Manmohan to expand cabinet today
மத்திய திமுக அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
மத்திய அமைச்சரவை இன்று (வியாழக்கிழமை) விரிவுபடுத்தப்படுகிறது. புதிதாக 59 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொள்கின்றனர். திமுகவைச் சேர்ந்த 3 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் 4 பேர் இணையமைச்சர்களாகவும் பதவியேற்கின்றனர்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்.
தமிழகத்திலிருந்து 4 கேபினட் அமைச்சர்களும் 4 இணை அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். இதில் திமுகவைச் சேர்ந்த மு.க. அழகிரி, தயாநிதி மாறன், ஆ.ராசா ஆகியோர் கேபினட் அமைச்சர்களாகின்றனர். தமிழக காங்கிரஸ் சார்பில், தற்போது இணை அமைச்சராக இருக்கும் ஜி.கே.வாசன், கேபினட் அமைச்சராகிறார்.
ஏற்கெனவே இணை அமைச்சராக உள்ள பழனிமாணிக்கம் உள்ளிட்ட திமுகவைச் சேர்ந்த நடிகர் நெப்போலியன், எஸ். ஜெகத்ரட்சகன், நாமக்கல் எம்.பி. காந்தி செல்வன் ஆகியோர் இணை அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.
கடந்த ஆட்சியில் கேபினட் அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலுவுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
புதுவையைச் சேர்ந்த நாராயணசாமி (காங்கிரஸ்) மீண்டும் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது பதவியேற்கும் புதிய அமைச்சர்களுக்கும் ஏற்கெனவே கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்று இலாகா ஒதுக்கப்படாத அமைச்சர்களுக்கும் வியாழக்கிழமை இலாகா ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
59 புதிய அமைச்சர்கள் வியாழக்கிழமை பதவியேற்பதை அடுத்து மத்திய அமைச்சரவையின் பலம் 79-ஆக உயரும். இதில் 60 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், 7 பேர் திமுகவினர், 7 பேர் திரிணமூல் காங்கிரஸ், 3 பேர் தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 60 காங்கிரஸ் அமைச்சர்களில் 28 பேர் கேபினட் அமைச்சர்கள்.
புதிய அமைச்சர்களில் 14 பேர் கேபினட் அமைச்சர்கள், 7 பேர் தனிப் பொறுப்பு இணை அமைச்சர்கள், 38 பேர் இணை அமைச்சர்கள்.
புதிய கேபினட் அமைச்சர்கள்: வீரபத்ர சிங், விலாஸ் ராவ் தேஷ்முக், பாரூக் அப்துல்லா, மு.க. அழகிரி, தயாநிதி மாறன், ஆ. ராசா, மல்லிகார்ஜுன கார்கே, குமாரி செல்ஜா, சுபோத்காந்த் சகாய், எம்.எஸ். கில், ஜி.கே. வாசன், பவன்குமார் பன்சால், முகுல் வாஸ்னிக், காந்திலால் பூரியா.
இணை அமைச்சர்கள் தனிப் பொறுப்பு: பிரபுல் படேல், பிரிதிவிராஜ் சவாண், ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், சல்மான் குர்ஷித், தின்ஷா படேல், ஜெய்ராம் ரமேஷ், கிருஷ்ணா தீரத்.
இணை அமைச்சர்கள்: இ. அகமது, வி. நாராயணசாமி, ஸ்ரீகாந்த் ஜெனா, முள்ளப்பள்ளி ராமச்சந்திரன், டி. புரந்தேஸ்வரி, பனபாக லட்சுமி, அஜய் மக்கான், கே.எச். முனியப்பா, நமோ நாராயண் மீனா, ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாத், ஏ. சாய் பிரதாப், குருதாஸ் காமத், எம்.எம். பல்லம் ராஜு, மகாதேவ் கண்டேலா, ஹிரிஷ் ராவத், கே.வி. தாமஸ், செüகதா ராய், தினேஷ் திரிவேதி, சிசிர் அதிகாரி, சுல்தான் அகமது, முகுல்ராய், மோகன் ஜாதுவா, எஸ்.எஸ். பழனிமாணிக்கம், டி. நெப்போலியன், எஸ். ஜெகத்ரட்சகன், காந்தி செல்வன், பிரனீத் கவுர், சச்சின் பைலட், சசிதரூர், பாரத்சிங் சோலங்கி, துஷார்பாய் செüத்திரி, அருண் யாதவ், பிரதிக் பிரகாஷ் பாபு படேல், ஆர்.பி.என். சிங், வின்சன்ட் பாலா, பிரதீப் ஜெயின், அகதா சங்மா.
Related Posts Title
Tags: A Raja, central cabinet, Dayanidhi Maran, MK Azhagiri, ஆ.ராசா, தயாநிதி மாறன், மத்திய அமைச்சரவை, மு.க. அழகிரி