» Oppose for woman rights? .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 19 Jun 2009

Oppose for woman rights?

indian-ladies.jpgபெண்களுக்கா உரிமை மறுப்பது?

பதவி ஏற்ற 100 நாள்களுக்குள் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை எப்படியும் நிறைவேற்றுவது என்பதில் புதிய அரசு குறிப்பாக உள்ளது என்கிறார்கள் நம்புவோம்.

குடியரசுத் தலைவரின் உரை இந்த உணர்வை உறுதி செய்தாலும் சிலரது எதிர்ப்புகளை மையப்படுத்தி மத்திய அரசு இதிலிருந்து தப்பிக்கப் பார்க்குமா என்கிற ஐயமும் எழாமல் இல்லை.

இதனைச் செயல்படுத்த வேண்டிய நிலைக்குழு புதிய பாராளுமன்றம் உருவானதுமே கலைக்கப்பட்டுவிடுவது என்ன வழக்கமோ தெரியவில்லை. கழன்று கொள்ளும் உத்தியில் இதுவும் ஒன்றா என்றும் ஐயுற வேண்டியுள்ளது. புதிய நிலைக்குழு நியமிக்கப்படும்போது கருத்து வேறுபாடுகள் வலுவடைந்தால் மறுபடி தடங்கல்களும் முடங்கல்களும் உருவாக வாய்ப்பு உள்ளது.

வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு பற்றிய சட்ட மசோதா உருவாகிவிட்டது. ஆனால் எதிர்ப்பு பலமாக இருந்ததால் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

இந்தக் காலக்கட்டத்தில் இதற்காக உழைத்த தமிழக அரசியல் பிரமுகர் சுதர்சன் நாச்சியப்பனின் பங்குப் பணி சாதாரணமானதல்ல. கிட்டத்தட்ட 90 சதவிகித சம்பிரதாயங்களை இவர் முடித்து வைத்துவிட்டார்.

கோல் கம்பம் வரை நெருங்கி வந்த இந்தப் பந்தை மறுபடி நடுக்கோட்டிற்கு உதைத்துத் தள்ளிவிட்டார்கள் சிலர்.

பெண்களுக்குக் கிடைக்கக்கூடிய இந்த நியாயமான சலுகையை எதிர்ப்பவர்கள் வெகு நாள் வரை திரைமறைவுக்காரர்களாகவே இருந்து வந்தார்கள்.

ஆனால் இப்போது சிலர் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளத் துணிந்துவிட்டார்கள். அவர்களுள் முக்கியமானவர் சரத்யாதவ். இவரது எதிர்ப்பு மிகக் கடுமையாக இருக்கிறதே தவிர, பெண்களுக்கு இட ஒதுக்கீடு கூடாது என்பதற்கு இவர் சொல்லும் காரணங்கள் உளுத்துப் போனவையாகவே இருக்கின்றன.

எதிர்க் கட்சியான பாரதிய ஜனதா ஆதரிக்க, பெண்ணினத்தின் பெரும் பிரதிநிதியாக இன்று தலைமைப் பொறுப்பிலே சோனியா இருக்க, குட்டித் தேவதைகளின் குறுக்கீடுகளால் இச்சட்டம் நிறைவேறாமல் போய்விடுமோ என்கிற அச்சம் தொடர்கிறது.

இந்திய அரசியல் சட்டத்தின் நம்பகத்தன்மை உலக அளவில் தெரிய வேண்டுமானால், இது உண்மையான ஜனநாயக மண் என்றால் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டே ஆக வேண்டும். பாதிக்குப் பாதியா கேட்கிறார்கள்? மூன்றில் ஒரு பங்கு என்பது ஒன்றும் அநியாய சதவிகிதம் அல்லவே!

லாலு போன்றவர்களும் சரத்யாதவ் போன்றவர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது மிகவும் துரதிர்ஷடவனமானது.

சிறுபான்மை இனத்தவர்களுக்கும் உள் ஒதுக்கிடு தேவை என்பது முலாயம் சிங்கின் கோரிக்கை. இது நியாயம் என்றாலும் இதற்குக் கால அவகாசம் கோராமல் முற்றிலுமாக எதிர்ப்பது உள்நோக்கமுடைய செயலாகவே படுகிறது.

ஒரு பெரும்பான்மைக் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முக்கிய எதிர்க்கட்சியும் ஆதரிக்கிறது. எனவே சிறுசிறு எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் இம்மசோதா நிறைவேற்றப்படுமானால் சோனியாவுக்கு அது மிகப்பெரிய மணிமகுடமாக அமையும்.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!

2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!

2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!

2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!

2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!

2009/05/08 நல்ல பூச்சுற்றல்!

2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?

2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!

2009/04/17 மனம் இரங்குவோம்!

2009/04/10 தீயினும் கொடியது காமம்!

2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!

2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!

2009/03/20 அரசியலா, அக்கறையா?

2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?

2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?

2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!

2009/2/20 இறுதி இலக்கு என்ன?

2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!

2009/02/06 சென்று வாருங்கள்!

2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?

2009/01/23 நல்ல ஆரம்பம்!

2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?

2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

Most Commented Posts


Leave a Reply