தைவான் சென்று வந்தேன்
உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
அடப்பாவி மனுஷா ஸ்டீவன்சா! ஒரு நாட்டின் உணவைப்பற்றிய கடுமையான விமரிசனத்தை இப்படியா உரியவரிடம் போட்டு உடைப்பது?
வெளிப்படையாக இருப்பது வெள்ளைக்காரத்தனமாக இருக்கலாம். ஆனால் உரியவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பது பற்றி அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டாமா?
ஷான்யான் ஒரு வழி ஆகிவிட்டார். நான் தைவானிய உணவின் நெடி தாங்கமுடியாமல்தான் கழிவறையில் நேரம் ஓட்டுகிறேன் என்பது ஷான்யானுக்கே அதிர்ச்சி போலும்!
“எங்கள் நாட்டு உணவு அப்படியா மணம் (?) வீசுகிறது?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார் ஷான்யான்.
ஏகமாய் நெளிந்தேன் நான். அசட்டுச் சிரிப்பையும் இணைத்துக் கொண்டு சொன்னேன் “வித்தியாசமான மணம் அல்லவா? அதனால் சற்றுக் கஷ்டமாக இருக்கிறது”
“உங்களை எங்கள் நாட்டு உணவு கொடுத்து நன்கு உபசரிக்கத்தானே இங்கு அழைத்து வந்தேன். ஒய்.எம்.சி.ஏ.வில் வழக்கமான ஐரோப்பிய உணவையே சாப்பிட்டு உங்கள் நாக்கு ருசித் தன்மையே இழந்து போயிருக்கும் என்றல்லவா இங்கு அழைத்து வந்தேன்!
திடீரென முகம் மாறி, “பரவாயில்லை ஆர்டரை கேன்சல் செய்கிறேன். உங்களுக்குப் பிடிக்காத ஓட்டலில் எங்களுக்கென்ன வயிற்றை நிரப்பவேண்டிய கட்டாயம்?”
“அடப்பாவி மனுஷா!” (இவருமா?) ஆர்டர் செய்த உணவை இரத்து செய்வதா? என்னாவது! பில் எவ்வளவு வரும்! ‘ஏன்யா இதற்குப் போய் இவ்வளவு டென்ஷன் ஆகுறே?’
சொல்லவில்லை, மனத்திற்குள் நினைத்தேன்.
“வாருங்கள் ஷான்யான் அப்செட் ஆகாதீர்கள். அப்படி ஒன்றும் தாங்கமுடியாத மணமல்ல. தைவானுக்கு வந்த புதிதில் கஷ்டமாக இருந்தது. இப்போது பழகிவிட்டது. ஸ்டீவன்சன் நீங்களும் சாப்பிட வாருங்களேன்!”
“ஓ! நோ!” அலறியபடி மறுத்தார். “புறப்படுகிறேன் எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் அவசரமாகப் போக வேண்டும். நீங்கள் தொடருங்கள். நான் புறப்படுகிறேன். உங்கள் குடும்பத்தினரை மட்டும் அறிமுகம் செய்யுங்கள் ஷான்யான்.”
“வாருங்கள்” என்றார் ஷான்யான். இரு இளம் பெண்கள், ஓர் இளம் தாய் என்றதும் ஸ்டீவன்சன் உற்சாகமாகிவிட்டார் என்று தோன்றியது.
அனைவரோடும் கைகுலுக்கியவர் என்ன நினைத்தாரே தெரியவில்லை. ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்துவிட்டார்.
“யோவ்! ஸ்டீவன்சா! அவசரமாகப் போகணும்னியேய்யா!” என்று ஸ்டீவன்சன் செயலை என் மனம் ஏனோ ஆட்சேபித்தது.
டினு, மூன் இருவரும் பாசமான, நன்கு பழகும் பெண்மணிகள்; கலகலப்பான பேர்வழிகள் என்பதால் எப்படிப்பட்டவர்களையும் ஈர்த்துவிடுவார்கள் போலிருக்கிறது என்று தோன்றியது.
‘யோவ்! உணவின் நாற்றம் தாங்க முடியவலையேன்னிய்யா!’ மறுபடி என் மனம் அவரை மானசீகமாகக் கிளப்பியது.
இது என்ன அற்ப உணர்வு! அவர் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் போகட்டுமே! உனக்குள் ஏதோ ஏன் பொசுங்குகிறது? என்றது என் உள் மனம்.
“நீங்களும் சாப்பிடுங்க” என அந்த இரு இளசுகளும் வற்புறுத்த அதில் ஒரு ஸ்பூன், இதில் ஒரு ஸ்பூன் என்று ருசிபார்க்க ஆரம்பித்தவர், ஊழியரைக் கூப்பிட்டு “எனக்கு ஒரு தட்டுக் கொண்டு வாங்க” என்றாரே பார்க்கலாம்.
ஷான்யான் குடும்பத்திற்கு ஸ்டீவன்சன் அறிமுகக் காரணமாக இருந்ததன் மூலம் இவர்களுக்கு மிகவும் உபத்திரவம் கொடுத்து விட்டேனோ என்றுகூட எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது.
உள்ளுக்குள் என்ன நினைத்தார்களே ஷான்யான் குடும்பத்தினர் ஸ்டீவன்சனை வேண்டா வெறுப்புடன் உபசரிப்பதாக நான் நினைக்க முடியவில்லை. அவ்வளவு பக்குவமாக நடந்து கொண்டார்கள்.
எனக்கு வந்த உணவு மூக்கை ஒரு கையில் பிடித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தில்தான் இருந்தது. மூனின் பக்கத்தில் இருந்த இலை தழைகளுடன் கூடிய சிறு சோள (Baby corn) உணவு அவ்வளவாக நாற்றம் வீசாமல் இருந்ததால் “அதைக் தாருங்கள்” என்று கேட்டு வாங்கினேன். மிளகுத்தூள் போட்டு சற்றே குழக்குழ என்று தயாரித்து வைத்திருந்தார்கள். பரவாயில்லை சாப்பிடும்படி இருந்தது. எனக்கோ தூக்கம் சொக்கித் தள்ள ஸ்டீவன்சன் ஊர்க்கதைகளையெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்.
அதோடு விடாமல், டினுவையும், மூனுவையும் “எங்கள் அலவலகத்திற்கு வாருங்கள் நாளைக்கு” என்று வேறு அழைத்தார்.
ஏன் எதற்கு என்றெல்லாம் நான் கேட்டுக் கொள்ளவில்லையே தவிர, இந்த ஸ்டீவன்சன் நல்லவரா, கெட்டவரா? எப்படிப்பட்டவர்? எதற்காகத் தன் அலுவலகத்திற்கு இந்தப் பெண்களைக் கூப்பிடுகிறார் என்று தெரியவில்லையே என்று எண்ண ஆரம்பித்தபோது என் தூக்கம் கிட்டத்தட்ட கலைந்து விட்டது!
ஷான்யான் தம்பதியும் சென்றுவா மகள்களே! என்கிற பாணியில் ஊக்கப்படுத்த என்ன இருந்தாலும் இப்படி ஓர் அப்பாவித்தனம் கூடாது இந்த ஷான்யான் தம்பதிக்கு என்று தோன்றியது.
“நீங்களும் போய் வாருங்கள்” என்னை ஷான்யான் தம்பதி என்று இணைக்க ஸ்டீவன்சன் அதை மறுத்தார்.
“வேண்டாம். நீங்கள் உங்கள் வேலைகளை ஏன் கெடுத்துக் (?) கொள்கிறீர்கள்? இவர்கள் மட்டும் வரட்டும்?” என்று ஸ்டீவன்சன் என்னைத் தவிர்த்த போதுதான் ஸ்டீவன்சன் மெல்ல தன் நிறத்திலிருந்து வெளுக்க ஆரம்பிக்கிறாரே என்று எண்ணத் தோன்றியது.
இன்று இரவே வில்லனாக மாறி இதைக் தடுப்பதா, இந்த விஷயத்திலிருந்து ஒதுங்கிக் கொள்வதா என்று மனம் பட்டிமன்றம் நடத்த..
இந்த நினைப்பில் ஏற்பட்ட மனப்போராட்டம் வித்தியாசமானது.
சே! ஸ்டீவன்சனைப் பற்றி ஏன் தவறாக நினைக்க வேண்டும்? வேலை, படிப்பு தொடர்பாக இவர்களுக்கு உதவ நினைத்தால், அதற்கு நாம் ஏன் குறுக்காக நிற்கவேண்டும்? என்று ஒரு நினைப்புச் சொல்ல,
இவர்களைத் தடுக்க நீ யார்? உன் வேலையைப் பார்த்துக் கொண்டு நீ போவியா பெரிசா வந்துட்டே என்று இன்னொரு நினைப்பு அதற்குத் தீ வைத்தது.
இந்த மனப்போராட்டத்தில் உறக்கமே சாமானியத்தில் வரமறுத்தது.
(தொடரும்)
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Related Posts Title































