தைவான் சென்று வந்தேன்
இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
தைவானியப் பெண் டினு தங்கள் நாட்டுப் பழங்குடியினரின் பெருமையைப் பற்றிப் பேசப்பேச நான் ஒரு வழி ஆகிப்போனேன்.
இந்தச் சின்னஞ்சிறு நாடு பழங்குடியினருக்குத் தரும் அபாரமான முக்கியத்துவத்தை நம் நாடு தராமல் இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றியது.
தைவானிய அரசு தைவானியப் பழங்குடியினரின் பாரம்பரியப் பெருமைகளைப் போற்றும் வகையில் அவர்களுக்கு எல்லா வகையான ஆதரவையும் அளிப்பதோடு, உதவிகளையும் குறை வைக்காமல் செய்கிறது.
அதே நேரத்தில் இந்தப் பழமைகளையெல்லாம் உதறிவிட்டு நவீனங்களுக்கு வாருங்கள், படியுங்கள், கோட்சூட் அணிந்து மாறுங்கள் புதுயுகத்திற்கு என்று வற்புறுத்துவது இல்லை.
நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்களோ அப்படியே இருங்கள். நவீனங்களுக்கு வர விரும்புகிறீர்களா? அதற்கும் இந்த அரசு தயார் என்கிறார்கள்.
இந்த நவீன யுகத்தில் இப்படிப் பத்தாம் பசலிகளாக உலகம் புரியாமல் வாழ்கிறீர்களே! நீங்கள் மாறவே மாட்டீர்களா என்று அவர்கள் மத்தியில் குற்ற உணர்ச்சியைப் புகுத்துவது இல்லை.
ஆசியாவின் இரண்டாவது பொருளாதார வல்லமைமிக்க நாடான, உலகின் தனி நபர் வருமானத்தில் மிக உயரத்தில் இருக்கும் நாடான தைவான் பழமைக்குப் பழமையையும் புதுமைக்குப் புதுமையையும் போற்றி தம் மக்களை வழி நடத்திச் செல்வது ஒரு மிகச் சிறந்த முன்னதாரணம் என்பேன்.
“லேனா சார், நீங்க அவசியம் பழங்குடி மக்களுக்கெனத் தைப்பே நகரில் உருவாக்கப்பட்டுள்ள கலாசார மையத்தைப் பார்க்க வேண்டும்” என்றார் ஷான்யான்.
“எங்கே உள்ளது? அதன் பெயர் என்ன?”
“மிக அருகில்தான். இதன் பெயர் ‘ஷுங் யீ’.
“ஷுங் யீ” என்று நானும் ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன்.
“கரெக்ட். ஒருமுறை சொன்னாலும் சரியாகப் பிடித்துக்கொள்கிறீர்கள். நான் ஒன்றை இந்தியர்களிடம் நுணுக்கமாகக் கவனித்திருக்கிறேன். இந்தியர்களுக்கு நாக்கு அருமையாக வளைகிறது. ஆங்கிலமாகட்டும். பிரெஞ்ச், சீனம், ரஷ்யச் சொல்லாகட்டும் மிகச் சரியாக துல்லியமான உச்சரிப்புடன் சொல்லுகிறார்கள். சீனர்களின் ஆங்கிலம் சகிக்காது. வெள்ளையர்களின் சீன உச்சரிப்போ எங்கள் மொழி உச்சரிப்போ மிகக் கொடுமை. கறுப்பர்களுக்கு நாக்கு சரி வர வளையாது. திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுத்தாலும் உத்தேசமான உச்சரிப்புத்தான். இந்தியர்கள் மட்டும் மிகத் துல்லியமாக உச்சரிக்கிறார்கள் எந்த மொழிச் சொல்லையும்”.
ஷான்யான் இப்படிச் சொன்ன போது என் முகம் சிறு கலங்கரை விளக்கு ஆகி ஒளிவிடத் தொடங்கியது.
“உலகை நிறைய வலம் வந்திருக்கிறேன். இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான பாராட்டுகளையெல்லாம் கேட்டிருக்கிறேன். உழைப்பாளிகள்; படிப்பாளிகள்; கெட்டிக்காரர்கள் குடும்ப வாழ்வில் வெற்றியாளர்கள் என்றெல்லாம் பாராட்டியிருக்கிறார்கள். ஆனால் மொழி உச்சரிப்பில் துல்லியமானவர்கள் என்கிற பாராட்டை இப்போதுதான் முதல் முறையாகக் கேள்விப்படுகிறேன். உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே உங்கள் கருத்தை எடை போட்டும் பார்க்கிறேன். நீங்கள் சொல்வது உண்மை. எநத மொழியை எப்படி உச்சரிக்கவேண்டுமோ அப்படியே உச்சரிப்பதில் வல்லவர்கள் நாங்கள் என்கிற உங்கள் பாராட்டை மிகைப்படுத்தலற்ற உண்மையான பாராட்டாக நான் ஏற்கிறேன்.”
இதைச் சொன்னதும் ஷான்யான் மறுபடி கெக்கேபிக்கே என்று சிரித்தார்.
பொதுவாக சிரிப்பு என்பது ஒரு முகத்திற்கு அழகு சேர்க்கும் விஷயமாகும். ஆனால் ஷான்யானின் சிரிப்பு மட்டும் விநோதமாக அமைந்து “யோவ்! போதும்மா நீ சிரிச்சது! நிறுத்துய்யா சிரிப்பை சகிக்கலை” என்று சொல்லத் தூண்டுமளவு இருந்தது. இருந்தாலும் இவரது சிரிப்பில் இருந்த கள்ளமில்லாத தன்மையை மட்டும் என்னால் விரும்ப முடிந்தது என்பது உண்மை.
“ஷுங் யீயில் அப்படி என்ன இருக்கும்? பார்க்கச் சுவாரசியமாக இருக்குமா? போவது வெகுமதியான விஷயமா?”
“நிச்சயமாக. ஆனால் ஒன்று, பழங்குடி மக்களைப் பற்றிய இரசனை உங்களுக்குச் சிறிதளவேனும் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் போரடிக்கும்தான்.”
நன்கு உள்ளம் உணர்ந்து பேசுகிறார் இந்த ஷான்யான்.
“உண்மை ஷான்யான் சார்!”
“சார் என்றெல்லாம் கூப்பிட்டு என்னை வயதானவனாக (?) ஆக்காதீர்கள். நாம் நெருங்கிவிட்டோம்(!) என்பதற்கான முதல் ஆதாரமே நீங்கள் என்னை உரிமையோடு பெயர் சொல்லிக் கூப்பிடுவதுதான்.”
“மாட்டேன்.”
உடனே சற்று அதிர்வு காட்டிய ஷான், “ஏன் ஏன்?” என்று குரலில் சற்றுப் பதற்றம் சேர்த்துக்கொண்டார்.
“நீங்கள் என்னை சார் என்றுதான் குறிப்பிடுகிறீர்கள்.”
“நீங்கள் இந்த மண்ணின் விருந்தினர். பத்திரிகையாளர் வேறு. நாங்கள் சரிவர உங்களை நடத்தாவிட்டால் சுக்கு நூறாக எங்களைக் கிழித்துப் போட்டுவிடுவீர்கள்.”
“அப்படியில்லை ஷான்”
“அப்படித்தான் அப்படியேதான். ஷான் என்றே என்னை அழையுங்கள்.”
“சரி.”
ஷுங் யீ யில் பழங்குடி இன மக்களின் வாழ்க்கை முறை அப்படியே சித்தரிக்கப்பட்டிருக்கும். இவர்களின் நெசவு முறையை நேரில் காணலாம். இவர்கள் செய்யும் கைத்தொழில் அனைத்தையும் நேரில் காணலாம். இவர்கள் வேட்டையாடப் பயன்படுத்திய கருவிகள்; ஆயுதங்கள், உணவு முறைகள் எல்லாவற்றையும் காணலாம். ஆனால் இவர்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று காணவேண்டும் என்றால் சம்பிரதாயங்கள் அதிகம். சமயங்களில் அனுமதி கிடைக்கும். சமயங்களில் அப்பழங்குடி இனத்தலைவர் மறுக்கலாம். அவர் மறுத்துவிட்டால் அதில் அரசு அதிகாரிகள்கூடத் தலையிடமாட்டார்கள். அப்புறம் ஒன்று இவர்களது பழம் நடனங்களை நேரில் கண்டுகளிக்க நல்ல வாய்ப்பு.
“எந்நேரமும் ஆடிக்கொண்டே இருப்பார்களா என்ன?”
“அப்படியில்லை. இவர்களது நடன வகைகள் சி.டி.யில் கிடைக்கும். ஆர்வமிருந்தால் வாங்கிக்கொண்டு வந்து வீட்டில் போட்டுப் பார்க்கலாம். ஆனால் நமக்கு அதிர்ஷடம் இருந்தால் சமயங்களில் இந்தப் பழங்குடியினரின் கலைக் குழுக்கள் ‘ஷுங் யீ’க்கு வரும். கலை நிகழ்ச்சிகளை நடத்தும்.”
“நான் பத்திரிகையாளன். எல்லாப் பிரிவுகளிலும் எனக்கு ஆர்வம் உண்டு. எனக்கு எதுவும் தள்ளுபடியில்லை.”
“அப்படியானால் இன்றே கிளம்புவோம்.”
நான் எங்கு செல்ல விரும்பினாலும், என் விருப்பங்கள் எது என்றாலும் அவற்றை நிறைவேற்றுவதில் ஷான்யானுக்கு இருந்த ஆர்வம் நாம் இவர்களுக்கு என்ன செய்துவிட்டோம்; ஏன் இப்படிப் பாய்ந்து பாய்ந்து உதவுகிறார் என்கிற உணர்வே எனக்குள் தலைதூக்கி நின்றது.
(தொடரும்)
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Related Posts Title































