» Junior Kelvi Pathil .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 19 Jun 2009

Junior Kelvi Pathil


lena-kelvi-pathil.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

ஏ.சேகர், பாஞ்சாலங்குறிச்சி.

தமிழக மந்திரி சபையில் காங்கிரசின் பங்கு?

கிருஷ்ண ஜெயந்தியில் கண்ணைக் கட்டி உறியடித்த கதை! அந்த உறியாவது எட்டுகிற இடத்தில் இருக்கும். இந்த உறியோ இமயமலையில் தொங்கவிடப்பட்டிருக்கிறது.


சி.கண்ணன், போளூர்.

மத்திய அரசிடம் தி.மு.க., தலைவர் கோபம் கொண்டிருக்கிறாராமே?

இருக்காதா பின்னே…? இந்த முறை பூரண விநியோக உரிமையும் ‘கை’ டடிஸ்ட்ரிபியூட்டர்ஸே என்றால் யாருக்குத்தான் கோபம் வராது? போன முறை இப்படியா இருந்தது?


பி. சங்கர், விருதுநகர்.

மீண்டும் மாநில சுயாட்சியைப் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறாரே, கலைஞர்?

நீத்தார் சடங்கு நடத்திய நிகழ்ச்சிக்கு மீண்டும் கெட்டி மேளமா? தி.மு.க. நினைத்தால் எதையும் செய்யும்போல் இருக்கிறதே!


ஆர். அப்துல்லா, வேலூர்.

எஸ்.எஸ்.ஆரை சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம் கெளரவித்திருப்பது குறித்து…?

தமிழைப் பிழையின்றிக் கூட அல்ல, அழகுற உச்சரிக்கவல்ல, வசனங்களை அழுத்தம் திருத்தமாகப் பேசவல்ல அற்புதக் கலைஞராகத் திகழ்ந்தவர் எஸ்.எஸ்.ஆர். வயது கடந்தும் சுறுசுறுப்போடும் உற்சாகத்தோடும் வாழ்ந்து வரும் இந்தக் கலைஞருக்கு நிச்சயம் இத்தகைய அங்கீகாரங்கள் தேவை. வரவேற்போம் மகிழ்வோம்!


எஸ்.எழில், மாமல்லபுரம்.

மகேஷ் பூபதி வாழ்வில் என்ன பிரச்னை?

அமைதியான நதியில் ஓடிய ஓடம்போல சென்ற இவரது இல்லற வாழ்வில் ஓர் இந்தி நடிகை நுழைந்து விட்டார் என்கிறார்கள். இவர் லியாண்டர் பயஸோடு ஜோடியாக ஆடும்போதே அடிக்கடி அடித்துக் கொள்வார். இதைவிட இவர் ஸ்வேதாவுடன் அடித்துக் கொள்வதுதான் அதிக வேதனை!


என்.விஜயகுமார், தொழுதூர்.

நீதி விசாரணை அறிக்கைகளையெல்லாம் மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யும்?

இரு அரசுக்கும் சொந்தமாகச் சில காகித உற்பத்தி நிறவனங்கள் இருக்கும். அந்தக் காகித நிறுவனங்களுக்கு இந்த அறிக்கைகள்தாம் ‘ரா’ மெட்டீரியல்கள்! இப்போது தெளிவாகியிருக்குமே!


என். பாபு, வாணியம்பாடி.

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பந்தாடப்படுகிறார்களே?

சிறு சேமிப்புத் துறையின் அக்கால லாட்டரிக் குலுக்கலை இக்கால இளைஞர்கள் பார்க்க வேண்டாமா? அதற்காகத்தான் இப்படியொரு கன ஜோர்!


வி.ஆன்டனி, சென்னை-5.

கட்டப் பஞ்சாயத்து என்றால் என்ன?

சுப்ரீம் கோர்ட்டுக்கு மேலான நீதிமன்றம் என்று அர்த்தம்! உண்மையைச் சொன்னால், இராணுவக் கோர்ட்டை விடக் கடுமையானது. இதில் மேல் முறையீடே கிடையாது.


பே. திருமாமுருகன், மதுரை.

பாரதிராஜா அலுவலகத் தாக்குதல் விஷயத்தில் கலைஞரை விமர்சித்த வைகோ மன்னிப்புக் கேட்க மறுப்பது ஏன்?

முதல்வரின் தலையீட்டில்தான் பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்டது என்கிற வைகோவின் கருத்தை நிரூபிக்க ஆதாரங்கள் கிடைக்கும் என்று தோன்றவில்லை. உணர்ச்சிவசப்பட்டு மேடையில் தோன்றுவதைப் பேசுவது இயல்புதான். அதன்பிறகு பின்வாங்க ஒரு வாய்ப்பு வந்தும் மறுப்பது தன்மானமாக இருக்கலாம். ஆனால் புத்திசாலித்தனமாகுமா என்பது பெரிய கேள்விக்குறி.


எஸ்.செந்தில்நாதன், பழனி.

20/20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா தகுதிச் சுற்றிற்குக் கூடத் தாக்குப் பிடிக்காதது எதைக் காட்டுகிறது?

மிதமிஞ்சிய தன்னம்பிக்கையும் ஆபத்தானதுதான் என்பதை!


எம்.பாட்சா, சென்னை-44.

இனி மு.க. அழகிரியின் செயல்பாடுகள்?

டெல்லியிலும் சென்னையிலும், மதுரையிலும் என தொடர்ந்து முகாம்கள் நடத்துவார். தமிழகத்தின் வைத்திய ரத்னா இனி அவர்தான்!


வி.கணேஷ், இராணிப்பேட்டை.

சென்னை மாநகரப் போக்குவரத்தில் இயங்கும் ஏ.சி. பேருந்துகளால் குறைந்தது மாதம் எழுபத்தைந்தாயிரம் ரூபாய் வசூலாகிறதாமே?

ஐந்து பேருந்துகளுக்குதாம் இந்தத் தொகை! இதுபோல் இன்னும் பல பேருந்துகள் ஓடுகின்றன. இதனால் இப்போது சென்னை மக்கள் சூடாக இருக்கிறார்கள். போக்குவரத்துக் கழகமோ இதை கூலாக எடுத்துக் கொள்கிறது. பேருந்து மூலமான வருமானங்களை உயர்த்த சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் கண்டுபிடித்த உத்தியை உலகமே பின்பற்றலாம் போலிருக்கிறது.


மெ.சுந்தரம், சிதம்பரம்.

அண்மையில் நீங்கள் நெகிழந்த கணம் என்று எதைக் குறிப்பிடுவீர்கள்?

தமிழ்வழியே பத்தாம் வகுப்புப் பயின்று மாவட்டம் தோறும் முதன்மை பெற்ற மாணவ மாணவிகளுக்கு லாப்டாப் வழங்கினார்களே, இதைச் சொல்வேன். தமிழுக்குத் தரப்படும் எத்தகைய வடிவிலான பரிசுகளும் ஊக்கங்களும் எனக்கு மகிழ்வும் நெகிழ்வும் தரவல்லவையே. ஏன் தான் தமிழ்வழிக் கல்வி பயின்றோமோ என்று வருந்தும் நிலை எந்த மாணவ மாணவிக்கும் வரவே கூடாது. இந்தச் சிறு வேண்டுகோளின் பின்னே கனமான பணிகள் உள்ளன. தமிழக அரசு இதிலும் கவனம் செலுத்த வேண்டும்.


கே. இளங்கோ, திருவண்ணாமலை.

இன்று அரசாங்கத் துறைகள் மேலானதா, தனியார் துறைகள் மேலானதா?

இன்று அரசாங்கம் என்ன செய்கிறது? மது விற்கிறது. தனியார்கள் என்ன செய்கிறார்கள்? தண்ணீரை விற்கிறார்கள். இனி முடிவு உங்களுடையது.


எஸ்.ரமேஷ், வயலூர்.

மறைந்த நரசிம்மராவிற்கும், மன்மோகன் சிங்கிற்கும் என்ன வித்தியாசம்?

வெறும் சிரிப்புதான்! அவர் சிரிக்காமல் காலம் தள்ளினார். இவர் சிரித்துக் கொண்டே காலம் தள்ளுகிறார். பற்களைக் காட்டாவிட்டாலும் பதவி நிரந்தரம். பற்களைக் காட்டினாலும் பதவி நிரந்தரம் என்பது இந்த இருவரையும் பார்த்த பிறகுதான் தெரிந்தது.


ஏ. ராக்கம்மாள், திருச்சி.

இலவச தொலைக்காட்சிப் பெட்டி விநியோகம் மறுபடி முழு வீச்சில் நடைபெறுகிறதே?

இத்தொகை கல்விக்கும் உடல்நலத்திற்கும் செலவிடப்பட்டிருந்தால் பாராட்டலாம். பொழுதுபோக்கு அம்சமா இந்த மாநிலத்தின் அவசர, அவசியத் தேவை? எல்லாம் காலத்தின் கோலம்ய்யா!


சத்யப்புத்திரன், வேலூர்.

ஏ.ஆர்.ரகுமானிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்?

அவரது அளவு கடந்த அடக்கம். எப்படி இது சாத்தியம்? ரகுமான்பாய் சற்று கற்றுக் கொடுங்களேன் எங்களுக்கும்!


பி. பெருமாள், திருவாலங்காடு.

இட ஒதுக்கீட்டில் அந்த கிரிமிலேயர் என்னாச்சு?

என்னாச்சு? மத்தியில் உள்ளவர்கள் ஜிம்னாஸ்டிக் செய்து கொண்டிருப்பதை மாநிலத்தில் உள்ளவர்கள் காலரியில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


என்.ரங்கநாதன், மதுராந்தகம்.

எல்லாக் கட்சிகளிலும் தளபதிகள் உருவாகிவிட்டார்களே?

ஆமாம்! இந்தக் தளபதிகளுள் பலர் போராட்டங்களையும், போர்வைகளையும் ஒளிந்திருந்து பார்த்தவர்களே!


எம்.துரை, அயனாவரம்.

திரைப்படங்களுக்கு சென்சார் தேவையா?

என்னைக் கேட்டால், நம்ம ராமதாசும் திருமாவளவனும் ஒரு குழுவை நியமித்து ஒ.கே. சொன்னால் போதும்! சென்சாரே தேவையில்லை. சென்சாருக்குப் போனாலும் அப்புறமும் இவர்களிடம் வந்தாகணும். அதற்கு இவர்களே பரவாயில்லை!

12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்

Related Posts Title


Leave a Reply