Tamilvanan » Blog Archive » Junior Kelvi Pathil

Junior Kelvi Pathil

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்
srilanka-ltte

எஸ்.சொக்கலிங்கம், மதுரை.

தமிழக நாடாளுமன்றத் தேர்தல்களில் இலங்கைப் பிரச்னை எடுபடவில்லையே?

இதை வெகு நாட்களுக்கு முன்பே நான் நம் இதழில் குறிப்பிட்டிருக்கிறேன். தமிழக நலன்களுக்கும் பிறகே தமிழர் நலன்கள் என்று தமிழக மக்கள் தீர்ப்புச் சொல்லிவிட்டார்கள்.

cartoon-prisoners

எஸ்.மதன்மோகன், ஈரோடு.

இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை இவைகளை அரசாங்கம் இலவசமாகக் கொடுத்தால்?

எல்லா மக்களையும் சிறைக் கைதிகளாகப் பார்க்கும் உங்கள் ஆசையில் நியாயம் இல்லை.

election-result

ஆர்.சுரேஷ், கண்ணமங்கலம்.

நாடாளுமன்றத் தேர்தலில் ‘நாற்பதும் நமதே’ என்று அறிவித்தவர்கள் என்ன ஆனார்கள்?

ஐஸ்கிரீம் கடைக்காரரின் குழந்தை, கடையிலுள்ள அத்தனை ஐஸ்கிரீம்களையும் தானே சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்ட கதைதான் இதுவும்.

husband-&-wife-fight

ஸ்டீபன், கோவளம்.

பெற்றவர்கள் குழந்தைகளை அடிக்கலாமா?

கூடாது என்று மனைவியும், நல்லாப் போடணும் என்று கணவனும் அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொள்கிறார்கள். இவர்களின் சண்டைகளுக்கு நடுவே இவர்களின் குழந்தைகள் குதூகலத்தில் இருக்கிறார்கள்.

karunanadhi

எஸ்.ரவிகுமார், சென்னை.

பிரபாகரன் கொல்லப்பட்டால் நான் வருத்தப்படுவேன் என்று சில வாரங்களுக்கு முன் முதல்வர் கருணாநிதி பேசியது இந்த நேரம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லையே!

எதையும் முன்கூட்டியே கணிக்கக்கூடிய அவரது ஆற்றலையும், இந்த அச்சத்தை முதலில் வெளியிட்டவர் என்ற வியப்பையும் ஒருசேர எண்ணிப் பார்க்கிறேன். ஆயுதங்களைக் கீழே போடும் விடுதலைப்புலிகளின் முடிவு இலங்கை அரசு மன்னிப்பு வழங்க முன்வந்தபோதே அறிவிக்கப்பட்டிருந்தால் பிரபாகரனை முதல்வராகக் கொண்ட அரசுகூட வடஇலங்கையில் அமைந்திருக்குமோ என்னவோ!

IPL

ஆர்.நந்தகுமார், முட்டுக்காடு.

ஐ.பி.எல். போட்டி பற்றிய உங்கள் கணிப்பு?

பெருங்கூட்டத்தைத் தென்னாப்பிரிக்காவில் திரட்ட முடிந்தது பெரிய சாதனை. பணத்திற்காக ஆடுவதற்கும் நாட்டிற்காக ஆடுவதற்கும் இடையே உள்ள வித்தியாசம் நன்கு புரிந்துவிட்டது. மிகச் சிறந்த வீரர்கள்கூடக் காசுக்காக ஆடும்போது கடனே என்றுதான் ஆடுகிறார்கள் என்பதை இவர்களுக்கு வலப்பக்கத்தில் உள்ள ஸ்கோர்களும் விக்கெட்டுகளும் வெட்ட வெளிச்சமாக்கிவிட்டன.

mini-pharmacy

ஜே.கமலக்கண்ணன், ஆவடி.

இன்றைய நோய்களின் பெருக்கம் எதைக் காட்டுகிறது?

(பன்றிக் காய்ச்சலைச் சொல்கிறீர்களா?) வீட்டுக்கொரு நூலகம் என்பது போல் வீட்டுக்கொரு மினி பார்மஸி வேண்டும் என்பதை.

speech

எல்.முகேஷ், திருவண்ணாமலை.

உங்களின் கூட்டங்களுக்குப் பார்வையாளர்கள் வராவிட்டால்?

நம் பேச்சைக் கேட்கும் கஷ்டத்தைவிட ஏதோ கஷ்டம் அவர்களுக்கு வந்திருக்கும் என்று சமாதானம் அடைவேன்.

evks-elangovan

ஆ.ராமச்சந்திரன், ஈரோடு.

தமிழக இந்திரா காங்கிரஸ் அமைச்சர்கள் சிலரது தோல்விகள் எதைக் காட்டுகின்றன?

தொகுதிக்கு அடிக்கடி செல்லவில்லை என்பதை; மக்களைச் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறியவில்லை என்பதை; முடிந்தவற்றைச் செய்து கொடுக்கவில்லை என்பதை; ஆட்சி நடத்தியதைவிட அரசியல் நடத்தியதே அதிகம் என்பதை; காங்கிரஸ் அலை நாடெங்கும் வீசினாலும் இருக்கிற இடத்தைக் காப்பாற்றச் சிறப்பு முயற்சிகள் தேவை என்பதை!

m.gopalakrishnan

பி. சங்கரன், பள்ளிக்கரனை.

நிறுவனத்தின் தன்மை தெரியாமல் கடன் வழங்கியதற்காக முன்னாள் இந்தியன் வங்கித் தலைவர் கோபாலகிருஷ்ணனுக்குப் பதினான்கு ஆண்டுகள் சிறையும் எழுபது இலட்சம் அபராதமும் விதித்துள்ளார்களே?

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்வரை நான் எந்த முடிவிற்கும் வருவதாக இல்லை.

kuvam-river

இம்ரான், மேடவாக்கம்.

கூவத்தை மணக்கச் செய்ய முடியாதா?

முடியாது. கூவம் என்று ஒன்று இல்லாவிட்டால் சென்னையே நாறிப்போகும் நாறி! இப்போதாவது கரையில் இருப்பவர்களுக்கு மட்டுமே கஷ்டம். கூவம் ஒரு ஜீவ நதி. இது வற்றி வறண்டு நான் பார்த்ததே இல்லை.

train-accident

கிருஷ்ணகுமார், வண்டலூர்.

சென்னைப் புறநகர் இரயில் விபத்து சதிகாரனைப் பற்றித் துப்புக் கொடுத்தால் ரூபாய் 25 லட்சம் பரிசாமே?

சுதந்திரத்திற்குக் கொடுத்த விலையைவிட, அதற்குப் பின் இந்தியா கொடுக்கிற விலைதான் அதிகமாய் இருக்கு. என்னைக் கேட்டால் சுதந்திரமே சீப்பாக இருந்தது. ம்ம்.. யாருக்கு கால்கோடியோ..? புண்ணிய பூமியில் இப்படியொரு பரிசுத் திட்டம்!

bsnl-lifetime-card

எஸ்.செந்தில்குமார், திருவேற்காடு.

நம்மவர்களின் தன்னம்பிக்கை இன்று எப்படியிருக்கிறது?

உண்மையைச் சொன்னால் அசரமாட்டீர்களே? தொண்ணூறு வயதை ஒட்டியுள்ள ஒருவர் சமீபத்தில் ஒரு செல்போன் வாங்கி அதற்கு லைஃப் கார்டு போட்டிருக்கிறார். அப்படியானால் நம்மவர்களின் இன்றைய தன்னம்பிக்கை எப்படி? நீங்களே யூகியுங்கள்.

nice-speech

கே.எம்.ஏ., சென்னை-77.

அரைத்த மாவையே அரைக்கும் தலைவர்களின் பேச்சுகள் பற்றி?

அரைத்ததையே அரைத்தாலும் ஏனோ இவர்களது பேச்சை வெரி நைஸ் என்று சொல்ல முடியவில்லை!

tamil-cinema

ராதாகிருஷ்ணன், சென்னை.

சொல்லாமல் கொள்ளாமல படத்திற்குப் போகும் இன்றைய விடலைகளைப் பற்றி?

இன்றையப் படங்கள் சொல்லிவிட்டுப் போகிற மாதிரியா இருக்கின்றன. இது நம் விடலைகளுக்குத் தெரிந்திருக்கிறது. வயோதிகர்களுக்குத்தான் தெரியவில்லை.

fasting

கே.நடராஜ், காரனோடை.

ஒரு மனிதன் எவ்வளவு நாளைக்கு உண்ணாவிரதம் இருக்கலாம்?

எவ்வளவு நாளைக்காக? இப்போதெல்லாம் ஷிப்டு சிஸ்டம்ங்க! ஒரு நாளில் ஒரு ஷிப்டு இருந்தால் போதும்! அதற்கே நல்ல விளம்பரம்.

park-bench

எம்.முகம்மது நூருல்லாஹ். அரங்கக்குடி.

எந்த இடத்தில் இருந்தால் உங்களுடைய கற்பனை சிறகடித்துப் பறக்கும்?

நான் புத்தனல்லன். ஆனால் மரத்தடிதான் என் கற்பனையை சிறகடித்துப் பறக்க வைக்கிறது.

tamil-marriage

டி.ஜனா, சத்தியவேடு.

அரசாணைப் பிறப்பித்தும் மக்கள் அதைப் பெறுவதில் ஏகச் சிக்கலாக உள்ளதே?

இந்த ஆட்சியில் திருமணங்கள் நடக்கும். ஆனால் சாந்தி முகூர்த்தம்தான் இருக்காது.

rajiv-gandhi

ஏ.இளங்கோவன், திருவண்ணாமலை.

தமீழீழம் பகல் கனவாகிவிட்டதே!

ராஜீவ் கொல்லப்பட்ட அன்றே!

railway-department

கமலக்கண்ணன், இராணிப்பேட்டை.

லாலுவின் நிர்வாகம் கிடைக்காததால் இரயில்வே துறைக்கு நஷ்டம்தானே?

இல்லை. புதுப்பாதை போட்டு கொடுத்துவிட்டார். இனி இரயில்வே துறைபாடு ‘ஜிகு ஜிகு’தான்!

Lalu

சீனிவாசன், ஸ்ரீபெரும்புதூர்.

லாலுபிரசாத் எந்த வகையில் தாம் அவமானப்படுத்தப்பட்டாராம்?

காங்கிரசைப் புறக்கணித்த லாலு தன்னிச்சையாகச் செயல்பட ஆரம்பித்து, தாம் போட்டியிட்ட ஒரு தொகுதியில் தோற்றும் போனார். இதைவிடச் காங்கிரசின் குட்டித்தலைவர்கள் பேசிய விதம் அவமானம் என்கிறார் லாலு. யானை தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக் கொண்டதற்கும் லாலுவின் செயலுக்கும் எனக்குப் பெரிய வேறுபாடு தெரியவில்லை.

bharathi raja seeman

எஸ்.சுந்தரேசன், வந்தவாசி.

காங்கிரஸ் வெற்றி பெறக் கூடாது என உழைத்த பாரதிராஜா, சீமான் இனி என்ன செய்வார்கள்?

கட்! கட்! கட்!

jayalalitha

எஸ்.பாலாஜி, தேனி.

ஜெயலலிதா தேர்தல் முடிவுகளால் சலிப்படைந்திருக்க வாய்ப்பு இருக்கிறதா?

ஆமாம்! நிறைய எதிர்பார்த்தார். ‘இலங்கைப் பிரச்னையை முன்னிலைப்படுத்துங்கள், எடுபடும்’ என்று யாரோ இவருக்குத் தவறான ஆலோசனையைச் சொல்லியிருக்கிறார்கள். தமிழகப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசியிருந்தாலே இன்னும் அதிக ஓட்டுக் கிடைத்திருக்கும். தமிழீழம் அது இது என்று அந்தர் பல்டி அடித்துப் பேசியதே வீணாகிவிட்டது!

22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்

Most Commented Posts

Tags: , , , , , , , , , ,

Leave a Reply