» Travel around Taiwan .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 26 Jun 2009

Travel around Taiwan

taiwan.jpgதைவான் சென்று வந்தேன்

இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

தைவானிய உணவகத்தில் நான் எதிர்பாராமல் சந்தித்த ஸ்டீவன்சனை ஷான்யானின் குடும்பத்திற்கு அறிமுகப்படுத்தப்போக அவரோ, ஷான்யானின் இரு இளம் மகள்கள் இருவரையும் “என் அலுவலகத்திற்கு வந்து என்னைப் பாருங்கள்” என்று என்னையும் இவர்களது பொற்றோரையும் தவிர்த்துவிட்டு அழைக்க, எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது.

யார் இந்த ஸ்டீவன்சன்? இவரை ஏன் தான் அறிமுகப்படுத்தினோமோ? இந்த ஸ்டீவன்சன் நல்லவரா நாகப்பாம்பா? சிவப்புத்தோல் போர்த்திய கருநாகமா?

நாளை இந்த இளசுகளுக்கு ஏதும் என்றால் பாவம் அல்லவா என்றெல்லாம் ஹமாம் விளம்பரத்தில் வரும் அம்மாவைப் போலக் கண்டபடி கற்பனை செய்துகொண்டு அரண்டு போனேன்.

“எனக்கு ஏன் இப்படியெல்லாம் விபரீதமாகச் சிந்திக்கத் தோன்றியது” என்று என்னிடம் ஒரு கேள்வி கேட்டு வையுங்கள். அதற்கான பதிலையும் உங்களிடம் சொல்லி வைக்கிறேன்.

இந்த ஸ்டீவன்சன் என்னையுமல்லவா சேர்த்து அழைத்திருக்க வேண்டும்? சரி என்னை விடுங்கள். டினு மற்றும் மூன் ஆகிய இரு பெண்களின் தாய் தந்தையுமல்லவா சேர்தது அழைத்திருக்க வேண்டும்? எங்கள் மூவரையும் தவிர்த்தது ஏன்?

இந்த இளசுகளும் விவஸ்தையில்லாமல் உடனே கெக்கேபிக்கே எனச் சிரித்து அழைப்பை ஏற்றுக் கொள்வானேன்?

இந்த அப்பாவிப் பெற்றோரும் இதற்கு உடனே சம்மதிப்பானேன்?

மேற்கும் (ஸ்டீவன்சன்) தூரக் கிழக்கும் (ஷான்யான் குடும்பம்) ஒட்டிக்கொள்ளப் பார்க்க இடையில் அகப்பட்டுக்கொண்ட நான், அவதியில் தூக்கமின்றித் தவிப்பானேன்?

‘வீணாகக் கற்பனை செய்யாதே! தம் நிறுவனத்தில் ஏதும் வேவைவாய்ப்புக் கொடுக்க அழைத்திருப்பார் ஸ்டீவன்சன். வேறுவிதமாக நினைக்கத் தூண்டுவது உன் எழுத்தாளர் மனம், தூங்கு பேசாமல்!” என்று உள்மனம் என்னை ஓர் அதட்டல் போட்டது.

இந்த டினு மூன் பைலை மனத்தளவில் மூடி வைத்துவட்டு உறங்க ஆரம்பிக்கும்முன் ஒரு சிறு நப்பாசை தோன்றியது.

டினுவோ, மூனோ காலையில் சாப்பிட நேரும்போது என்னைச் சந்தித்தால், நீங்களும் வாருங்களேன் எங்களுடன் ஸ்டீவன்சனின் அலுவலகத்திற்கு என்று அழைப்பார்களா?

அதெல்லாம் மாட்டார்கள். உனக்கென்ன அக்கறை இதில்? இளசுகளுடன் தைப்பே நகரை வலம் வரப் பார்க்கிறாயா? படு பேசாமல் என்று ஒரு மனம் மறுபடி அதட்டல் போட சிரமப்பட்டு உறங்கப் பார்க்க, ஊகும்! முடியவில்லை.

தொலைக்காட்டிசியில் பி.பி.சி தவிர எதையும் பார்க்கச் சகிக்கவில்லை. சரிப்பட்டுவராத கலாச்சாரம்; புரியாத மொழி. படுத்தபடி சில சானல்களை உருட்டிக்கொண்டே இருந்துவிட்டு அப்படியே உறங்கிப் போனேன்.

திடீரென விழித்தபோது மணி அதிகாலை 2.30. தொலைக்காட்சியில் பாட்டு ஓடிக்கொண்டே இருக்க, அதை அணைத்துவிட்டு தூக்கத்தின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர ஆரம்பித்தேன்.

காலையில் எழுந்து தயாராகி, ஷான்யான் குடும்பம் சாப்பிட வரும் என்கிற நம்பிக்கையில் உணவகத்தில் கிடந்த இதழ்களைப் புரட்டுவதும் லிப்டை நோக்கி ஒரு பார்வை பார்ப்பதுமாய் இருந்தேன்.

வெட்கத்தைவிட்டு ஸ்டீவன்சன் அலுவலகத்திற்குப் போவது பற்றிய பேச்சை எடுப்பது; அவர்களாக அழைக்காவிடில் நானும் வருகிறேன் என்ற நாமாகச் சேர்ந்துகொள்வது என்று முடிவு செய்தேன்.

ஸ்டீவன்சனை ஒரு பாத்ரூம் சந்திப்பில் (?) கணிக்க முடியவில்லை. இவர்களுடனான சந்திப்பில் ஸ்டீவன்சனை எடை போட்டுவிட்டால் பிறகு, இந்தப் பெண்கள் அவருடன் பழகுவது; சந்திப்பது பற்றி ஏதும் ஆட்சேபிக்காமல் ஒதுங்கிக் கொள்வது என முடிவு செய்தேன்.

உணவுக்குச் சொன்னால் அது உடனே வந்துவிட்டது. மறுபடி முட்டை ஆம்லேட் வேண்டும் என்று ஆர்டர் செய்தேன் நேரத்தை ஓட்ட.

முட்டையில் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் போடவேண்டும்; தோசை போல ஊற்றவேண்டும் என்று ஸ்டூவர்டிடம் சொன்னபோது, “யு மீன் இந்தியன் ஆம்லெட்?” என்றான் தயாராக.

“அடேயப்பா! அதேதான்!” எங்கே இவருக்குப் புரிய வைப்பதற்குள் பிராணனை வாங்கிவிடுவாரோ என்று பார்த்தால் தயாராகப் போடுகிறாரே இந்தப்போடு என்று வியந்தேன்.

இந்தியர்களைத தவிர வேறு எவரும் வெங்காயம், தக்காளி சேர்க்கச் சொல்ல மாட்டார்களாம் ஆம்லெட்டில். அதுவும் சிலராவது வெங்காயம் சேர்க்கச் சொல்வர்களாம். தக்காளி, பச்சை மிளகாய் என்றால் நிச்சயம் இந்தியர்கள்தானாம். ஸ்டீவர்டிடம் பேச்சுக்கொடுத்து, உணவகத்தில் காத்திருந்த நேரத்தை நீட்டித்துக்கொண்டிருக்க, இதை ஒரு சாக்காகப் பயன்படுத்திக்கொண்டேன்.

என் மேசையிலிருந்து இரண்டு மேசை தள்ளி ஒரு வெள்ளைக்கார ஜோடி சாப்பிட்டுக்கொண்டிருந்தது.

இந்த ஜோடியில் ஆணானவர் தன் துணையை ஏதோ சொல்லிச் சமாமானப் படுத்திக்கொண்டே இருக்க, அவளோ இவனின் நீள ஆரம்பித்த கையை விசிறி எறிய, அவன் ஏதோ கெஞ்ச, அவளோ அடங்காமல் கோபம் கொண்டது இரசிக்கத்தக்கதாக இருந்தது. இவர்களை இப்படி உற்றுப் பார்ப்பது நியாயம் அல்ல என்றாலும், அவர்களின் செயல்பாடுகள் ஸ்டூவர்ட் போன்றவர்களைக்கூட கள்ளப்பார்வை பார்க்க வைத்தன.

நேரம் ஓடிக்கொண்டே இருக்க, பொறுமை இழந்தவனாய், வரவேற்பறைக்குச் சென்று ஷான்யான் குடும்பத்துடன் பேசவேண்டும். லைன் போடடுத் தாருங்கள் என்று கேட்க, அவரோ தூக்கி வாரிப் போடும்படியான ஒரு பதிலைச் சொன்னார்.

“அவர்கள் இன்று விடிகாலை அறையைக் காலி செய்துவிட்டுப் போய்விட்டார்கள்!”

என்னது! காலி செய்துவிட்டுப் போய்விட்டார்களா? அதிர்ச்சியில் பாம்பை மிதித்தவனைப்போல் ஆனேன் நான்!

(தொடரும்)

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

Related Posts Title


Leave a Reply