Friday, 19 Jun 2009
வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்
குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்! – கே.எஸ்.சுப்ரமணி
காப்பி சாப்பிட்டால் ஞாபக சக்தி இரண்டு மடங்காக அதிகரிக்கும். அதாவது ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று காப்பி மட்டும் சாப்பிட்டால் போதும். அளவுக்கு மீறி அடிக்கடி காப்பி சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சியும், வயிற்றுக்கோளாறு மற்றும் பித்தக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
ஜெலிமெர் ஜால்லெஸ் என்பவர் நெதர்லாண்ட்ஸ் மெமரி மற்றும் ஏஜிங் புரோகிராம் அமைப்பின் இயக்குநர், 1997 ஆம் ஆண்டு, இவர் மனிதர்களின், குறிப்பாக எல்லா வயதுக்காரர்களின் ஞாபகசக்தி எப்படி இருக்கிறது என்பதை அறிய ஞாபக சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகளைக் கொடுத்தார். பிறகு சில வார்த்தைகளைக் கூறினார். அந்த வார்த்தைகளை எல்லாம் திரும்பச் சொல்லச் சொன்னார். ஞாபகமறதியுடைய அவர்களால் சரியாகச் சொல்ல முடியவில்லை.
இந்தப் பரிசோதனை முடிவு திருப்தியளிக்கவில்லை. அடுத்து மூன்று கப் காப்பி ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டது. மறுபடியும் புதிதாக வேறுவேறு வார்த்தைகளைச் சொன்னார்.
இரண்டு முறை பரிசோதித்த போதும் ஒவ்வொருவரும் சரியாகச் சொன்னார்கள். முதல் ரவுண்டில் வேறு வார்த்தையும் அடுத்த ரவுண்டில் வேறு வார்த்தையும் அடுத்த ரவுண்டில் வேறு வார்த்தையும் வரும். ஞாபக மறதிக்காரர்கள், குறிப்பாக வயதானவர்களும் இவற்றை ஞாபகத்தில் வைத்திருந்து திரும்பச் சொன்னது குறிப்பிடத்தக்கது.
இதே நேரத்தில் இன்னொன்றையும் குறிப்பிட்டார். இன்ஸ்டென்ட் காப்பி வகைகளில் காஃபைன் குறைவாக அல்லது நீக்கப்பட்டோ இருக்கும். இந்த காப்பி வகைகளால் கண்டிப்பாக ஞாபகசக்தி அதிகரிக்காது. காப்பிக் கொட்டையை வறுத்து அரைத்துக் தயாரிக்கும் காப்பிகளில் தான் காஃபைன் என்ற சத்து உள்ளது. இதுவே ஞாபக சக்தியை இரண்டு மடங்காக அதிகரித்துத் தரும் என்கிறார்.
காலையில் பெட்காப்பி சாப்பிடுவது மூளைச் சுறுசுறுப்பிற்கும் ஞாபக சக்திக்கும் உதவும். தேநீர் சாப்பிடுகிறவர்கள் அதை மாலை நேரத்துக்கு மாற்றிக் கொள்ளலாம். அடுத்து திருமணமான புது மணமகள்கள் காப்பியை முழுவதும் தடை செய்வதே சிறந்தது என்று ஸ்பானிஷ் பல்கலைக்கழக ஆய்வு ஒன்றும், அமெரிக்க பொதுச் சுகாதார அமைப்பும் கண்டுபிடித்துள்ளது.
பெண்கள் தினமும் 5 கப் காப்பிக்கு மேல் அருந்தினால் கருத்தரிப்பது, காப்பி அருந்தாத பெண்களை விட 11 சதவிகிதம் தள்ளி போகிறது. மணமாகிப் பத்து மாதங்களுக்குப் பிறகுதான் இவர்கள் கருத்தரிப்பார்கள். அம்மாவாகும் ஆசை நிறைவேறாத பெண்கள், தங்களிடம் காப்பி சாப்பிடும் பழக்கம் அளவுக்கு மீறி இருந்தால் உடனே அதைக் குறைக்கவும்.
தினமும் மூன்று கப் காப்பி சாப்பிடும் பெண்களுக்குக் கருத்தரித்தாலும் கரு வளர்ச்சியும் பாதிக்கப்படலாம். இந்த உண்மைகளை அலிகாண்ட (Alicante) என்ற ஸ்பெயின் பல்கலைக்கழகம் காப்பி நன்கு அருந்தும் 3187 ஐரோப்பியப் பெண்களை ஆராய்ந்து கண்டுபிடித்தது. இவர்கள் சாதாரண காப்பி அருந்தும் பழக்கம் உள்ளவர்கள். இவர்களுக்குக் குழந்தை பெறும் கனவும் வருவதில்லை. காரணம் இரவில் தூங்கவும் நேரம் ஆகிறது.
இவர்களில் 45 சதவிகித்தினர் மிகத் தாமதமாகவே கருத்தரித்து குழந்தை பெற்றனர். மணமாகி ஒன்பது மாதங்களுக்குப் பிறகுதான் இவர்கள் கருத்தரித்தனர்.
பிரான்ஸிஸ்கோ பால்மர் என்ற டாக்டர் பொது சுகாதாரப் பிரிவின் பேராசிரியர். இவர் காப்பியை மிக விரும்பி அருந்தும் 45 சதவிகிதம் ஐரோப்பியப் பெண்கள் மிகத் தாமதமாக கர்ப்பம் தரித்துள்ளதை கண்டுபிடித்துள்ளார். இது ஐரோப்பாவில் எடுக்கப்பட்ட முடிவு. இவருடைய முடிவை அமெரிக்கப் பொதுச் சுகாதாரப் பள்ளிப் பேராசிரியர் டாக்டர் ரோனால்ட் கிரே என்பவர் 1430 அமெரிக்கப் பெண்களின் காப்பி அருந்தும் பழக்கத்தை ஆராய்ந்து ‘இது உண்மைதான்’ என்று உறுதி செய்துள்ளனர்.
காப்பி சில சுவையான தகவல்கள்
காப்பியின் தாயகம், எத்தியோப்பியா.
மத்தியக்கிழக்கு நாடுகளில் காப்பி சாப்பிடும் பழக்கம் முதலில் பரவியது. அங்கிருந்து அரபு நாடுகள் வழியாக 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பரவியது. லண்டனில் உலகின் முதல் காப்பிக் கடை 1652 ஆம் ஆண்டு தோன்றியது.
ஒரு கப் காப்பியில் 150 மில்லி கிராம் காஃபைன் உள்ளது. இது குணப்படுத்தும் தன்மை கொண்ட அளவு என்ற அமெரிக்க டாக்டர்கள் சிபாரிசு செய்கின்றனர். மத்திய நரம்பு மண்டலம் சீராக இயங்க இது உதவுகிறது. இதனால்தான் உடலும் உள்ளமும் காப்பி அருந்தியதும் ஒரு விதமான பரவசத்தையும் அமைதியையும் திருப்தியையும் பெறுகிறது.
காப்பி அதிகம் சாப்பிடுபவர்கள் அமெரிக்கர்கள்தான். ஒவ்வொர் அமெரிக்கருக்கும் தலா 9 கிலோ காப்பிக் கொட்டைகள் வீதம் இங்கே இறக்குமதி செய்யப்படுகிறது.
காப்பியை அதிகம் உற்பத்தி செய்து ஏற்றமதி செய்யும் முதல் நாடு பிரேஸில். அமெரிக்காவில் 5 பேரில் ஒருவர் இன்ஸ்டன்ட் காப்பி அருந்துகிறார். குழந்தைப் பிறப்பை தடுக்கும் பானம் காப்பி.
கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்
2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?
2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!
2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?
2009/05/22 சின்ன உணவு மருத்துவம்
2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?
2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள
2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்
2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்
2009/04/17 அறிதுயில் மருத்துவம்
2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?
2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?
2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து
2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!
2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்
2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?
2009/02/20 உடல் நலக் குறிப்புகள்
2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?
2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!
2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!
2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?
2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?
2008/12/12 கவலைக்கு முதல் மருந்து
2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்
2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!
2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்
2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை
2008/10/31 காந்தசக்தி மருத்துவம்
2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்
2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்
2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!
2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?
2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?
2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?
2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?
2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?
2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்
2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!
2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?
2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்
2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!
2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்
2008/07/04 உதவி செய்யும் உணவுகள்
2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…
2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?
2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!
2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!
2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்
2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!
2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்
2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?
2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா
































