» Disease relief plants - Akbar Kausar .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 19 Jun 2009

Disease relief plants - Akbar Kausar

akbar-kausar.jpgமணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள்

- வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

காளி கோயில் தலவிருட்சம் அரளி ()

இத புளூமேரியா ( Var. Aquitifolia) இரகம் எனவும், அக்யூடிஃபோலியா என்ற இணைப்பு இலையின் பரப்பை குறிப்பிட்டு அழைக்கப்படுகிறது.

கள்ளி மந்தாரை அதிக உயரமாக வளரக்கூடியது. சுமார் 10 அல்லது 15 மீட்டர் உயரம்வரை வளரும். கிளையின் முனைகளில் பூக்கள் உருவாகும். ஏப்ரல் - ஜுன் மாதங்களில் பூக்கள் பூக்கத் தொடங்கும்.

மருத்துவப் பயன்கள்

இலை, பூ, பட்டை, மரப்பால், மரம் முதலியவை மருத்துவ பயன்களும் உதவுகின்றன.

இலை : இலைகளை சூடுபடுத்தி வீக்கங்களின் மீது கட்டினால் வீக்கம் வற்றிவிடும்.

பூக்கள் : கள்ளி மந்தாரைப் பூவில் இருந்து நீராவி மூலம் ஒருவித வாசனைத் தைலத்தை வடித்தெடுக்கின்றனர். இத் தைலத்தில் ஜெரணியால், ஸிட்ரொனெல்லால், ஃபார்னிசால் மற்றும் பினைல் ஈதைல் ஆல்கஹால் உள்ளன. இத் தைலம் பூசனக்கொல்லித் திறன் கொண்டதாகும்.

* பூவின் மொட்டுக்களை வெற்றிலையுடன் கலந்து மென்றால் காய்ச்சல் தணிகிறது.

பட்டை : இதன் பட்டையில் புளூயிரைடு எனும் குளூகோசைடும், புல்வோ புளூமிரின் எனும் சாயச்சத்தும், ஆல்ஃபா அமைரின் அசிடேட்டும் உள்ளது.

* ஆஸ்துமா கிருமிகளை கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது.

* பயிரில் உள்ள இலைப் புள்ளியை ஏற்படுத்தும் பூசனத்தையும் கட்டுப்படுத்துகிறது.

* இப்பட்டையுடன் தேங்காய், நெய், அரிசி ஆகியவற்றைச் சேர்த்து மருந்து தயாரித்து பேதிக்கு மருந்தாக கொங்கன் பகுதியில் தரப்படுவதாக நூல் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

* வேர்ப்பட்டை - வெள்ளை, வெட்டைக்கு மருந்தாகிறது. கட்டிகளின் மீது பற்றாக போட்டு குணப்படுத்தலாம்.

மரப்பால் : கிளைகள், இலைகளில் வெள்ளைநிறப் பால் உண்டு. இப்பாலுக்கு வயிறு மற்றும் குடலை இயக்கக்கூடிய சக்தி உள்ளது. பேதியை உண்டாக்கும். கீல்வாதத்துக்கு டர்பன்டைனுக்குப் பதிலாகக் பூசலாம். சந்தனம், கற்பூரம் ஆகியவை சேர்த்து நமைச்சலுக்குப் பூச வேண்டும்.

மரம் : மரத்தின் நடுப்பகுதி, நாக்கு வறட்சியை நீக்கும். இருமலை குணப்படுத்தும் திறனும் கொண்டது.

* மிருதுவான இம்மரத்தைக் கரையான் அரிப்பதில்லை. டமாரங்களும், இசைக்கருவிகளும் செய்யப் பயன்படுகின்றது.

பிற செய்திகள்

புளுமீரியா இனங்களுக்கு சூப்பர் சக்தி உள்ளதாக அறியப்பட்டுள்ளது. அதாவது அதன் கிளையை வெட்டி, தரையில் படாமல் வைத்தால் கூட சில பூக்கள் உற்பத்தியாகும் அளவுக்கு சக்தியை தண்டுப்பகுதியில் சேர்த்து வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டுள்ளது. இதன் காரணமாகவே புனிதமுடையதாக முஸ்லிம்களும், பெளத்தர்களும் கருதுகின்றனர்.

முஸ்லிம்களின் கல்லறைகளின் ஒரு ஓரமாக சாய்வாக நட்டுவைத்து அவற்றில் பூக்கள் பூத்து கல்லறையின் மீது உதிருமாறு செய்வதும் வழக்கம். ஆண்டு முழுவதும் பூக்கும் அதிசய தாவரமாகவும் இது விளங்குகிறது.

புளுமீரியா மரங்கள் பரந்த அளவில் வறட்சியைத் தாங்கி, பல்வேறு சூழ்நிலைகளிலும், மண் வகைகளிலும் வளரும் தன்மையுடையது. களர் நிலம், உவர் நிலம் போன்றவைகளிலும் வளரும்.

இதனை வீட்டுமரமாகவும், அழகு மரமாகவும் வளர்க்கின்றனர். கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் ஆகிய இடங்களில் வளர்க்க ஏற்றது. அழிவில்லா நிலையை உணர்த்தும் புனித மரங்களாக இவ்வகை மரங்கள் விளங்குகின்றன.

இம்மரம் கிராமங்களில் காளிகோயில்களின் அருகில் வளர்க்கப்படுகின்றன. இதன் மலர்களை மாலையாக்கி காளியம்மனுக்கு சூட்டுவர். இதன் மலர் புனல் வடிவில் இருக்கும். இதன் ஒரு காயில் ஒரு விதையே இருக்கும். இதன் விதைகளையும், வேரையும் அரைத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்டவர் பலர். திருவிதாங்கூர் உப்பங்கழிப் புறத்தில் ஒரு வகை காணப்படுவதாக அறிய முடிகின்றது.

தலவிருட்சம் கொண்ட திருக்கோயில்கள்
காளி கோயில்களில் தலவிருட்சமாக வணங்கப்படும் அரளி, கள்ளி மந்தாரை, (மலையரளி) என பெயர் வழங்கப்பட்டு வணங்கப்படுகிறது.

சங்க இலக்கியம்

‘கண விரம்’ எனப்படும் அலரிச்செடியைப் போன்று அரளி என்னும் புதர்ச்செடி தமிழகத்தில் வளர்க்கப்படுகிறது. ஒரு சிலர் இவை இரண்டையும் ஒன்று எனச் சொல்லுவர். இது தவறு. அலரி வேறு, அரளி வேறு. இது சங்க இலக்கியத்தில் தனித்து பேசப்படவில்லை. எனினும் மஞ்சள் அலரி என்று உலகியலில் வழங்கப்படுகிறது. அரளியின் காய் பசுமையானது. ஏறத்தாழ அமுக்கிய உருண்டையைப் போல இருக்கும். இதனை விதை போட்டும் முளைக்க வைக்கலாம். பெரிய மஞ்சள் நிற மலர்களை உடையது. வெள்ளை, சிவப்பு அரளி தோட்ட வேலிகளிலும் வளர்க்கப்படுகின்றன.

அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்

2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி

2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்

2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்

2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்

2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்

2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்

2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்

2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்

2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி

2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்

2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்

2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி

Most Commented Posts


Leave a Reply