Monday, 15 Jun 2009
கமலுக்கு 4 விருதுகள்!: விஜய் டிவி கெளரவம்
தசாவதாரம் படத்துக்காக சிறந்த மக்கள் அபிமான ஹீரோ, வில்லன், காமெடியன் மற்றும் திரைக் கதையாசிரியர் என 4 விருதுகளை கமல்ஹாசனுக்கு வழங்கி கெளரவித்தது விஜய் டிவி.
விஜய் டி.வி. ஆண்டுதோறும் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்-நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்குகிறது.
2008-ம் ஆண்டுக்கான விருதுகள் சென்னையில் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
இந்த விழாவில் ரசிகர்களின் சிறந்த அபிமான ஹீரோவாக நடிகர் கமலஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தசாவதாரம் படத்தில் 10 வேடத்தில் நடித்த கமலஹாசனுக்கு அந்தப் படத்தில் பிளெட்சர் என்ற வில்லன் வேடத்தில் நடித்ததற்காக சிறந்த வில்லன் விருதும், பல்ராம் நாயுடு கேரக்டரில் காமெடி செய்ததற்காக சிறந்த காமெடி நடிகர் விருதும், தசாவதாரம் படத்தின் கதையை உருவாக்கியதற்காக சிறந்த கதாசிரியர் விருதும் வழங்கப்பட்டன.
விழாவில் 4 விருதுகளையும் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு கமலஹாசன் பேசும்போது,
”நான் முதன் முதலில் வில்லனாக நடித்த பிறகே கதாநாயகன் ஆனேன். இந்த வகையில் எனக்கு வில்லன் நடிப்புக்காகவும் விருது கிடைத்திருப்பது பெருமையாக இருக்கிறது.
காமெடியை நான் பாலச்சந்தரிடமிருந்தும், நாகேஷிடமிருந்தும் கற்றுக் கொண்டேன். அந்த வகையில் காமெடிக்கான இந்த விருதினை நாகேஷுக்கும், சக காமெடி கலைஞர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்” என்றார்.
சிறந்த நடிகராக வாரணம் ஆயிரம் படத்தில் நடித்த சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த நடிகையாக பிரிவோம் சந்திப்போம் படத்தில் நடித்ததற்காக சினேகா தேர்வானார். சிறந்த படமாக வாரணம் ஆயிரம் படம் தேர்வானது. சிறந்த இயக்குனராக சுப்பிரமணியபுரம் படத்தை இயக்கிய சசிகுமாருக்கு விருது வழங்கப்பட்டது.
சக்கரக்கட்டி படத்தில் அறிமுகமான சாந்தனு சிறந்த புதுமுக நடிகராகவும், பூ படத்தில் அறிமுகமான பார்வதி சிறந்த புதுமுக நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
விருது பெற்ற மற்ற கலைஞர்கள்:
சிறந்த ஒளிப்பதிவாளர்: எஸ்.ஆர்.கதிர்.(படம்: சுப்பிரமணியபுரம்)
சிறந்த இசையமைப்பாளர்: ஹாரீஸ் ஜெயராஜ் (படம்:வாரணம் ஆயிரம்)
சிறந்த கலை இயக்குனர்கள்: சமீர்சந்திரா, பிரபாகரன், தோட்டாதரணி (தசாவதாரம்).
சிறந்த படத்தொகுப்பாளர்: ராஜா முகமது
சிறந்த கதை, திரைக்கதை எழுத்தாளர்: கமலஹாசன் (படம்: தசாவதாரம்)
சிறந்த சண்டைப் பயிற்சியாளர்: ராஜசேகர்(படம்:சுப்பிரமணியபுரம்)
சிறந்த நடன இயக்குனர்: தினா (அஞ்சாதே)
சிறந்த பாடகர்: ஹரிகரன்
சிறந்த பாடகி: பாம்பே ஜெயஸ்ரீ
சிறந்த பாடல் ஆசிரியர்- தாமரை
சிறந்த ஆடை வடிவமைப்பாளர்- கவுதமி (படம்: தசாவதாரம்)
சிறந்த ஒப்பனையாளர்கள- பானு, யோகேஷ்( படம்: வாரணம் ஆயிரம்)
சிறந்த குணசித்ர நடிகர் விருது வி.ஆர்.ரமேசுக்கும், சிறந்த குணசித்ர நடிகை விருது சிம்ரனுக்கும் கிடைத்தது.
செவாலியே சிவாஜிகணேசன் விருதுக்கு ஏ.ஆர்.ரகுமான் தேர்வானார். விருது வழங்கும் விழாவின்போது அவர் சீனாவில் இருப்பார் என்பதால், முன்னதாகவே அவருக்கு விருது வழங்கப்பட்டு விட்டது.

































June 15th, 2009 at 7:09 am
kamalin manimakudathil matrum oru manikkam porikkapattu ullathu.
May 22nd, 2010 at 9:03 am
I received my first credit loans when I was very young and this helped me a lot. But, I require the short term loan also.