகனே? எழுதுவதற்குக்கூட தயங்கும் வார்த்தைகள் தலைப்பாய் வைத்து சேவை செய்துகொண்டுருக்கிறார்.
தன்னை, தன் சொத்துக்களை, கருத்துக்களையே தானமாக தந்தவர் தந்தை பெரியார். மூடம் மட்டுமே வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டுருந்தவர்களை விடுதலை பெற வைப்பதற்காக தொடங்கிய காலத்தில் வந்த வார்த்தைகள் இன்று தேவையா? எந்த வசதிகளும் எட்டிப்பார்க்காமல், எல்லாவற்றுக்கும் இறைவன் மட்டுமே என்று தன் அன்றாட கடமையைக் கூட கவனிக்காமல் இருந்த கூட்டத்தை வைத்து பிழைத்துக்கொண்டுருந்த கூட்டத்தை விரட்ட அவர் எடுத்த ஆயுதங்கள் அனைத்தும் இன்று தனி மனித ஏகபோகமாக்கி திசை திரும்பி கூர் முனை மழுங்கி கத்தியாய் இருக்கின்றது.
வசதிகள் கூடியுள்ளது. வாழ்க்கைத் தரம் ஓரளவுக்கேனும் உயர்ந்துள்ளது. சிந்தனைகள் மாறியுள்ளது. சிறகுகள் கூட முளைத்துள்ளது.
மூடத்தை அழிக்கின்றோம் என்று மூர்க்கத்தை வளர்ப்பதால் இந்த சமூகம் எதைப்பெறுகின்றது? வருட வருடம் பழனி பாதயாத்திரையும், சரணம் ஐயப்பா என்ற கோஷமும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
எங்கே போச்சு உங்கள் விடுதலைக்கான வேட்கை. இது வரை என்ன சாதித்துள்ளீர்கள்? எதைத்தான் சாதிப்பீர்கள்?
அவர்களின் பொறியல் கல்லூரியில் படிக்கும் அக்கா மகளிடம் கேட்டேன்.
“மாமா அவர்கள் தௌிவாக இருக்கிறார்கள்? கொள்கை வேறு. தொழில் வேறு? “. சிரிப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?
சமீப ஊர் பயணத்தில் அதிசமாய் ரெங்கராஜனை சந்திக்க முடிந்தது. பள்ளி இறுதி வரையில் எங்கள் மூவர் கூட்டணிக்குப் பின்னால் உள்ள வரிசை நாற்காலியில் அமர்ந்து கொண்டு அடுத்தவர்களை காலால் நோண்டிக்கொண்டுருக்கும் “நோண்டி” ரெங்கராஜன்.
வயதுக்கு மீறிய வழுக்கை. மொத்தத்தில் வயோதிக தோற்றம்.
அவனின் தளர்ந்த வார்த்தைகள் என்னை தடுமாற வைத்தது.
“இல்ல மாப்ள. முடியலடா? உன்ன மாதிரியே மூனுமே பொட்டப் புள்ளைங்க. அப்பா இருந்தவரையில் கோயில் வருமானம் போதுமானதாய் இருந்தது. இப்ப அரசாங்கம் எடுத்துக்கொண்டதால் பாதி நேரம் பிரசாதம் தான் உணவாக இருக்கிறது. வர்ற வருமானத்தில் படிக்க வைக்க முடியாமல் பாதி நேரம் சாவு வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் போய்க்கொண்டுருக்கிறேன். நீங்க மூன்று பேருமே படிச்சீங்க. நான் படிக்கிறதை தவிர அத்தனையும் செய்தேன். என்ன செய்றது?”
அவனுடைய எல்லா முயற்சிகளுக்கும் அவனின் முற்பட்ட ஜாதியே தடையாய் போக சாவை எதிர்பார்த்து சங்கடமாய் வாழ்ந்து கொண்டுருக்கின்றான். விளங்க முடியா அவன் வாழ்க்கை எனக்கு விரக்தியைத்தான் பரிசாகத் தந்தது?
அனைவருமே நடந்து வந்த சமூக வாழ்க்கையில் பெற்றவைகள் லட்சங்கள் என்றால் இழந்தவைகள் கோடிக்கு அதிகமானவைகள். அதனால் தனி மனிதர்கள் இன்று தெருக் கோடிக்கு வந்து தொலைந்து போய்க்கொண்டுருக்கிறோம்?
காதல் தொடரும்,,,,,……????
http://texlords.wordpress.com
August 5th, 2009 at 4:55 am
வாழும் மகாத்மா நடிகர் சிவகுமார் (இரண்டாவது காதல்)
திருப்பூர் கம்பன் கழக முதலாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிக்காக வந்த சிவகுமார் “கம்பன் என் காதலன் ” உரை நிகழ்த்திய ஓலி ஓளி குறுந்தகடு முடிவுக்கு வந்த போது குளிர்ச்சியான இருண்ட அரங்கம் வௌிச்சமாய் தொடங்கப்போகும் நிகழ்ச்சிக்கு வந்தது.
ஆச்சரியங்களும் அணிவகுத்தது.
இன்று இந்தியா டூடே எத்தனையோ கல்லூரிகளை பாடல் பத்து போல் தரம் பிரித்து தகுதிகளை பறைசாற்றுவதை பார்க்கும் போதே படித்த அழகப்பச் செட்டியார் கல்லூரியின் நினைவு வந்து போய்க்கொண்டே இருக்கும்?
சிதம்பரம் தவிர வேறு எங்கும் அனைத்து வசதிகளும் உள்ள கல்லூரிக்குச் செல்ல வேண்டுமானால் அப்போதைய காலகட்டத்தில் சென்னைக்குத் தான் வரவேண்டும். ஒரு பொட்டல் காட்டில், குடிக்கும் கஞ்சிக்கே வக்கற்ற அத்தனை பேர்கள் வாழும் மக்களுக்கு மத்தியில் அத்தனை ஆயிரம் ஏக்கரில் தனி ஒரு மனிதனாக கட்டிய கட்டங்களில் இன்று வரை ஒரு விரிசல் கூட இல்லை.
குறுக்குத்தூண்கள் போன்ற இன்றைய நவீன கட்டிட சித்தாத்தங்கள் இல்லாமல் அகன்ற அறையில் குறுக்கில் போய்க்கொண்டுருக்கும் அத்தனை எடை உள்ள இரும்பு சமாச்சாரங்கள் என்னை நுழைந்து படித்துக்கொண்டுருக்கும் காலத்தில் திடுக்கிட வைத்தது உண்மை தான்?
கல்லூரியா? சோலைவனமா? வகுப்புறை முழுமையுமே நூலகமாக காட்சியளிக்கும் போது சரஸ்வதி வாசிக்கும் கருவியாய் மொத்தத்திற்கும் ஒரு பெரிய நூலகம்.
குழந்தைகளின் மாமா ஜவர்கஹால் நேருவுடன் கொண்ட தனிப்பட்ட நட்பு அனைத்தையுமே கல்விக்கூடத்தை கல்விக்கடலாய் மாற்றி எதிரி நாடுகள் கவனிக்கும் வரைபடத்தில் முக்கிய ஒரு புள்ளியாய் ஆக்கி பல லட்ச குடும்ப குழந்தைகளை பெரும்புள்ளியாக்கிய புனிதர்.
ஏழைகளுக்கு, எளியவர்களுக்கென்ற பிறப்பெடுத்த மனித அவதாரம். நன்கொடை ஏதும் எதிர்பார்க்காமலே இருந்த எல்லாவற்றையுமே கொடையாய் கொடுத்துச் சென்ற வள்ளல்.
அத்தனை வசதிகளையும் மட்டுமே பார்த்து வந்தவன் அதுபோலவே எல்லா கல்லூரியில் இருக்கும் என்று கற்பனையில் இருந்தவன் திருப்பூரில் உள்ள எல்.ஆர்.ஜி. பெண்கள் கலைக்கல்லூரியில் படிக்க வரும் பெண்கள் அனைவரும் தரையில் அமர்ந்து படித்துக்கொண்டுருப்பதை திரு. சிவகுமார் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு அறிவிக்க ஆச்சரியத்தின் முதல் உச்சம்.
ஓரே ஒரு உத்தரவில் அவர் மேடையில் அழைத்த அழைப்பில் கல்லூரிக்கு 24 அறைகளுக்கு தேவையான மரச்சாமான்கள் வாங்க 7.2 லட்சத்தில் தனது குடும்ப 3 பேர்கள் சார்பாக ஒரு லட்சம் கொடுத்து தொடங்க பத்து நிமிடத்தில் வந்து சேர்ந்த மொத்த தொகையின் காசோலைகள் அடுத்த ஆச்சரியம்.
ரௌத்தரம் பழகு. அதை வௌியே காட்டாதே?
ஏற்றுக்கொள்ளக்கூடிய அவஸ்யமான அறிவுரை தான். கல்லூரிக்குத் தேவையான திரட்டப்பட்ட நன்கொடையை கொடுப்பதற்காக வரவழைக்கப்பட்ட மொத்த மாணவிகளுக்காகவே குளிர்சாதன வசதியுள்ள அரங்கத்தில் முன்னுரிமை கொடுத்து ஓலி ஓளி குறுந்தகடு நிகழ்ச்சியை பார்க்க வைத்த திரு. சிவகுமார், வந்த மாணவிகளின் தொடர்ந்து கொண்டேயிருந்த சொந்தக்கதை இரைச்சலை அவர் ரௌத்திரமாய் ஆகி மேடையில் கர்ஜித்ததை பார்த்தபோது எனக்கு சற்று திருப்தியாய் இருந்து. அப்போது தான் பின்னால் கத்திக்கொண்டுருந்த இரண்டு மாணவிகளுடன் சண்டை போட்டு முடித்துருந்தேன்?
திருப்பூர் நிறுவன அதிபர்கள் அதிகபட்சம் 80 வயது ஆனால் என்ன செய்வார்கள்? கணக்கு பார்த்துக்கொண்டுருக்கும் தணிக்கையாளர்களுடன் தொடர்ந்த கலந்துரையாடலில் மூலம் தான் ஒப்படைத்த நிர்வாகத்தை தன்னுடைய வாரிசு சரியான பாதையில் கொண்டு செல்கிறாரா? என்று நாளோரு பொழுதும் அவஸ்த்தையில் கழித்துக்கொண்டுருப்பார்கள்?
ஆனால் மண்டப உரிமையாளர் அந்த 80 வயது கணவான் தனது வாழ்வின் கடைசி நாட்களை பின்தொடர்ந்து வந்து கொண்டுருக்கும் இளைஞர்களுக்காக நிகழ்ச்சி நடந்த ஒரு நாள் முழுமையும் இலவசமாக கொடுத்ததை விட தினந்தோறும் ஒரு மணிநேரம் கம்பனைப்பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டுருப்பதாகவும் பல புத்தகங்கள் படித்துக்கொண்டுருப்பதாக சொன்னது ஆச்சரியம் என்றால் அதை விட பெரிய ஆச்சரியம் அவர் அங்கு இருந்த அனைவருக்கும் சொன்ன அறிவுரை.
” பொன் மான் தேடுவதை நிறுத்தி சற்று கலை மானையும் தேடுங்கள். அந்த மான் கைக்கு சிக்காமலே போய்க்கொண்டுருக்கும். சிக்கும் இந்த கலைமானாவது உங்கள் ஆரோக்கியத்திற்கு உறுதுனையாய் இருக்கும்”.
நிகழ்ச்சியில் உரையாற்றிய தலைமை நீதியரசர் அறிவாய், ஆழமாய், பேசியது அவர் கடந்து முப்பது ஆண்டுகளாக கம்பனை காதலித்த விதம் எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அவரின் அத்தனை சொற்களும் வாழ்வின் வாலிபம் தாண்டி வாழ்க்கையின் வசந்தத்தை வரவேற்றுக்கொண்டுருப்பவர்களிடம் எளிதில் சேரக்கூடியவை?
அதனால் தான் என்னவோ கம்பனை காதலித்த ஒரு வருடத்திற்குள் திரு. சிவகுமார் முயற்சி இத்தனை எளிதில் அத்தனை தமிழர்களுக்கும் எளிமையாய் போய் சேர்ந்துள்ளது. கடல் தாண்டி கலங்கரை விளக்கமாய்.
நடிகராக வாழ்ந்தவர்கள், வாழ்ந்து கொண்டுருப்பவர்களின் சொந்த வாழ்க்கை சோகத்தில் ஊடக வௌிச்சம் அதிகமாக படுவதற்குக்காரணமே அவர்களின் நடிப்பு நிஜ வாழ்க்கையிலும் இருந்து தொலைப்பதினால் தானே? கற்றுக்கொள்வதை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதால் தானே நாம் பார்த்துக்கொண்டுருக்கும் அத்தனை வளர்ச்சிகளும் வீழ்ச்சிகளும்?
மாற்றத்தை மட்டுமே எதிர்பார்த்து ஹிந்தி பாடல்களைப்போல் வேண்டும் என்ற போதுதான் இரட்டையராய் சிம்மசானம் போட்டு அமர்ந்தவர்களின் ராஜ்யத்தை சுருக்க முடிக்க முடிந்தது. அதனால் தான் ஒவ்வொருத்தரின் உள் மனத்தில் ஊறிக்கொண்டுருந்த மண்சார்ந்த வௌிப்பாடுகள் உற்சாகமாய் பீறிட்டது. இந்த உலகம் இசைக்கு இவர் மட்டும் தான் ஞானி என்று போற்றியது. அந்த ஞானியே விளங்க முடியாத விஞ்ஞானியாய் போனதால் விடிவௌ்ளியாய் முளைத்து உலகமெங்கும் “எல்லாப் புகழும் இறைவனுக்குகே ” என்று தமிழில் பறைசாற்றி தலைகுனிந்து தலைக்கனம் இல்லாததையும் வரவு வைத்துக்கொண்டது.
அக்மார்க் நாத்திகரான வாழ்க்கையில் வயோதிகத்தில் இருக்கும் திரு. கவிஞர் புவியரசு உச்சிமுகர்ந்து ஆசிர்வதித்தது, தமிழருவி மணியன் சங்கடத்துடன் சந்தோஷப்பட்டது, சாலமன் பாப்பையாவை “பின்னிட்டேய்யாாாாா……” என்று சொல்ல வைக்கக் காரணம் எளிமை என்பதை விட பாடல்களை உச்சரித்த விதம், உச்சரித்த வார்த்தைகள் உணர்வாய் சொன்ன விதம், உணர்ந்த உள்வாங்கிய விஷயங்களை நிகழ்கால நிகழ்வாய் நிகழ்த்திக் காட்டிய அற்புதம் என்று எல்லாமே ஏற்றத்துக்கான வழிகோலாய் அமைந்ததில் என்ன ஆச்சரியம்?
தான் நடத்திக்கொண்டுருக்கும் உள்நாட்டு வர்த்தக நிறுவனமான ராம ராஜ்யத்தின் (தலைமைக்கு தான் எத்தனை பொருத்தம்?) வாயிலாக வழங்கிக் கொண்டுருக்கும் வேஷடி சட்டையைப் போலவே மொத்த நிகழ்ச்சியின் நிகழ்வுகளுமே சமூக பங்களிப்பாகத்தான் இருந்தது. அதனால் தான் கவுண்ட ராமாயணமாக இல்லாமல் நிஜ கம்ப ராமாயணமாக இருந்தது (?) ஆனால் அவர் முகம் மட்டும் தான் அந்த குளிர் அரங்கில் கூட கருப்பாக இருந்தது.
உழைத்த உழைப்பு.
நடந்த நிகழ்ச்சி மொத்தமும் அவர் வாரிகளுக்கு அவரால் சேர்த்துக்கொண்டுருக்கும் புண்ணிய வரவு?
வாழ்க்கையில் உச்சத்தில் இருந்த போதும் இன்று அதன் மிச்சமாய் வாழ்ந்து கொண்டுருக்கும் போதும் கூட, பதின்ம வயதினரை கூட்டம், சங்கம் என்று அவர்களின் வாழ்க்கையை பரிதவிக்க விடாமல், சாராயக்கடையில் வேலை பார்த்துக்கொண்டே பழகிக்கொண்ட சுய ஒழுக்கத்தினால் பாதை மாறி போய்விடாமல், அரசியலில் இரு துருவமாய் இருந்து கொண்டுருப்பவர்களை தன்னுடைய திருமண வைபவத்தில் கலந்து கொள்ளும் அளவிற்கு நா அடக்கத்துடன் வாழ்ந்து கொண்டுருக்கும் நாகரிக வாழ்க்கை பெற்றவரை, தான் சென்னையில் தங்கி படித்த காலத்தில் குளியல் சோப் கூட வாங்க முடியாத அந்த வறுமை சோகத்தை மறைக்க விரும்பாமல் கல்விக்கென்று கண்களுக்குத்தெரியாமல் நீண்டு கொண்டுருக்கும் வள்ளல் கைகளை பெற்றவர், பெற்றவர்களையும் பேணிக்காத்து வந்த பாதையை காட்டி வாழ்ந்து கொண்டுருப்பவரை, 67 வயதில் பெற்ற இளமை வாலிபம் கம்பனை காதலிக்கச் சொன்னது என்றால் 80 வயது ஆகும் போது புற நானூறு அக நானூறு என்று புகுந்து வருவாரோ?
திரு. சிவகுமார் அவர்களை பெருமைப்படுத்த தலைப்பில் சொன்ன வார்த்தையை விட வேறு எந்த வார்த்தையும் எனக்குத் தெரியவில்லை? வேறு எந்த வார்த்தைகள் பொருத்தமாய் இருக்கும்?
August 5th, 2009 at 5:05 am
மதிப்பிற்குறிய திரு லேணா தமிழ்வாணன் அவர்களுக்கு
உங்கள் மின் அஞ்சல்கள் வந்து சேரும் இடத்தில் என்னுடைய மின் அஞ்சலை இடம் பெற இரண்டு நாளாக எல்லா விதங்களிலும் முயற்சித்துக் கொண்டுருக்கின்றேன். தமிழ்நாட்டில் அதிக நண்பர்களை பெற்ற உங்களிடம் நானாகவே உள்ளே வந்தாலும், நிரம்பி வழிவதால் அனுப்பும் அத்தனை மின் அஞ்சலுமே என்னிடமே திரும்பி வந்து விடுகின்றது. பதிவிற்குள் உள்ளே வந்து பத்திரமாய் திரும்பி விட்டீர்கள்?
1980 முதல் பள்ளி தொடக்க கல்வி தந்த சரஸ்வதி வித்யாசாலையில் ஆண்டு விழாவிற்கு வந்த உங்களை தொடர்ந்து வந்து கொண்டுருப்பவன் இன்னமும் கூட உங்களிடம் வந்து சேர முடியவில்லை?
ஜோதிஜி
தேவியர் இல்லம். திருப்பூர்.
texlords@aol.in