Tuesday, 23 Jun 2009
நடிக்க சான்ஸ் கேட்டு மிரட்டிய ஸ்லம்டாக் மில்லியனர் நாயகன் கைது!

மிரட்டல்களில் பல வகை. அதில், இது புதுவகை. ஆஸ்கார் விருது பெற்ற படமான ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்த நடிகர் அஜீத் பாண்டே நடிக்க வாய்ப்பு கேட்டு தயாரி்ப்பாளர் ராமானந்த் சாகரை தொலைபேசியில் மிரட்டியதாக கைது செய்யப்பட்டார்.
பிரபல சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் ராமானந்த் சாகர். இவருடைய நிறுவனத்துக்கு கடந்த மே மாதம் ஒரு அனாமத்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர் தன்னை ஹூஸ்ரி என்று கூறிக்கொண்டார். பிரபல தாதாவான ஷோட்டா சகிலின் நண்பர் என்றும், உங்கள் நிறுவனம் எடுக்கும் சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்த அஜீத் பாண்டேவுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று கேட்டிருக்கின்றார். அதுமட்டுமல்லாமல் தனக்கு ரூ.20 லட்சம் பணம் தர வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கொலையும் செய்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
மும்பை காவல்துறையின் விசாரணையில் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தது நடிகர் அஜீத் பாண்டே தான் என்பது தெரியவந்தது.
இது குறித்து காவல்துறை துணை ஆணையர் ராகேஷ் மரியா கூறுகையில்,
”கடந்த மே 24ஆம் தேதி அஜீத் பாண்டே போன் செய்து இவ்வாறு மிரட்டியிருக்கிறார். தன்னை ஹூஸ்ரி என்றும் கூறியிருக்கிறார்” என்றார்.
அஜீத் பாண்டேவை அவர் பயன்படுத்திய செல்போனின் சிம்கார்டு காட்டிக் கொடுத்துவிட்டது. கைது செய்யப்பட்ட அவர், உள்ளூர் நீதிமன்றத்தால் ஜூன் 27 வரை காவல்துறை விசாரணையில் வைக்கப்பட்டுள்ளார்.

































June 24th, 2009 at 1:14 am
Hi everybody
who is reporting this news?
the hero of slum dog millionaire was Dev Patel. He is from UK. He is not involved in this “Ajit Pandey” story.
please check the details before publishing it
June 24th, 2009 at 2:11 am
Yes, Mr. Ali…you are right. Now we have published corrected news. Thank you.