» Samayal .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 22 May 2009

Samayal

indian-chef.jpgபருப்பு உருண்டைக் குழம்பு - அலமேலு ரங்கநாதன்

தேவையான பொருட்கள்

துவரம்பருப்பு - 250 கிராம்
கடலைப் பருப்பு - 50 கிராம்
மிளகாய் வற்றல் - 4
தேங்காய்த் துருவல் - 1/2 கப்
பெருங்காயப் பொடி - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 6 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சாம்பார் பொடி - 6 தேக்கரண்டி
புளி - எலுமிச்சம் பழ அளவு
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை :
பருப்புகளை இரண்டு மணி நேரம் ஊற வைத்து கழுவி தண்ணீரை வடிய வைக்கவும். வடித்ததும் உப்பு, மிளகாய் வற்றல், தேங்காய் சேர்த்து உசிலிக்கு அரைப்பது போல் அரைக்கவும். புளியைத் தண்ணீர் அதிகம் விட்டுக் கரைத்து உபபு, மஞ்சள் தூள் கலந்து கொதிக்க வைக்கவும். இண்டாலியம் சட்டி அல்லது இருப்புச்சட்டியில் 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்ததும் 1/4 தேக்கரண்டி கடுகு, 1/4 தேக்கரண்டி பெருங்காயம் போட்டுத் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அரைத்த பருப்பைப் போட்டுக் கிளறி உடனே அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைத்து, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு சின்னச்சின்ன உருண்டைகளாக உருட்டி, கொதிக்கும் புளியில் இரண்டு இரண்டாகப் போடவும். முதலில் போட்ட உருண்டை கரையாமல் வெந்து மேலே மிதந்து வருகிறதா என்று பார்த்துவிட்டு, மீதி உள்ள உருண்டைகளையும் போட்டு வேக வைத்து, உருண்டைகள் நன்றாக வெந்ததும், சாம்பார் பொடி கலந்து கொதிக்க வைத்து மீதி உள்ள எண்ணெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்து கறிவேப்பிலை போட்டு பரிமாறவும்.

குறிப்பு : உருண்டைகள் புளியில் போட்டதும் கரைத்தால் 2 தேக்கரண்டி அரிசி மாவு அல்லது கடலை மாவு கலந்து உருட்டிப் போடவும். அரைப்பது பக்குவமாக இருந்தால் கரையாது. தண்ணீர் அதிகம் சேர்த்து அரைத்து நெகிழலாக இருந்தாலும், சரியாக மசியாமல் இருந்தாலும் சில சமயம் கரையும். பக்குவமாக அரைக்கவும். வெங்காயம் வதங்கியதும் அரைத்த பருப்பைப் போட்டு அதிக நேரம் அடுப்பில் வைத்துக் கிளறக் கூடாது. உடனே அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.

Chettinadu Samayal

2009/05/15 பீர்க்கங்காய் மசியல்

2009/05/08 மிளகுக் குழம்பு

2009/05/01 வெங்காயக் குழம்பு

2009/04/24 மோர்க்குழம்பு - முதல் வகை

2009/04/17 கீரை மசியல்

2009/04/10 தக்காளிப் பழக்குழம்பு

2009/04/03 கருணைக் கிழங்கு மசியல்

2009/03/27 புளிக்காய்ச்சல்

2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு

2009/03/13 மாம்பருப்பு குழம்பு

2009/03/06 பருப்பு உப்படான்

2009/02/27 வற்றல் குழம்பு

2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு

2009/02/13 அவியல்

2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு

2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு

2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை

2009/01/16 பலாக்கொட்டை கூட்டு

2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு

2009/01/02 ஏழுகறிக் கூட்டு

2008/12/26 மசித்த கீரை

2008/12/19 பத்தியக்கூட்டு

2008/12/12 வெண்டைக்காய் கூட்டு

2008/12/05 ரசவாங்கி

2008/11/28 வாழைக்காய் கூட்டு

2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி

2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்

2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை

2008/10/31 புடலங்காய் கறி

2008/10/24 முட்டைக்கோஸ் கறி

2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி

2008/10/10 சேனைக்கிழங்கு கறி

2008/10/03 சேப்பங்கிழங்கு கறி

2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை

2008/09/19 பூரி உருளைக்கிழங்கு

2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்

2008/09/05 உருளைக்கிழங்கு கறி

2008/08/29 காரட் கறி

2008/08/22 கட்டு சாதக் கறி

2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி

2008/08/08 வெண்டைக்காய் கறி

2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்

2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி

2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்

2008/07/11 கத்தரிக்காய் கறி

2008/07/04 மசாலா வாழைக்காய்

2008/06/27 வாழைக்காய் பொடி

2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்

2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை

2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை

2008/05/30 வாழைக்காய் வதக்கல்

2008/05/23 வாழைக்காய் கறி

2008/05/16 மிளகுப் பொடி

2008/05/09 கறிவேப்பிலைப் பொடி

2008/05/02 இட்லிப் பொடி

2008/04/25 மீல் மேக்கர் குழம்பு

2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு

2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு

2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு

2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு

2008/04/21 பிரிஞ்சி சாதம்

Related Posts Title


Leave a Reply