» 2009 » July .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.
World’s youngest smoker: Video

Posted on Friday 31 July 2009

வயசோ இரண்டு, புகைப்பதோ பத்து சிகரேட்!: விடியோ

லியாங்லியாங்கிற்கு வயசு இரண்டுதான். அவன் தினசரி பிடிப்பதோ பத்து சிகரேட். அவன் தன்னுடைய பிஞ்சு விரல்களில் சிகரெட்டை பற்றவைத்து புகைப்பதைப் பார்த்தால், ஏதோ 40 வயது ஆள் பிடிப்பதைப் போல இருக்கிறது.

சீனாவில் உள்ள டியான்ஜின் நகரைச் சேர்ந்த யோ மிங்கின் மகன்தான் இந்த லியாங்லியாங். இதில் என்ன கூத்து என்றால், மகனுக்குப் புகைக்க கற்றுக் கொடுத்ததே இந்த அருமையான தந்தைதான். ஏனாம்?

“அவன் பிறந்து ஒன்றரை ஆண்டுகளில் அவனுக்கு, ஹெர்னியா பிரச்னை வந்துவிட்டது. வலியால் துடிப்பான். வயது காரணமாக அறுவை சிகிச்சையும் செய்ய முடியவில்லை. அவனுடைய வலியைப் போக்கவும், மனதை திசைத்திருப்பவும் புகைக்க கற்றுக்கொடுத்தேன். வலியை மறந்து, அவன் சிரித்தபடி இருந்தாலே எனக்குப் போதும்” என்றுசப்பைக்கட்டு கட்டுகிறார் யோ மிங்.

இப்போதே தினசரி ஒரு பாக்கெட் அளவுக்கு சிகரேட்டுகளை ஊதித் தள்ளுகிறான் இந்தப் பொடியன். லியாங்லியாங்கின் புகைப்பழக்கம் உள்ளூரில் அவனை பிரபலமாக்கியுள்ளதுடன், இரண்டு பெருமைகளையும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. ஒன்று, உலகிலேயே மிகச்சிறிய வயதில் புகைப்பவன் என்ற பட்டம். இரண்டாவது, புகை பிடிக்க உதவும் லைட்டரை சிறப்பாகப் பயன்படுத்துபவன் என்ற பெயர்.

சிறுவயதில் ஏற்பட்டு விட்ட புகைபழக்கத்தால் லியாங்லியாங்கின் எதிர்காலம் எந்தளவுக்கு பாதிக்கப்படும் என்பதை யாராலும் அனுமாகிக்க முடியவில்லை.

ஆனால், அவன் புகைபிடிக்கும் அழகைக் காண விரும்பும் ரசிகர்கள் கூட்டம் பெருகிக் கொண்டேயிருக்கிறது.

விடியோ:

admin @ 10:59 pm
Filed under: news
EC warns PMK to prove fault on EVM

Posted on Friday 31 July 2009

வாக்குப்பதிவு இயந்திரம் மீதான புகாரை நிரூபியுங்கள் :  பா.ம.க.வுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

evm.jpg

வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்று தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் சாதாரணமானவை அல்ல. அதனால் ஏற்படும் விளைவுகள் கடுமையானவை ஆகும். எனவே, தேர்தல் ஆணையம் பயன்படுத்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுங்கள் என்று பாமகவை தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட வாக்காளருக்கே வாக்குகள் பதிவாகும் வகையில் மின்னணு இயந்திரத்தை மாற்றி அமைக்க முடியும் என்றும், மக்களவைத் தேர்தலில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்றதாகவும் பாமக குற்றம்சாட்டி வருகிறது.

இதுதொடர்பாக அக் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில், “இந்தியத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது’ எனக் கூறி தேர்தல் ஆணையத்துக்கு புகார் மனு ஒன்றையும் அவர் அனுப்பியிருந்தார்.

இதற்கு ஆணையத்தின் செயலாளர் கே.அஜய்குமார் அளித்துள்ள பதிலில்,

“தேர்தல்களில் ஆணையத்தால் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்வதற்கு வாய்ப்பில்லை. ஒரு வேட்பாளருக்கு அத்தனை வாக்குகளையும் விழும்படி செய்து விட முடியாது. ஆணையத்துக்கு அனுப்பியுள்ள மனுவில் தாங்கள் (பாமக) தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் சாதாரணமானவை அல்ல. அதனால் ஏற்படும் விளைவுகள் கடுமையானவை ஆகும். எனவே, தேர்தல் ஆணையம் பயன்படுத்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுங்கள். தேர்தல் ஆணையத்தின் இடத்தில், உங்களுக்கு (பாமக) வசதிப்பட்ட நாளில், நேரத்தில் இந்த செயல் விளக்கத்தை வைத்துக் கொள்ளலாம். எந்தத் தேதி என்பதை சில நாள்களில் தெரிவிக்கவும்” என்று கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள பதில் குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸிடம்  கூறுகையில், “எங்களது செயல் விளக்கத்தை தேர்தல் ஆணையத்திடம் நேரில் செய்து காட்டும் நாளை ஒரு வாரத்துக்குள் அறிவிப்போம்” என்றார்.

admin @ 10:13 pm
Filed under: news
Obama gives beer party to police officer and professor

Posted on Friday 31 July 2009

இன பிரச்னையைத் தீர்த்து வைத்த பீர்  பார்ட்டி :  ஒபாமா அசத்தல்

obama-beer-party.jpg

கா
வல்துறை அதிகாரிக்கும், கருப்பின பேராசிரியருக்கும் ஏற்பட்ட இன மோதலை, அமெரிக்க  அதிபர்
ஒபாமா, பீர் பார்ட்டி கொடுத்து தீர்த்து வைத்துள்ளார்.

அமெரிக்காவின் கேம்ப்ரிட்ஜ் அருகே கடந்த 16ம் தேதி ஒரு வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
இது தொடர்பாக, ஹார்வர்டு பல்கலை கழக சட்டத்துறை பேராசிரியர் ஹென்ரி கேட்டிடம்
காவல்துறையினர் விசாரணை நடத்த சென்றனர். ஆனால், அதிபர் ஒபாமாவின் நண்பரான ஹென்ரி
கேட்,  ஒத்துழைக்காமல் அவர்களை கண்டபடி திட்டியுள்ளார். இதனால், கோபமடைந்த அதிகாரி ஜேம்ஸ் க்ரோலே, ஹென்ரி கேட்டை கைது செய்து, 4 மணி நேரம் காவலில் வைத்தார். வெள்ளையரான அதிகாரி க்ரோலே, கருப்பின பேராசிரியர் ஹென்ரியிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டதற்கு அதிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரத்தால் காவல்துறை சங்கத்தின் சார்பில் ஒபாமாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த பிரச்னை இனப்பிரச்னையாக மாறுவதை உணர்ந்த ஒபாமா, சம்பந்தப்பட்ட அதிகாரி க்ரோலேவையும், பேராசிரியர் ஹென்ரியையும் வெள்ளை மாளிகைக்கு அழைத்து பீர் விருந்து கொடுத்து, சிரித்து பேசி அவர்களை ஒரு வழியாக சமாதானம் செய்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

வெள்ளை மாளிகையின் முன்புறம் உள்ள புல்வெளியில், சுமார் 40 நிமிடங்களுக்கு நீடித்த இந்த பீர் பார்ட்டியை படம் பிடிக்க பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால்,  50 அடி தூரத்தில் இருந்தபடி, சுமார் 40 விநாடிகள் மட்டுமே எடுக்கஅனுமதி அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, ஒபாமா குறிப்பிடுகையில், “எல்லாருக்கும் கோபம் ஏற்படுவது சகஜம் தான். இதற்காக முகத்தை சுளித்து கொண்டு ஒதுங்கி போவதில் பலனில்லை. நாம் கோபப்பட்ட நபரிடமும் நியாயமான
கருத்து இருக்கலாம். அதையும் நாம் பார்க்க வேண்டும். நான் அவசரப்பட்டு காவல்துறை அதிகாரி மீது
தவறான வார்த்தையை உபயோகித்து விட்டேன். தற்போது க்ரோலேவுக்கும், ஹென்ரிக்கும் இடையே
எந்த பிரச்னையும் இருக்காது என நம்புகிறேன்’ என்றார்.

இதைத் தொடர்ந்து ஹென்ரி மீதான வழக்கும் வாபஸ் திரும்ப பெறப்பட்டுள்ளது.

admin @ 9:14 pm
Filed under: American news
DMDK chief meets Naresh Gupta

Posted on Friday 31 July 2009

பர்கூரில் மனுவை ஏற்க வேண்டும்:  தேர்தல் கமிஷனிடம் தே.மு.தி.க., முறையீடு

ர்கூர் தொகுதியில் தே.மு.தி.க., வேட்பாளர் சந்திரனின் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து, தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவை, அக்கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் சந்தித்து முறையிட்டார். விவரங்களைக் கேட்டறிந்த நரேஷ் குப்தா, இது பற்றி தேர்தல் கமிஷனுக்கு எழுதுவதாகவும், அவர்களது பதிலை பெற்று, நாளை (இன்று) முடிவை தெரிவிப்பதாகவும் கூறினார்.

இதுகுறித்து, நிருபர்களிடம் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது:

“பர்கூர் தொகுதி வேட்பாளர் சந்திரனின் மனுவை, தேர்தல் அதிகாரி நிராகரித்ததற்கு அவர் கூறிய காரணம் பொருத்தமானதாக இல்லை. எனவே, இதை மறுபரிசீலனை செய்யுமாறு நரேஷ் குப்தாவிடம் தெரிவித்தேன். விரைவில் இவ்விஷயத்தில் முடிவு எடுப்பதாக அவர் கூறினார். நாளைக்குள் தெரியப்படுத்துவதாகக் கூறினார். மனுவை முன்மொழிந்த பத்து பேரின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் வரிசை எண் சரியாக இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. பட்டியலில் பெயர்கள் இல்லை என்று சொல்லவில்லை. கடந்த 13ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டனர். சட்டசபை தேர்தலுக்கும், லோக்சபா தேர்தலுக்கும் பட்டியலில் வேறுபாடு உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது சிறிய பிழை தான். இதை வைத்து மனுவை நிராகரிக்கும் முடிவுக்கு வந்துவிடக் கூடாது. மனுவை பெறும்போதே அதை அதிகாரிகள் சரிபார்த்திருக்க வேண்டும். நான் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டபோது, சரிபார்த்து தான் வாங்கினர். ஆனால், பர்கூர் தொகுதி அதிகாரி ஏன் அவ்வாறு செய்யவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது. “ஏ’ படிவத்தை தரவில்லை என்கின்றனர். மனுவுடன் “பி’ படிவத்தை தந்துள்ளோம். இதே வேட்பாளர், லோக்சபா தேர்தலில் போட்டியிட்டுள்ளார். மாற்று வேட்பாளரின் மனுவை பரிசீலித்தபோதும், கூறிய தகவல்களை ஏற்க மறுத்துவிட்டனர். இது தேர்தல் விதிகளுக்கு முரணானது. மனுவை நாளைக்குள் ஏற்காவிட்டால், அடுத்த முடிவு குறித்து நாளை மறுநாள் தெரிவிக்கப்படும். சட்டப்படி சிறு தவறு தான். தேர்தல் அதிகாரியின் முடிவை தடுத்து நிறுத்த தேர்தல் கமிஷனருக்கு அதிகாரம் உள்ளது”  என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்..

admin @ 8:35 pm
Filed under: news
Ramnad brothers get Guinness certificate

Posted on Friday 31 July 2009

ராமநாதபுரம் சகோதரர்களின் கின்னஸ் சாதனை

ராமநாதபுரம் சகோதரர்களின் சாதனை கின்னஸ் பட்டியலில் இடம் பெற்று, அதற்கான சான்றிதழை அந்நிறுவனம் அனுப்பியுள்ளது.ராமநாதபுரம் கற்பக விநாயகம் கோவில் அர்ச்சகர் வெங்கட்ராமன், சரோஜா தம்பதியரின் மகன்கள் சுந்தர், சங்கரநாராயணன்.

கடந்த ஜனவரி 31ல் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில், சுந்தர் 398 “ஸ்ட்ராக்களை’ வாய்க்குள் நுழைத்து சாதனை செய்தார்.அவரது தம்பி சங்கரநாராயணன் 2008 ஜனவரி 18ல் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், ஒரே மூச்சில் 151 எரியும் மெழுகுவர்த்திகளை ஊதி அணைத்து சாதனை செய்தார்.

இந்த இரண்டு சாதனைகளும் கின்னஸ் சாதனைக்காக அனுப்பப்பட்டன. பரிசீலனைக்குப் பின், ஜெர்மனியின் சைமன் எல்மோர் செய்த சாதனையை முறியடித்த சுந்தர், ஒரே மூச்சில் மெழுகுவர்த்தியை அணைத்த அவரது தம்பி சங்கரநாராயணனின் சாதனைகள், கின்னஸ் சாதனையில் அங்கீகரிக்கப்பட்டதாக அந்நிறுவனம் இருவருக்கும் சான்றிதழ் அனுப்பியுள்ளது. அதை ராமநாதபுரம்  ஆட்சியர் ஹரிஹரன் இருவருக்கும் வழங்கினார்.

admin @ 3:06 am
Filed under: news
Consensual sex: Men asso., wants changes in IPC-497

Posted on Friday 31 July 2009

இந்திய தண்டனை சட்டம் 497-ல் திருத்தம் செய்ய கோரிக்கை
முதல்வருக்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கடிதம்

ள்ளத்தொடர்பில் ஈடுபடும் ஆண், பெண் இருபாலருக்கும் கடுமையான தண்டனை அளிக்கும் வகையில்,  இந்திய தண்டனை சட்டம் 497-இல் திருத்தம் செய்யவேண்டும் என்று ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்க தலைவர் டி.அருள்துமிலன், பொதுச் செயலாளர் எஸ்.மதுசூதனன் ஆகியோர் முதலமைச்சர் கருணாநிதிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்,

“தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கள்ளத் தொடர்பும் அதனைத் தொடர்ந்த கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது தாங்கள் அறிந்ததே. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான கடந்த ஆட்சியில் கள்ளத் தொடர்பு தொடர்பான குற்றங்களின் தண்டனையை அதிகரிக்கும் நோக்கில் இந்திய தண்டனை சட்டம் 497-ல் சில திருத்தங்களை கொண்டு வர விரும்பியது.

அதற்கான சுற்றறிக்கைகள் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பப்பட்டன. ஆனால், இந்திய கலாச்சாரத்தை வேரோடு புதைக்க எண்ணுகின்ற சில பெண்கள் அமைப்புகளின் எதிர்பால் இந்த சட்டத் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை.

மேலும், இந்திய தண்டனை சட்டம் 497-ல் தவறு செய்யும் பெண்களை பாதிக்கப்பட்டவர்களாக பாவித்து விடுவித்துவிடும் மென்மையான அணுகுமுறையால் இந்த சட்டத்தை மீறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதனால், ஏற்படும் கொலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும், இந்த கள்ளத் தொடர்பால் கணவனை கொல்வது சர்வ சாதாரண கதையாகி பல குடும்பங்கள் சீரழிந்து இந்திய கலாச்சாரத்திற்கே அச்சுறுத்தலாக மாறி வருவதை தங்களின் கனிவான பார்வைக்கு கொண்டு வருகிறேன்.

இந்த நிலையில், தான் பெற்ற மகனை, அவனை பெற்ற தாயே துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கொடுமை நம் தமிழ் சங்கம் வளர்த்த மதுரையில் நடந்துள்ளது.

இந்த கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்கு உரியது. எனவே, முதல்-அமைச்சர் கருணாநிதி, போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு மத்திய அரசை வற்புறுத்தி இந்த பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே இந்திய தண்டனை சட்டம் 497-ல் திருத்தம் செய்து கள்ளத் தொடர்பில் ஈடுபடும் ஆண்-பெண் இருவரும் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தும்படி சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்’’என்று கூறியுள்ளனர்.

admin @ 3:05 am
Filed under: news
Anitha Radhakrishnan MLA resigns

Posted on Friday 31 July 2009

எம்.எல்.ஏ. பதவி: அனிதா ராதாகிருஷ்ணன் ராஜினாமா

திருச்செந்தூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனை கட்சியில் இருந்து நீக்கியதாக ஜெயலலிதா அறிவித்தார்.

இதையடுத்து அவர் முதல் -அமைச்சர் கருணாநிதியை நேற்று சந்தித்துப் பேசினார். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க. வில் சேரப்போவதாக அறிவித்தார்.

அதன்படி இன்று மதியம் 12.25 மணிக்கு அனிதா ராதாகிருஷ்ணன் கோட்டையில் உள்ள சபாநாயகர் அறைக்கு சென்றார். அங்கு சபாநாயகர் ஆவுடையப்பன் முன்னிலையிலேயே தனது ராஜினாமா கடிதத்தை எழுதி கொடுத்தார். அதை சபாநாயகர் ஆவுடையப்பன் ஏற்றுக் கொண்டார்.

இதுகுறித்து சபாநாயகர் ஆவுடையப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக இன்று என்னிடம் நேரில் கடிதம் கொடுத்தார். அது விதிகளின்படி முறையாக உள்ளது. எனவே ஏற்கப்படுகிறது என்றார்.

பின்னர் சபாநாயகர் ஆவுடையப்பனிடம் நிருபர்கள் கேட்டபோது கேள்வியும், அவர் அளித்த பதிலும் வருமாறு:-

கேள்வி:- எஸ்.வி.சேகர் பதவி விலகல் கடிதம் கொடுக்கிறாரா?

பதில்:- இதுவரை தகவல் இல்லை.

கேள்வி:- தற்போது அ.தி.மு.க.வின் பலம் என்ன?

பதில்:- 57 ஆகி இருக்கிறது.

கேள்வி:- செல்வபெருந்தகை ராஜினாமா ஏற்கப்பட்டு விட்டதா?

பதில்:- அவரது ராஜினாமா கடிதம் முறைப்படி இல்லாததால் ஏற்கப்படவில்லை என்று ஏற்கனவே அறிவித்துள்ளேன்.

கேள்வி:- அவர் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லையே?

பதில்:- சட்டசபை எம்.எல். ஏ.க்கள் பதிவேட்டில் கையெழுத்து போட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியே வந்த அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 1 1/2 ஆண்டுகளாக அந்த கட்சியில் இருந்து எனக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகளும் இன்னல்களும் ஏராளம். இதனால் ஏற்பட்ட மன உழைச்சல் காரணமாக சரியாகப் பணியாற்ற முடியாமலும், தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியாமலும் இருந்தது.

இப்போது சிறப்பாக ஆட்சி நடத்தும் ஒரு நல்ல கட்சியான தி.மு.க.வில் இணைந்து பணியாற்றுவதற்காக எனது எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளேன். விரைவில் தமிழக முதல்- அமைச்சர் கலைஞர் கட்டளைப்படியும், துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படியும், தென்மண்டல செயலாளர் மு.க.அழகிரியின் ஆலோசனைப்படியும் தி.மு.க.வில் இணைந்து பணியாற்றுவேன். அதற்கான தேதி விரைவில் தெரியும். தி.மு.க.வில் இணைந்து கட்சி வளர்ச்சிக்காக என்னை அர்ப்பணித்து பணியாற்றுவேன்.

கேள்வி:- வேறு எம்.எல். ஏ.க்கள் யாராவது உங்களுடன் வருகிறார்களா?

பதில்:- இதை அந்தந்த எம்.எல்.ஏ.க்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

admin @ 3:04 am
Filed under: news
Punch Balu

Posted on Friday 31 July 2009

punch-balu‘பஞ்ச்’ பாலு

தயவுசெய்து முதலில் பின்குறிப்பைப் படித்து விடவும்.

பஞ்ச் டயலாக் விடும் பெருந்தலைகளுக்கே பஞ்ச் விடுவது தான் பஞ்ச் பாலுவின் பாலிசி!

அவரு எவ்வளவு பவரு உள்ளவரா இருந்தாலும் பஞ்ச் பாலுக்கிட்ட மாட்டினா பஞ்சு, பஞ்சா பறக்க வேண்டியதுதான்.

பின் குறிப்பு: கண்டிஷன்ஸ் அப்ளை மாதிரி இது என்னடா பின்குறிப்புன்னு பார்க்கறீங்களா. வழக்கமான மேட்டர்தான்.

பஞ்ச் பாலு அடிக்கும் கமெண்டுகள் சும்மா தமாசுக்குத்தான். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் எழுதப்படுவதில்லை.
சும்மா படிச்சுட்டு, ஆங்… அப்படியான்னு ரொம்ப ஈசியா எடுத்துக்கிட்டு போயிடனும். ஓ.கே?

…………………..

என்னை குறிவைத்து வதந்திகளைப் பரப்புவது யார் என்று புரியவில்லை. அப்படி பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது பற்றி என் வக்கீலுடன் கலந்து ஆலோசித்தேன். இதற்கு விரைவில்  முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
- நடிகை த்ரிஷா

அப்போ இனிமே உங்களை யாருடனும் பார்க்க முடியாதா மேடம்?  எங்களுக்கே கஷ்டமா இருக்கே. உங்களுக்கு இது ரொம்ப கஷ்டமாக இருக்காது?

மிகச் சாதாரண தொண்டனாக இருந்த என்னை அரக்கோணம் லோக்சபா தொகுதியில் நிற்க வைத்து, வெற்றி பெற்றதும்,  அதற்கும் மேலாக மத்திய அமைச்சராக்கிய பெருமைக்கு சொந்தக்காரர் முதல்வர் கருணாநிதி.
-  மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன்

சோழியன் குடுமி சும்மா ஆடுமா?  அதற்கும் மேலாக அவருக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று எதிர்க்கட்சியினர் கேட்கிறார்கள். பதில் சொல்ல முடியுமா?

இலங்கைத் தமிழர்கள் பிரச்னைக்குத் தீர்வு காண்பது குறித்து முதல்வர் கருணாநிதியிடம் கேட்பதில் எந்தப் பயனும் இல்லை. இனி அவரிடம் இது குறித்து எதுவும் கேட்க மாட்டோம்.
-பா.ம.க.. நிறுவனர் ராமதாஸ்

அவர் எதிர்பார்ப்பதை நீங்களே செய்துட்டா அப்புறம் என்ன, அவர் பாடு நிம்மதிதான்.

தமிழகத்தை காவிரி கரையை எல்லையாக வைத்து,  இந்திய இறையாண்மைக்கு உட்பட்டு வடதமிழகம், தென் தமிழகம் என இரண்டு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும். இதை வலியுறுத்தி, சென்னையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் விழிப்புணர்வு நடைப்பயணமும் நடத்தப்படும். -வடதமிழகம் -  தென்தமிழகம் கூட்டமைப்பு அறிக்கை

அது எப்படிங்க பெயரளவில் பிரிச்சுக்க வேண்டியது. அதுக்கு கூட்டமைப்புன்னு ஒரு பசைவேற ஒட்டிக்கறது. அரசியல்ல வேற விஷயம் கிடைக்கலைன்னா மக்களைப் பிரிக்க கிளம்பிடறதா. அதுவும்  காவிரியை வச்சு… நாளைக்கு அடிச்சுக்க வசதியாக! எப்படிங்க இப்படியெல்லாம் சூப்பர்  மேட்டரை பிடிக்கிறீங்க?

Punch Balu’s Old punches

2009/07/24 Punch Balu

2009/07/17 Punch Balu

2009/06/20 Punch Balu

2009/06/12 Punch Balu

2009/05/29 Punch Balu

2009/05/22 Punch Balu

2009/05/15 Punch Balu

2009/05/08 Punch Balu

2009/05/01 Punch Balu

2009/04/20 Punch Balu

2009/04/10 Punch Balu

2009/04/03 Punch Balu

 2009/03/27 Punch Balu

2009/03/20 Punch Balu

2009/03/13 Punch Balu

2009/03/06 Punch Balu

2009/02/27 Punch Balu

2009/02/20 Punch Balu

2009/02/13 Punch Balu

2009/02/06 Punch Balu

2009/01/30 Punch Balu

2009/01/23 Punch Balu

2009/01/16 Punch Balu

2009/01/09 Punch Balu

2009/01/02 Punch Balu

2008/12/26 Punch Balu

2008/12/19 Punch Balu

2008/12/12 Punch Balu

2008/12/05 Punch Balu

2008/11/28 Punch Balu

2008/11/21 Punch Balu

2008/11/14 Punch Balu

2008/11/07 Punch Balu

2008/10/31 Punch Balu

2008/10/24 Punch Balu

2008/10/17 Punch Balu

2008/10/10 Punch Balu

2008/10/03 Punch Balu

2008/09/26 Punch Balu

2008/09/19 Punch Balu

admin @ 3:00 am
Filed under: Uncategorized
Contradict decision becomes controversy

Posted on Friday 31 July 2009

aiadmk-flag.jpgஎடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!

தமிழகத்தில் நடக்க இருக்கும் ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அ.தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகள் எடுத்திருக்கும் முடிவு துரதிருஷ்ட வசமானது.

இதற்கு அ.தி.மு.க. செயற்குழு கூறியிருக்கும் காரணங்களைப் பார்ப்போம்.

1. அதிகாரத்தை தி.மு.க. அரசு துஷ்பிரயோகம் செய்கிறது.
2. தேர்தல் தில்லுமுல்லுகள் பலவும் நடத்தப்படுகின்றன.
3. சட்டவிரோத நடவடிக்கைகள் நிகழ்த்தப்படுகின்றன.
4. மின்னணு வாக்குப்பதிவு முறையில் நம்பிக்கை இல்லை. இதில் தவறுகள் நிகழ்கின்றன.
5. இவற்றையெல்லாம் முறையிட்டும் தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை. இவற்றை அர்த்தமற்ற குற்றச்சாட்டுகள் என்றோ, முற்றிலும் ஏற்க முடியாத குற்றச்சாட்டுகள் என்றோ சொல்லிவிட முடியாது.

இந்தக் கோணத்தில் தமிழக மக்களிடையே தி.மு.க. மார்தட்டிக் கொள்ள முடியாத நிலைமையை அ.தி.மு.க. உருவாக்கிவிட்டது. ஐந்து சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்ற பிறகும் அதற்காக தி.மு.க. பெருமைப்பட்டுக் கொள்ளவும் முடியாது. இந்த வகையில் பார்த்தால் தி.மு.க.வின் தேர்தல் ஜாலங்கள் தோலுரிக்கப்பட்டுவிட்டன என்றே கொள்ளலாம்.

அதே நேரத்தில் இத்தகைய முடிவிற்காக அ.தி.மு.க.வைப் பாராட்ட முடியாது.

காரணம், தி.மு.க.வின் தேர்தல் ஜாலங்களை மக்கள் அறிய அரங்கேற்ற வைத்து அதன் சித்து வேலைகளை வெளிச்சம் போட்டுக் காடடக் கிடைத்த அரிய வாய்ப்பை அ.தி.மு.க. நழுவ விட்டுவிட்டது. அ.தி.மு.க. ஆட்சியின்போது சாத்தான் குளம் இடைத்தேர்தலை தி.மு.க. புறக்கணித்ததை அ.தி.மு.க.வும் காப்பியடித்ததை ஒரு நல்ல அரசியல் பதிலடியாகக் கருதமுடியாது.

தி.மு.க. ஆட்சியின்போது சென்னை மாநகராட்சித் தேர்தலைப் புறக்கணித்து, பின்னர் நிகழ்ந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. ஓரளவு இடங்களைக் கைப்பற்றியதே அந்த நம்பிக்கையில் இந்த நடவடிக்கையோ?

அ.தி.மு.க. செயற்குழு ஓர் அறிவார்ந்த குழுவாக இருந்தும் சில முரண்பாடான போக்குகளைக் கடைப்பிடித்திருப்பது வியப்பாக உள்ளது.

தில்லுமுல்லு செய்துதான் ஜெயித்தார்கள் என்பது முழு உண்மையானால் நீங்களும் உங்கள் தோழமைக் கட்சிகளும் பெற்ற பாராளுமன்ற இடங்களை எந்த வகையில் அடக்குவது?

தி.மு.க.வின் துஷ்பிரயோகங்கள் உண்மை என நீங்கள் நம்பினால் வரப்போகும் தமிழகச் சட்டமன்றப் பொதுத் தேர்தல்களையும் இதே பாணியில் புறக்கணிப்பீர்களா?

மின்னணு வாக்குப்பதிவில் தில்லு முல்லு நடக்க வாயப்பே இல்லை; எப்படி நடக்கும் என்று நீங்கள் நிரூபியுங்கள் என்ற தேர்தல் ஆணையத் தொழில்நுட்பப் பொறியாளர்களின் சவாலை ஏற்காமல் பதுங்கு குழிகளைத் தேடியது ஏன்?

இதே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறுகள் தொடர்கின்றன என்று நீங்கள் மனப்பூர்வமாக நம்பினால் பிறகு எந்த நம்பிக்கையில் வரப்போகும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் இதனை எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

தி.மு.க. செய்த தில்லு முல்லுகளைத் தடுக்க தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிற உருப்படியான குற்றச்சாட்டைச் சொன்னீர்களே, உங்கள் தீர்மானங்களிலேயே இதுதான் சிறந்த தீர்மானம்.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!

2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!

2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்

2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி

2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?

2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!

2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!

2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!

2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!

2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!

2009/05/08 நல்ல பூச்சுற்றல்!

2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?

2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!

2009/04/17 மனம் இரங்குவோம்!

2009/04/10 தீயினும் கொடியது காமம்!

2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!

2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!

2009/03/20 அரசியலா, அக்கறையா?

2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?

2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?

2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!

2009/2/20 இறுதி இலக்கு என்ன?

2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!

2009/02/06 சென்று வாருங்கள்!

2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?

2009/01/23 நல்ல ஆரம்பம்!

2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?

2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

admin @ 2:54 am
Filed under: Uncategorized
Share your success

Posted on Friday 31 July 2009

lena-tamilvanan.jpgபிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

வெற்றிகளைப் பங்கு போட்டுக் கொள்ளப் பெருங்கூட்டம் கூடும். இந்த வெற்றியில் என் பங்குதான் முக்கியமானது; உருப்படியானது; திருப்பம் ஏற்படுத்தியது என்று தங்களைத் தனித்துவப்படுத்திக் கொள்வதில் குறிப்பாக இருக்கும் தனி மனிதர்களும் தலைதூக்குவார்கள்.

வெற்றிகளைப் பங்குபோட இப்படிக் கூட்டம் கிளப்ப, தோல்விகளைப் பகிர்ந்து கொள்ள மக்கள் பிடிப்பதோ ஓட்டம்தான். ஆம். தோல்விக்குப் பொறுப்பு ஏற்கிற பெருந்தன்மையும் பொறுப்புணர்வும் நம் சமூகத்தில் மிகக் குறைவே.

இந்தத் தோல்விக்கு முக்கியக் காரணம் நீங்களே என்று நம்மை நோக்கி ஓர் ஆள்காட்டி விரல் திரும்பிவிட்டால் கூட, அப்போது மட்டும் இதற்கு ஆள் சேர்க்கப் பார்க்கிறோம்.

ஒரு கூட்டு முயற்சியின் தோல்வியில் நான் காரணமில்லை. நான் காரணமில்லை என்று எல்லோரும் ஒதுங்கிக் கொண்டால் யார்தான் அத்தோல்விக்குக் காரணம்?

இந்த உலகம் ஒரு முரண்பாடான கொள்கையைக் கடைப்பிடிக்கிறது. “நான்தான் சாதித்தேன்” “நான் தான் செய்து முடித்தேன்” என்று மார்தட்டினால், இந்த வெற்றி உன்னால் நிகழ்ந்ததல்ல தெரியுமா? உன் பங்களிப்பைவிட உன் நிறுவனத்தின் பங்களிப்பு தான் பெரிது என்பது உனக்குத் தெரியுமா? நிறுவனம் இல்லாமல் நீ எங்கிருந்து வந்தாய்? என்ன பேசுகிறாய் நீ?” என்று பிரித்துப் பேச ஆரம்பித்துவிடும்.

மாறாக, “இந்த வெற்றியில் என் சிறுபங்களிப்பும் இருந்திருக்கலாம்” என்று அடக்கி வாசித்தால், “சேச்சே! நீ இல்லாமல் இந்த வெற்றி சாத்தியப்பட்டிருக்காது” என்று இந்த உலகம் தன் உச்சியில் உங்களைத் தூக்கி வைத்துக் கொள்கிறது.

ஒரு பொதுத் தேர்வைப் பொறுப்பெடுத்து சிறு குறை கூட இல்லாமல் நடத்தினார் ஓர் உயர் அதிகாரி. தலைமைக் கல்வி அலுவலர் இதைப் பாராட்டியபோது எல்லோர் ஒத்துழைப்போடும் இது சாத்தியப்பட்டது என்று எளிமை காட்டினார். இது உங்கள் அடக்கத்தைக் காட்டுகிறது என்று இன்னுமொரு மாணிக்கத்தை அவர் தொப்பியில் பதித்தார் கல்வி அலுவலர்.

உலகின் இந்தத் தலைகீழ் விதியைப் புரிந்துகொண்டால் சரி!.

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப்  பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 2:32 am
Filed under: Uncategorized