Friday, 19 Jun 2009

Lanka and Pakistan in T20 world cup final!

எதிரிகள் மோதும் டுவென்டி 20 போட்டி: தமிழன் ரசிப்பானா?

sri-lanka_cricket_logo.gifpakistan-cricket-board-logo.jpg

டுவென்டி 20 உலகக் கோப்பை   கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. யாரும் எதிர்பாராத திருப்பம் இது.

நடப்பு சாம்பியனான இந்திய அணி போடடிக்காக லண்டன் செல்லும்போது நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தது. உலகிலேயே பலமான பேட்டிங் ஆடர் உள்ள அணி, உலகக் கோப்பையை தக்கவைத்துக்கொள்ளப்போகும் அணி என்றெல்லாம் கணிக்கப்பட்டது. ஆனால், சூப்பர் 8
க்குள் நுழைந்ததுமே நம் வேஷம் கலைந்துவிட்டது. வரிசையாக அடிவாங்கி வெளியேறினோம். பலகோடி ரசிகர்களைப் பெற்றிருந்த 11 பேர் பொறுப்பற்ற முறையில் விளையாடி வெறுப்பேற்றிவிட்டனர்.

அப்போது நம்மை வெற்றிக்கொண்ட அணிகளான இங்கிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்க அணிகள் அரையிறுதி ஆட்டத்தைக் கடந்து இறுதிப் போட்டிக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்பட்டது. நம்மை ஜெயித்ததன் மூலம் இந்த இரு அணிகளுக்குமே அரையிறுதிக்குள் நுழைந்துவிடும் நம்பிக்கை இருந்தது.

கடைசியில் அரையிறுதிக்குள் நுழைய முடியாமல் வெளியேறியது இங்கிலாந்து. தொடர்ந்து 7 போட்டிகளை வென்ற தென் ஆப்பரிக்க அணி, அரையிறுதிப்போட்டியில்பாகிஸ்தானிடம்உதை வாங்கி ஒதுங்கிக்கொண்டது. நேற்று  நடந்த மற்றொரு அரையிறுதிப் போட்டியில் மேற்கு இந்திய அணியை பின்னி பெடலெடுத்து, நொங்கி நூலெடுத்து (எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் வார்த்தைகளைப் போட்டுக்கொள்ளலாம்) ஓடிப்போ என துரத்திவிட்டது.

இறுதியாக உலக நாடுகள் எல்லாம் தோற்று வெளியேற, பரவலாக வெறுக்கப்படும் ஆசிய நாடுகளான இலங்கையும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

இலங்கையோ பாகிஸ்தானோ இரண்டு அணிகளுமே நமக்கு எதிரிகள்தான். பாகிஸ்தான் அணியானது ஒட்டுமொத்த இந்தியர்களின் பகைஅணி என்றால், இலங்கை அணியானது தமிழர்களுக்கு எதிரான அணி. ஆக, உலகக் கோப்பையை தட்டிச்செல்லப்போவது ஏதோவொரு பகை அணிதான்.

ஓரு முக்கியமான போட்டியில், இறுதி ஆட்டம் ஆட வந்திருக்கும் இந்த இரு அணிகளுமே ஏதோ ஒரு விதத்தில் சுயநலமிக்க நாடுகளைச் சேர்ந்த அணிகள்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான பேரினவாதம் நடக்கிறது என்றால், ஒட்டுமொத்த இந்தியர்களையுமே எதிரியாக பாவிக்கும் நாடு பாகிஸ்தான். இலங்கையில் தமிழ்க் கோயில்கள் நொறுக்கப்படுகிறது, தமிழர்கள் நசுக்கப்படுகிறார்கள் என்றால், பாகிஸ்தானில் இந்தியாவுக்கு எதிரான பல்வேறு சதித் திட்டங்கள் தீட்டப்பட்டு, செயல்படுத்தப்பட்டும் வருகின்றன.

ஏதோ ஒருவிதத்தில் எதிரிகளாக நமக்குத் தெரியும் இந்த இரு நாட்டு அணிகளின் ஆட்டத்தை ஒரு இந்தியனால் அல்லது தமிழனால் சந்தோஷமாகப் பபார்க்க முடியுமா?

உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் 11 பேர் கொண்ட எந்த அணியானாலும் ஆடலாம். ஆனால், உலகிலேயே அதிக கிரிக்கெட் ரசிகர்களைக் கொண்ட இந்தியா, இந்தியர்கள் ஆடாத இறுதிப் போட்டியை எந்த அளவுக்கு ரசிக்கும் எனத் தெரியவில்லை.

இந்தியன் வேண்டுமானால் பார்க்கலாம். அவனுக்குத் தமிழனைப் பற்றி கவலையில்லை. ஆனால், தமிழன் எப்போதும் இந்தியனாகவே பாவிப்பவன். அவனால் இந்தப் போட்டியைப் யாருக்காகவும் பார்க்கவே முடியாது. அப்படி பார்க்காமல் இருப்பதுதான் நியாயமும்கூட. இரவெல்லாம் விழித்திருந்து எதிரிகளின் மோதலை ரசிக்க தமிழர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. அடுத்த நாள் நாளிதழைப் பார்த்தால் யாருக்கு கோப்பை என்று தெரிந்துவிடப்போகிறது.
.
பொதுவாகவே இந்த இருநாட்டு அணிகளின் பாவனையுமே வித்தியாசமானது. உலக அணிகளில் இருந்து வேறுபடக்கூடியது.

பாகிஸ்தான் அணியானது முழுக்க முழுக்க இஸ்லாமியர்களை மட்டுமே கொண்ட அணி. தன்னுடைய மதச் சின்னத்தைக் கூட சட்டையில் வெளிக்காட்டும் அணி.

இலங்கை அணியும் கிட்டத்தட்ட அப்படித்தான். 11 பேரில் பேருக்கு முத்தையா முரளிதரன் (அவருடையத் திறமையால்) இருக்கிறார். எல்லோருமே ரே, னே, னா க்கள்தான். முரளிதரனுக்கு அடுத்ததாக தமிழர்கள் இடம் பெறுவார்களா என்பது சந்தேகமே.

மொத்தத்தில் இந்த இருஅணிகளுமே இன, மத வாதம் கொண்ட அணிகள்தான்.

இதை உலக விளையாட்டரங்கமும் ஒப்புக்கொண்டு, வேடிக்கைப் பார்த்து வருகிறது.

விளையாட்டுதானே என்று இந்த விஷயங்களை விட்டுவிட முடியவில்லை. இந்த  நாடுகள் விளையாட்டிலும் தங்கள் சொந்த முகத்தை பிரதிபலிப்பதனால்தான் இந்த ரீதியில் கட்டுரையும் எழுத வேண்டியிருக்கிறது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, இந்தியா, மேற்கு இந்திய தீவுகள் இவற்றில் ஏதாவது இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு வந்திருந்தால் அது, உலக மக்களையும், வியாபார உலகத்தையும் சந்தோஷப்படுத்தியிருக்கும். அட, அயர்லாந்தும் நெதர்லாந்தும் இறுதி ஆட்டத்தில் விளையாடினால் கூட சந்தோஷப்படலாம்.

ஏனென்றால், இவையெல்லாம் பொதுவான நாடுகள். சுயநலமிக்க, சில்மிஷ நாடுகளான பாகிஸ்தானும் இலங்கையும் இறுதி போட்டிக்கு (திறமைமிக்கவர்களாக இருந்தாலும்) வந்ததை நினைத்து சந்தோஷப்பட முடியவில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.

-கிருஷ்ணாசேகர்

Most Commented Posts


12 Responses to “Lanka and Pakistan in T20 world cup final!”

  1. yoga

    நன் இலங்கையை சேர்ந்தவன் தான். எதோ இந்திய உலகத்திலே மிக யோக்கியமான நாடு அவர்கள் மட்டுமே தான் கிரிக்கெட்டில் வெல்ல வேண்டும் என்கிற ரீதியில் கட்டுரை எழுதி இருக்கும் உங்கள்ளுக்கு இலங்கை அணியை பற்றி என்ன தெரியும். முரளி ஒரு ஹிந்து, வாஸ், அன்ஜெலோ மதேவ்ஸ் கிறிஸ்தவர்கள், தில்ஷன் மலாய், முபாரக், பார்வீஸ் மகாரூப் முஸ்லிம். இப்படி அணைத்து இனங்களையும் உள்ளடக்கியது தான் எங்கள் அணி. விளையாட்டை விளையாட்டாக பார்காததால் தான் உங்கள் இந்திய அணி தோல்வி அடைந்ததும் முழு உலகமே கேவலமாக பார்க்கும் அளவுக்கு உங்கள் அணியினரை திட்டுகின்றீர்கள். கொடும்பாவியை எரிக்கின்றீர்கள். வீடுகளை உடைக்கிறீர்கள். தற்கொலை செய்கின்றீர்கள். அங்கள் அணி ரசிகர்கள் இன்னும் உங்கள் அளவுக்கு கேவலமாக கீழ்த்தரமாக போய் விட வில்லை. முதலில் உங்கள் அணியை பார்த்து விட்டு அடுத்ததாக ஆதவர்களுக்கு விமர்சனம் செய்ய வாருங்கள்.

    உலக T20 வெற்றி கிண்ணத்தை எமது இலங்கை கிரிக்கெட் அணி வென்று வருவார்கள் என்கிற எதிர்பார்புடன் இருக்கும் இலங்கை தமிழன்

  2. dilshaad

    சபாஷ் யோகா! சரியாக சொன்னீர்கள். இலங்கைத்தமிழன் சிங்களவனுடன் பகைதான் ஆனால் விளையாட்டிலில்லை. இலங்கை தமிழர்கள் இலங்கை அணிக்குத்தான் ஆதரவை தெரிவிப்பர். யோகா, ரசல் ஆனோல்ட் உம் ஒரு தமிழ் கிறிஸ்த்தவர்தான்.

  3. IRSHATH

    Well Said Yoga..
    இந்தியா ஒன்றும் ஜனநாயக நாடு அல்ல.. ஒரிசா மற்றும் குஜராத்தில் நடந்தவற்றை யாரும் மறக்கவில்லை.. அதற்குள் பெரிதாக பேச வந்துவிட்டார்கள்.. எல்லாம் எரிச்சல்.. பொறாமை.. வேறு என்ன..

    மற்றும் காங்கிரஸ் ஆட்சியை உறுதி செய்த தமிழர்களா பார்க்காம இருந்திடப்போறாங்க.. சிரிப்பு சிரிப்பா வருது..

    நியாயம் இருந்தா commentஐ publish பண்ணி பதிலும் சொல்லுங்க..

  4. mahinda

    nice say yoga

  5. இந்தியன்

    அணைத்து இனங்களையும் உள்ளடக்கியது தான் எங்கள் அணி. //

    இப்படி சமத்துவம் பேணும் சிங்களர்களை எதிர்த்தா தீவிரவாதக் கொடுமை செய்தீர்கள்? அடப்பாவி இலங்கை தமிழர்களா!

    //இலங்கை தமிழர்கள் இலங்கை அணிக்குத்தான் ஆதரவை தெரிவிப்பர். //

    நாங்க சிங்களவர்களுக்கு உதவும் எங்க அரசை எதிர்க்க வேண்டும். நீங்க மட்டும் ஆட்டிகிட்டு தேவைனா சிங்களவனுக கூட சேர்ந்துக்குவீங்க.(இதைதான் மேதகு பிரபாகரன் செய்தார், பிரமதாசாவுடன் சேர்ந்தார்)

    சிங்களவர்கள் எவ்வளவோ மேல்…இந்திய ஆதரவு அவர்களுக்குத்தான்!!!

  6. indian

    இப்போ தெரிகிறது ஏன் நீங்கள் உதை வாங்குகீர்கள் என்று .
    வாழ்க singalavan

  7. thisanthan

    nanparkale vilayaaddil nam thesam vella vendum
    india thalaikkanam koodiaya veerarkalai konda naadu athanaale avarkal ippadi

  8. karuna

    ஓரு பக்கம் இலங்கை பொருட்களை புறக்கணிக்க சொல்றீங்க. இன்னோரு பக்கம் அவனுக கிரிக்கெட் டீம் கெலிக்கோனும்னு சொல்றீங்க… லூஸப்பா நீங்க?

  9. தமிழன்

    yoga, dilshaad, IRSHATH, mahinda,

    பேருகளப் பார்த்தா எல்லாரும் சிங்கள மம்மீகளுக்கு பொறந்த பயலுவள இல்ல தெரியுது!!!

    ஆனா இலங்கை தமிழன்னு சொல்லுறீங்க??? என்ன தமிழ்-சிங்கள கலப்பின வகையறாவா???

  10. ali

    I really donot understand the reason behind the article.Are we still living in 10 th century to call pakistan and srilanka as enemy countries?
    Who do you think as our enimies? the poor people of pakistan who donot enjoy many basic rights which we enjoy on the otherside of border? Do we not help pakistan and kashmir when they have had earthquake?

    I have a great respect for kalkandu from my student days.The aim of the magazine is to impove human qualities, not hatred or anger agaisnt any individual person or country.
    These attitides caused great big wars(Hitler etc).
    I strongly recommend “LOVE THY NEIGHBOUR”

  11. IRSHATH

    1) இந்தியா ஒன்றும் ஜனநாயக நாடு அல்ல.. ஒரிசா மற்றும் குஜராத்தில் நடந்தவற்றை யாரும் மறக்கவில்லை.. அதற்குள் பெரிதாக பேச வந்துவிட்டார்கள்..

    2) மற்றும் காங்கிரஸ் ஆட்சியை உறுதி செய்த தமிழர்களா பார்க்காம இருந்திடப்போறாங்க..

    இரண்டுக்கும் பதில் யாரும் சொல்லலியே?

  12. இந்தியன்

    சமத்துவம் பேணும் சிங்களர்களை எதிர்த்தா தீவிரவாதக் கொடுமை செய்தீர்கள்? அடப்பாவி இலங்கை தமிழர்களா!

    நாங்க சிங்களவர்களுக்கு உதவும் எங்க அரசை எதிர்க்க வேண்டும். நீங்க மட்டும் ஆட்டிகிட்டு தேவைனா சிங்களவனுக கூட சேர்ந்துக்குவீங்க.

    இந்த இரண்டுக்கும் கூடத்தான் யாரும் பதில் சொல்லவில்லை!

Leave a Reply