Friday, 26 Jun 2009
நட்டாற்றில் கவிழ்த்த தோனி
இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் தோனியின் அதிர்ஷ்டத்திற்கு ஒரு முடிவு வந்துவிட்டது.
சொத்தை அணிகள் என்று கருதவல்ல அணிகள்கூட இந்தியாவை வெளியேற்றிவிட்டன.
கடந்த ஆண்டு சேம்பியனாக விளங்கிய ஓர் அணிக்கு இப்படிப்பட்ட வெளியேற்றம் கெளரவமாக இல்லை.
தோல்விக்கு தோனி எடுத்த தவறான முடிவுகளே காரணம் என்று மதன்லால, ரவிசாஸ்திரி, கவாஸ்கர் போன்ற மிகச் சிறந்த முன்னாள் வீரர்களே விமர்சித்து உள்ளனர்.
ஆர்.பி.சிங், கடந்த ஐ.பி.எல். தொடரின் சிறந்த பந்துவீச்சு நாயகர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் சரிவரப் பயன்படுத்தப்படவில்லை.
யுவராஜுக்கு முன்னதாக ரவீந்திர ஜடேஜாவைக் களமிறக்கியது தவறு. நல்ல வீரரான யுவராஜ் நெருக்கடியான நேரத்தில் அடித்து ஆடவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகப்பட்டார்.
டாஸ் வென்ற பிறகும் இங்கிலாந்தை முதலில் களமிறக்கிய முடிவும் தவறு.
இங்கிலாந்து அப்படி ஒன்றும் மிரட்டலான ஸ்கோரை எடுத்துவிடவில்லை. எட்டக்கூடிய ஸ்கோர்தான். ஆனால் இங்கிலாந்தின் பந்துவீச்சு புத்திசாலித்தனமாக இருந்தது. ஒரே ஒரு விளாசுதான். ஒரு பெளண்டரி மட்டும் எடுத்திருந்தால் வெற்றிதான்.
ஆனால் நம்மவர்கள் ஏதோ சீட்டுக்கட்டை ஊதிவிட்டால் வரிசைக்குச் சாயுமே அப்படிச் சாய்ந்தார்கள்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் பிராவோவையும், இங்கிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் பீட்டர்சனையும் நம் பந்துவீச்சாளர்கள் நாயகர்களாக ஆக்கிவிட்டார்கள்.
இத்தோல்விக்கு எவரும் சந்தித்திராத புதுக்காரணம் ஒன்றைச் சொல்லியிருக்கிறார் இந்திய அணியின் பயிற்சியாளர் கேரி கர்ஸ்டன்.
ஐ.பி.எல். எனப்படும் பணத்திற்காக மட்டுமே விளையாடப்படும் 20/20 ஆட்டத்தில் பல ஆட்டக்காரர்களின் கவனம் தீவிரமாகத் திரும்பிவிட்டதும், இவர்களது ஆற்றல்கள் இதிலேயே விரயமாகிவிட்டதும் இவர் சொல்லும் காரணங்களாகும்.
இதைச் சுலபத்தில் புறந்தள்ளிவிடுவதற்கில்லை.
தோனி என்னதான் மன்னிப்பு கேட்டாலும் வருந்தினாலும் கிரிக்கெட் இரசிகர்களுக்கு இந்தத் தோல்வியை ஜீரணிக்கப் பல காலம் ஆகும்.
குறிப்பாக, கிரிக்கெட்டின் மீது மிதமிஞ்சிய மோகம் கொண்டவர்களுக்கு இந்தத் தோல்வி பெரிய அதிர்ச்சியைத் தந்திருக்கிறது.
இவர்களுள் ஒரு பிரிவினர் தோனியின் உருவப் பொம்மையை எரிக்குமளவு துணிந்துவிட்டார்கள்.
கிரிக்கெட்டின் மீதான மிதமிஞ்சிய ஈடுபாடு உடையவர்கள் இந்தத் தோல்வியைச் சாக்காக வைத்தே தங்கள் ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்வது நல்லது.
லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்
2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?
2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!
2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!
2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!
2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!
2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!
2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?
2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!
2009/04/10 தீயினும் கொடியது காமம்!
2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!
2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!
2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?
2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?
2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!
2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!
2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?
2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?
2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?
2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்
2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?
2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…
2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!
2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!
2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்
2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!
2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!
2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!
2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!
2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!
2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!
2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..
2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்
2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?
2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்
2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?
2008/09/05 இருபக்க இடைவெளிகள்!
2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!
2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்
2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!
2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்
2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு
2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்
2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?
2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…
2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!
2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!
2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!
2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!
2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?
2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?
2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?
2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!
2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!
2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!
2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!
2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?
2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!
2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?
































