Friday, 12 Jun 2009
சூரியனைப் பாராட்ட வந்த சூரியன்!: மலை மலை படப்பாடல் வெளியீட்டில் வாலி வார்த்தை விளையாட்டு
அருண் என்றால் சூரியன். இந்த சூரியனைப் பாராட்ட சூர்யாவே வந்திருக்கிறார் என்று எதுகை மோனையில் பிளந்துகட்டினார் கவிஞர் வாலி.
அருண் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் மலை மலை. இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. நடிகர் சூர்யா வெளியிட கவிஞர் வாலி பெற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் பேசுகையில்,
”65 ஆம் ஆண்டு எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் சின்ன மனஸ்தாபம் ஏற்பட்டது. அவருடையப் படங்களுக்கு பாட்டெழுத என்னை அழைக்கவில்லை. காரணம், அவர் தலைமையில் என் திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால், அவருக்குத் தெரியாமல் திடீரென நான் திருமணம் செய்துகொண்டேன். அதனால் அவருக்கு என்மீது வருத்தம்.
பிறகு நாங்கள் சமாதானமாகி விட்டோம். அவரும் நானும் தாழம்பூ படத்தில் இணைந்தோம். அதில் அவருக்கு நான் எழுதிய பாடல், ‘எங்கே போய்விடும் காலம். அது என்னையும் வாழ வைக்கும்’. அதுபோல், அருண்விஜய்க்கு எங்கே போய்விடும் காலம்? மலை மலை அவரை வாழ வைக்கும்.
அருணை பாராட்ட அயன் சூர்யா வந்திருக்கிகிறார். அயன் என்றால் பிரம்மா, ஒரிஜினல் என்று பல அர்த்தம் உண்டு. சிவகுமாரின் ஒரிஜினல் பிராடக்ட் சூர்யா. இன்னொரு கதாநாயகனை மனம் திறந்து பாராட்ட பரந்த மனம் வேண்டும். அருணை பாராட்டியது, அவருடைய பெருந்தன்மை. அருண் என்றால் சூரியன் என்று பொருள். சூரியனைப் பாராட்ட சூரியனே வந்திருக்கிறார். இந்த மனப்பான்மை மற்ற கதாநாயகன்களுக்கும் வரவேண்டும்” என்றார்.

































June 13th, 2009 at 11:44 pm
surya tamil cinemavin innoru m.g.r. sivavin asal copy intha manitha,arumayana magan-thanhai,eppadi oru thanthai magan-yai parkkum pothu namil palarukku ekkam varugirathu,keep it up surya.