Wednesday, 24 Jun 2009
விபரீத விளையாட்டுகள் ஆறு!

காலம் மாறிப் போச்சுங்க. எத்தனை நாளைக்குத்தான் பழைய விளையாட்டுகளையே விளையாடிக் கொண்டிருப்பது. புதுசா என்னவாச்சும் செய்யவேண்டாமா என்ற சிந்தனை கொண்டவர்கள் புதிய விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள். அப்படிப்பட்ட விளையாட்டுகள் நிறைய இருந்தாலும் நாம் குறிப்பிடும் ஆறு விளையாட்டு அதில் ‘டாப்’ பானவை. பார்க்கலாமா.
1.இதுவும் கிட்டத்தட்ட குதிரை சவாரி போலத்தான். ஆனால், இதை கடலில்தான் விளையாட முடியும். மூக்கணாங்கயிறு மாட்டிய டால்பின் முதுகில் ஏறி கடல் சவாரி செய்தால் எத்தனை த்ரில்லாக இருக்கும்.

2.இது ‘ஸ்டண்ட் போகோ’ எனப்படுகிறது. இளைஞர்கள் தாத்தாவின் தடிப் போன்ற ஒன்றை எடுத்துக் கொள்கிறார்கள். ஓடி வரவேண்டியது தடியை ஊன்றி அப்படியே ஒரே தாவல். இப்படி தாவித் தாவி போகவேண்டிய இடத்துக்கு போய்ச் சேரவேண்டியதுதான். இடையில் ஏதாவது சுவர் வந்தால், அதற்கும் காலால் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு பயணத்தைத் தொடர்வது மேற்கத்தைய இளைஞர்களின் த்ரில்
விளையாட்டாகி விட்டது. எளிதான தவ்வ ப்ளைபார் அடியில் ஸ்பிரிங் ஒன்றை பொருத்தியிருக்கிறார்கள். நியுயார்க் நகர வீதிகளில் இப்படிப் போகும் நிறைய இளைஞர்களைக் காணலாம்.

3.இது டெர்ட் சர்ஃபிங். கடலில் செய்யப்படும் டால்பின் சவாரி போல இது தரையில் செய்யப்படும் சர்ஃபிங் விளையாட்டு. சாலை, பூங்கா, மேடு, பள்ளம் எதுவும் தடை கிடையாது. கண்ணில் படும் இடத்தில் எல்லாம் உருண்டு புரண்டு செல்லலாம். சர்ஃபிங் பிளேட்டின் முன்னும் பின்னும் இரு டயர்கள் இருக்கும் (சைக்கிளை தலைகீழாக வைத்ததுபோல் இருக்கிறது) இவை நம் விருப்பப்படி திரும்ப உதவுகிறது.
4.இது பவர் பாக்கிங் விளையாட்டு. காலில் கட்டிக்கொள்ளும் ஸ்பிரிங் போன்ற அமைப்பு மூலம் படுவேகத்தில் குதித்து குதித்து மேலே எழும்புவதுதான் இந்த விளையாட்டு. அது எவ்வளவு வேகம், எத்தனை தூரம் என்பதில்தான் த்ரில்லாம். குதிக்க குதிக்க நாம் மேலே சென்று வரும் உயரம் அதிகரித்துக்கொண்டே இருக்கும். ஸ்கிப்பிங் போல என்றாலும் இது அவ்வளவு எளிதல்ல. பயிற்சி இல்லாமல் செய்ய முடியாது.

5.இது ‘ஃப்ரீ ஸ்டைல் வாக்கிங்’ விளையாட்டு. எட்டு டூ 14 வயது சிறுவர்கள் சாலையில் போகும்போது சாலையில் மட்டும் போகாமல் எதிரே வரும் ப்ளாட்பார்ம், கம்பங்கள், படிக்கட்டுகள் எனத் தாவித் தாவி செல்வார்கள் இல்லையா அதேதான் இது. மேலும், இதில் சாதாரணமாக நடந்தே செல்ல மாட்டார்கள். தாவி, குதித்து, ஓடுவது, ஏறி குதித்து ஓடுவது என கலக்கலாக இருக்கலாம். என்னடா இது பைத்தியக்காரத்தனமா இருக்குன்னு பார்க்கறீ்ங்க. இந்த பைத்தியக்காரத்தனத்தை செய்வதற்கே ஒரு கிளப் ஒன்றை உருவாக்கி வாழ்க்கையை ஜாலியாகக் கடக்கிறார்கள் அமெரிக்கர்கள்.

6.பாறை மேல், அத்தனை உயரத்தில் ஒருத்தர் என்ன செய்கிறார்னு பார்க்கறீங்களா. தன்னுடைய சட்டைக்கு அயர்ன் பண்ண மனைவி மறுத்துவிட்டதால் பாறை உச்சிக்குப் போய் தானே அயர்ன் செய்து கொள்கிறார். அட, அப்படியெல்லாம் இல்லீங்க. இது ஒரு விளையாட்டுங்க. இதுபோன்ற உயரமான இடம் என்றில்லை, போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையின் நடுவில், போட் டில் சென்றுகொண்டே, வாகனத்தில் சென்றுகொண்டே, மலை உச்சியில் இருந்து இறங்கிக்கொண்டே, அருவிக்கும் மலைக்கும் இடையில் தொங்கியபடி, குகைக்குள் என்று அயர்ன் செய்யமுடியாத இடத்தில் எல்லாம் அயர்ன் செய்வதுதான் இந்த விளையாட்டு.
































