நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!
“பார்த்து சார்! உங்க மனைவியின் புடவைத் தலைப்பு சக்கரத்துல சுத்திக்கிடப்போகுது” என்று சாலையில் ஒருவர் எச்சரித்தால் “ரொம்பத் தாங்க்ஸ் சார்” என்கிறார் உரியவர்.
“உங்க காரின் கதவு சரியா சாத்தலை பாருங்க’ என்று சிக்னலில் அருகே நிற்பவர் சொன்னால் அசடுவழியப் புன்னகைத்து நன்றிப் பார்வை பார்க்கிறோம். “சார் பாண்ட் ஜிப்பைப் போடுங்க சார்!” என்று பொது இடத்தில் ஒருவர் சொன்னால் அசடு வழியச் சிரித்து நன்றி சொல்கிறோம். “உங்க பொட்டு கோணலா இருக்கு” என்றால் “தாங்க்ஸ்” என்கிறோம் மனப்பூர்வமாக. ஆனால் “நீங்க நடத்துகிறது நல்லா இல்லை” என்று ஒருவர் சொன்னால் “நீங்க ரொம்ப ஒழுங்காக்கும்?” என்று விஷயத்தைத் திசை திருப்புகிறோம்.
“எப்பவும் நல்லாப் பேசுவீங்க. இன்னைக்கு ரொம்ப ஏமாத்திட்டீங்க” என்று அரங்கிலிருப்பவர் அருகே வந்து குறை சொன்னால், “நீங்க இங்க வந்து நின்று பேசிப் பாருங்க, அப்பத்தான் அதுல உள்ள கஷ்டம் புரியும்” என்று கடுப்படிக்கிற பேச்சாளர்கள் உண்டு.
வங்கி வாசலில் “சார்! உங்க பணம் கீழே கிடக்கு” என்பவன் உங்களது ஒட்டு மொத்தப் பணத்தை அபகரிக்கப் போகிறவன். அவனுக்குக் கூட நன்றி சொல்கிறோம். ஆனால் “பணத்தைத் தொழில்ல இப்படியா இறைப்பது? என்று எவரேனும் நம் நலன் கருதிக் கேட்டால் “போய்யா உன் வேலையைப் பார்த்துக்கிட்டு! எம் பணம் என்ன வேணும்னா பண்ணுவேன்! நீ யாருய்யா என் விஷயத்தில தலையிட?” என்று ஒரு நலம் விரும்பியை ஒரே நமிடத்தில் அந்தியனாக ஆக்கிவிடுகிறோம்.
கம்பெடுத்து விளாசுகிற ஆசிரியர் (இந்தக் காலத்தில் முடியுமா என்ன?), கரண்டியைப் பழுக்கக் காய்ச்சி உடம்பில் சூடு போடுகிற தாய் (இதுவும் நடக்காது) சுவரில் தலையை மோதுகிற தந்தை என இவர்கள் அக்கறையின் பாலும் அன்பாலும் செய்வதைப் பிள்ளைகளாக இருந்த காலத்தில் தவறாகவே உணர்ந்தோம்.
சுட்டுவிரல்களின் முனைகள் சூடாக இருக்கலாம். ஆனால், அதன் பின்னணியில் உள்ள அக்கறையை ஏன் உணர மறுக்கிறோம். கோபம் காட்டி, திசை திருப்பி எதிராளியைக் காயப்படுத்தி தவறுகளைத் தொடர்கிறோம். பேஷ்! பேஷ்!
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!
2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?
2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!
2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!
2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!
2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!
2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?
2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!
2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?
2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?
2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!
2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்
2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்
2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை
2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்
2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!
2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?
2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!
2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!
2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?
2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!
2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!
2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்
2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!
2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?
2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!
2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!
2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!
2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?
2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்
2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!
2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!
2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?
2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!
2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?
2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்
2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!
2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!
2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!
2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!
2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!
2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!
2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?
2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!
2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!
2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?
2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!
2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?
2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!
2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!
2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?
2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!
2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?
2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?
2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!
2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?
2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?
2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்
Related Posts Title































