Friday, 26 Jun 2009
தோன்றுவதையெல்லாம் சொல்வதா?
நாம் பயன்படுத்தும் வாகனங்கள் எல்லாம் ஏதோ ஒரு வடிவில் வடிகட்டிகளைக் கொண்டவை. நம் இல்லத்து அடுக்களைகள் அனைத்தும் விதவிதமான வடிகட்டிகளைக் கொணடவையே.
இப்படி நம்மைச் சுற்றிப் பல வடிகட்டிகள் இருக்க, ஆனால் நம் மனத்திற்கும் வாய்க்கும் நடுவே மட்டும் ஏனோ நாம் ஒரு வடிகட்டியை வைத்துக் கொள்வது இல்லை.
என்ன பேசுகிறோம் என்பதை உணராமலே பேசுகிறவர்கள் பலர். தகாத வார்த்தை ஒன்றைப் பயன்படுத்தி நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்களையே கோபித்துக் கொண்டுவிட்டு அதற்காக இவர்களிடம் பலமுறை மன்னிப்புக் கேட்பவர்களையும் பார்க்கிறோம்.
இந்த வார்த்தையால் உறவே அறுந்துபோக, இதனால் வாழ்நாளெல்லாம் வருத்தப்படுகிறவர்களும் உண்டு. மனம் ஒரு குரங்கு. அதன் செயல்களில், சிந்தனைகளில் எல்லா நேரங்களிலும் தர்க்கம் இருக்குமென்பது சொல்ல முடியாது. இத்தகைய வேளையில்தான் நாம் கற்ற கல்வி, நம் பண்பாடுகள், மனித நேயம், உலக நாகரிகம் ஆகியவற்றையெல்லாம் வடிகட்டிகளாக மாற்றி நாம் எண்ணியது சரிதானா? மேற்சொன்ன இந்த வடிகட்டிகளைத் தாண்டி நம் எண்ணத்தில் தோனிறயவற்றைச் சொல்வது பொருத்தமாகுமா என்றெல்லாம் மனத்திற்குள் ஒரு மாநாடு நடத்த வேண்டும்.
உள்ளம் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கும் போது சொல்லப்பட்ட வடிகட்டிகளெல்லாம் இந்தச் சூட்டில் எரிந்து கருகிப் போகின்றன. எனவேதான் எந்தவித வடிகட்டல்களும் இல்லாமல் வார்த்தைகள் அப்படியே வெளிவந்து விழுந்து சாக்கடையாக அமிலமாக மாறுகின்றன.
இனி உன்னிப்பாகக் கவனித்துப் பாருங்கள். உங்கள் எண்ணத்தில் உருவாகும் முதற்கருத்து பெரும்பாலும் பக்குவமற்று பண்பாடற்று காணப்படும். இரண்டாவது கருத்தோ அந்த எண்ணத்தை மேம்படுத்தும்.
அதாவது, வேண்டாம் வேண்டாம்! இதைச் சொல்லித் தொலைக்காதே! உன்னை இது இன்ன விதத்தில் பாதிக்கும் என்பதை உணர்த்தும்.
மனத்தின் இரண்டாவது கருத்தையும் அவசியம் பரிசீலியுங்கள்!.
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?
2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?
2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!
2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!
2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!
2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?
2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!
2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!
2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!
2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!
2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?
2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!
2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?
2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?
2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!
2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்
2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்
2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை
2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்
2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!
2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?
2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!
2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!
2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?
2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!
2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!
2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்
2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!
2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?
2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!
2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!
2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!
2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?
2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்
2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!
2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!
2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?
2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!
2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?
2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்
2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!
2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!
2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!
2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!
2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!
2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!
2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?
2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!
2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!
2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?
2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!
2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?
2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!
2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!
2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?
2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!
2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?
2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?
2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!
2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?
2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?
2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்
































