Friday, 26 Jun 2009

Junior Kelvi Pathil

famous-personalties.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

எஸ்.செல்வராஜ், சேலம்-6.

இப்போதெல்லாம் பிள்ளைகள் அக்கறையாகப் படிக்கிறார்களே?

கனவுகள், எதிர்பார்ப்புகள்தாம் காரணம். ஆனால் கூடவே தன்னம்பிக்கைப் பாலையும் சாப்பிடவேண்டும். இதைச் சாப்பிடமாட்டேங்கிறார்கள். அதனால் வரும் குறைபாடுகள்தாம் பெரியவை. இந்தத் தன்னம்பிக்கைப்பாலை ஆவின் நிறுவனம் தராது. ஆசிரியர்கள்தாம் தர வேண்டும். ஆசியர்களே! சம்பளம் வேண்டுமானாலும் கொஞ்சம் கூட்டிக் கூடக் கேளுங்க! ஆனால், தன்னம்பிக்கையை மாணவர்களுக்குத் தர மறந்துவிடாதீங்க!


கே.மணிமாறன், தாம்பரம் கிழக்கு.

உங்கள் வீட்டில் ‘நாய்கள் ஜாக்கிரதை’ போர்டு இருக்கிறதா?

நாயின் படத்தை வரைந்து ‘கவனம்’ என்று மட்டும் எழுதியிருக்கிறேன். இதைப் பாராட்டும் விதமாக என் எதிர் வீட்டுக்காரரும் அப்படியே உருவாக்கியிருக்கிறார்.


எம்.முருகவேல், மதுரை-4.

தமிழக காங்கிரஸின் இன்றைய நிலை?

இக்கட்சிக்கு டயாபடீஸ் பிரச்னை. பசித்தபோது உணவு கிடைக்கவில்லை. உணவு கிடைக்கிறபோது சாப்பாடு ஏற்றுக் கொள்ளவில்லை. பாவம்!


பி.செல்வம், ஆவடி.

உங்களுக்கு யாரையெல்லாம் பிடிக்காது?

யார் முகங்களில் கடுகைப் போட்டால் தாளிப்புச் செய்யலாமோ,அவர்களையெல்லாம்!


எம்.எஸ்.இம்ரான், ராயபுரம்.

உங்களுக்கு இந்தி பிடிக்குமா?

ஓர் உண்மையான இந்தியன் நம் தேசிய மொழிமீது வெறுப்புக் கொள்ள முடியாது. என் பிஞ்சு நெஞ்சில் (அந்தக் காலத்தில்) இந்தி என்பதை நஞ்சுக்கு இணையாகச் சொல்லி விதை விதைத்த திராவிடத் தலைவர்களை எண்ணி இப்போதும் நொந்து கொள்கிறேன்.


சி.ராமதாஸ், சென்னை-50.

யார் யாருக்கு ஹார்ட் அட்டாக் வரும்?

இதைப் பற்றியெல்லாம் மருத்துவர்கள் நிறையவே சொல்லிவிட்டார்கள். தொலைக்காட்சி, வானொலியைத் திருகினால் நாளெல்லாம் மருத்துவர்கள்தாம் பேசுகிறார்கள். நான் மட்டும் ஒன்றைச் சேர்த்துச் சொல்லவா? இதயத்தில் ஈரமில்லாமல் எதற்கெடுத்தாலும் கத்துகிறார்களே அவர்களுக்கும் வரும்.


சி.பாபு, சேலம்.

இலங்கையில் பிரச்னை தீர்த்து இனி அமைதி திரும்புமா?

அப்படித்தான் நம்ப வேண்டியுள்ளது. மொத்தத்தில் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த வாழ்வுக்கு எத்தனை கணக்கிலடங்காக் கனவுகள்!


மு.ஸ்டீபன், திருநெல்வேலி.

அ.இ.அ.தி.மு.க.வில் இளைஞர் பாசறை மற்றும் மகளிர் பாசறைகள் பலன் தரவில்லையே, ஏன்?

இவை மட்டும் திட்டமிட்டு உருவாக்கப்படாமல் போயிருந்தால் தோல்வி நிலவரம் இன்னும் மோசமாயிருந்திருக்கும்.


கே.அஷாப் அலி, தொண்டி.

வீட்டிலிருந்து வெளியேறும் இளம் பெண்களின் நிலை?

இவர்களுள் பலரது கதை, கட்டுப்பாட்டு அறையின் தொடர்பைத் துண்டித்துக் கொண்ட ஒரு விமானத்தின் கதை! எங்காவது விழுந்து நொறுங்கிய பிறகுதான் உரியவர்களுக்குச் சேதி கிடைக்கும். இவர்களின் பின் கதையை அறிய எந்தக் கறுப்புப் பெட்டியும் கிடைக்காது.


தேனிசந்திரா, பட்டாபிராம்.

நீங்கள் சீனியர் சிட்டிசன்தானே?

இதில்கூட நான் ஜூனியர்தான்! உள்ளத் தேடுதல் உள்ளவரை இதயத்தில் இளமை உணர்வு உள்ளவரை ஒருவருக்கு வயோதிகம் என்பது இல்லை. இதை ஞாபகத்தில் நிறுத்துங்கள்.


எம்.சக்திவேல், கரூர்.

ராமதாஸின் ஜாதகம் இனி எப்படியிருக்கும்?

இனி இறங்குமுகமாகவே இருக்கலாம். சீக்கிரமே சட்டமன்றத் தேர்தல் வரும் என்கிறார் ராமதாஸ் அதெப்படி வரும்? இதென்ன பொருளற்ற எதிர்பார்ப்பு.


ஏ.மணிகண்டமணி, திருவாரூர்.

புகழ்மிக்கவர்களின் மனநிலை என்ன? புகழை இவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்?

புகழ் என்பது ஒருவருக்கு கனமான அணிகலன் மாதிரி. அணிகலன் ஒருவிதத்தில் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், இன்னொரு விதத்தில் அது பாரம்தான்! அளவுக்கு அதிகமானால் அணிகலனும் பயத்தையும் சேர்த்துத் தரவல்லதுதான்.


எஸ்.ராணிசந்திரா, ஆவடி.

சானியா திருமணத்திற்குப் பிறகு சோபிப்பாரா?

கணவர் சோரப் சைகால் ஊக்குவிப்பாரா? பிள்ளை குட்டியைப் பெத்துக்கிட்டு சமையல் கட்டில் கிட என்பாரா என்பதைப் பொருத்த விஷயம் இது. 22 வயதிலேயே திருமணம் என்பது இவரது டென்னிஸ் விளையாட்டின் மென்னியை முறிக்கும் முடிவு என்றே படுகிறது.


மு.ராஜேஷ், பெங்களூரு-4.

தோனி-சேவாக் மோதல் உண்மைதானா?

உண்மைதான். சேவாக்கின் தோள்பட்டைக் காயம் தோனிக்குக் கிடைத்த நல்ல சாக்கு. சேவாக் குணமான பிறகும் வாய்ப்புத் தராவிட்டால் இந்திய அணிக்கு மிகப்பெரிய கெடுதலை தோனி செய்வதாக அர்த்தம்.


எஸ்.நீலாமணி, ஆலந்தூர்.

தமிழகத்தின் பத்ரிநாத், விஜய் முரளிக்குக் கிடைத்த வாய்ப்புக்கு வாழ்த்துங்கப்பா!

ஹாய் கைஸ்! தமிழகத்தின் பெயரைக் காப்பாத்துங்கப்பா!


பி.சிவசரண், குன்றத்தூர்.

இயக்குநர் தருண் கோபி நடிகர்களை திட்டுகிறாரே?

தருண் கோபிக்கு நாவடக்கம் தேவை. திறமை மட்டுமே திரையுலகிற்குப் போதாது. அடக்கமும் தேவை.


கே. ராஜ்திலக், விஜயவாடா.

ஒபாமா இந்தியா - பாகிஸ்தானின் பேச்சுவார்த்தைக்கு வற்புறுத்துகிறாரே?

ஒபாமா தமக்குக் கொம்பு முளைத்ததுபோல பேச ஆரம்பித்திருப்பது வியப்புதான். இதற்கெல்லாம் பாகிஸ்தான் அடிபணியலாம். இந்தியா மாட்டாது!


கே. சங்கரிபுத்திரன், அகமதாபாத்.

பா.ம.க.வின் போக்கில் மாற்றம் தெரிகிறதா?

ஓரளவு தெரிகிறது. பாரதிய ஜனதாவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தோல்வியை ஆராய ஆரம்பித்துவிட்டன. பா.ம.க. மட்டும் கணினியில் குறை உள்ளதாகவே பேசிக் கொண்டிருக்கிறது.


மு. சிவகுமார், ஈப்போ.

இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது ஏன்?

இந்தியர்களைத் தாக்கும் ஆஸ்திரேலியர்கள் வெள்ளை நிறத்தவர்களே. ஆஸ்திரேலியக் கறுப்பினத்தவர் தாக்குவது இல்லை. எனவே, நிறவெறி என்பது தெளிவு. படிப்பதில் நம்மவர்கள் சூரர்கள். சம்பாதிப்பதில், சேமிப்பதில் சமர்த்தர்கள். இவற்றில் எரிச்சலடைந்து வன்முறையில் இறங்குகிறார்கள். ஆஸ்திரேலியா தம் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்கிறது. மேல்படிப்பிற்கு வேறு நாடா இல்லை?


கே.ஜான், சேலம்-4.

மகளிர் இட ஒதுக்கீடு எப்படியும் நிறைவேறி விடுமல்லவா?

ஓர் ஆணாக இருந்தும் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்கள். பாராட்டுகிறேன்! இதுவரை கண்துடைப்பாக நடந்து வந்த இந்த விஷயம் நெருக்கிக் கொண்டு வரப்பட்டுவிட்டது. காங்கிரஸின் மெஜாரிட்டி, காங்கிரஸின் தலைமைப்பதவியில் உள்ள பெண்மணி இவற்றை இணைத்துப் பார்க்கும்போது நிறைவேறியே தீரும் என்று தோன்றுகிறது.


ஞா. செல்வமணி, விளாத்திகுளம்.

நயன்தாரா தமிழ்நாடு மருமகளாகி விடுவார் போலிருக்கிறதே?

கொங்கணியும் கேரளாவும் இணைகின்றன. ஆனாலும் இவரைத் தமிழ்நாட்டு மருமகள் எனலாம். ஆனால், பச்சைத் துரோகங்கள் இன்று சர்வ சாதாரணமாகிவிட்டன.

19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்

Related Posts Title


2 Responses to “Junior Kelvi Pathil”

  1. Barathy

    எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! - 50,000 tamils were killed, 30,000 tamils were amputated and 300,000 tamils were displaced to concentration camps by Sri Lankan army with the help of INDIA!

    எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது!! - Tamils who are still alive are being tortured, raped and killed day by day with the blessing of INDIA!!

    May God Krishna “bless” India, Kalkandu and Junior Tamilvanan!!!

  2. keezhai.a.kathirvel

    veettai vittu veliyerum pengal kuriththa thangalin pathil miga sirappu

Leave a Reply