» Prevent old age bylaser treatment .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 15 May 2009

Prevent old age bylaser treatment

laser-treatment.jpgவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்

முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா? – கே.எஸ்.சுப்ரமணி

பிரிட்டனில் 2000 ஆம் ஆண்டில் “பரபரப்பூட்டுகிற எளிய வழி” என்ற பெயரில் சில மணித்துளிகளுக்குள் முகத்தில் உள்ள முதுமைச் சுருக்கங்களை லேசர் கதிர்களில் எளிதில் நீக்கிவிடுகிறார்கள். இந்தச் சில நிமிடங்களைச் செலவு செய்தால், இளமையான முகத்துடன் காட்சியளிக்க முடியும். இதன் மூலம் பத்து முதல் இருபது வயதுவரை குறைந்து காட்சியளிக்க முடியும். இதற்கான கட்டணம் 350 பெளண்டுகள். குறைந்தது இரண்டுமுறை லேசர் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.

பழைய லேசர் சிகிச்சை முறையில், முகத்தின் மேல்தோலை நீக்குதல் எனும் அடிப்படையில் ஒளியால் எரித்துவிடுகிறார்கள். இதனால் மூன்று மாதங்கள் வரை முகத்தில் சற்றே வலி இருக்கும். தோலும் இரத்தச் சிவப்பாகிவிடும்.

இந்த லேசர் சிகிச்சை முறையில் இத்தகைய கஷ்டங்கள் கிடையாது. துப்பாக்கி போல உள்ள லேசரை முகத்தில் வைத்து ஓரிரு தடவை சுட்டால் போதும். 80 டிகிரி செல்சியஸ் வெப்பம் முகத்தோலின் அடியில் உள்ள கொலாஜென் என்ற புரதப் பொருளை புதிதாகத் தயாரிக்கத் தூண்டிவிடும். இந்தப் புதிய புரதப் பொருள் அதிகமாக வளர்வதே முகத்தில் உள்ள வரிகள், சுருக்கங்கள் முதலியன மறைய உதவும். இவை உண்மையில் இளமையான தோலை உருவாக்கும் கட்டுமானப் பொருள்களே. புதிய புரதத்தை உருவாக்கும் இந்த செல்களுக்கு ஃபைப் ரோபிளாஸ்ட் என்று பெயர். லேசர் ஒளியின் வெப்பம் ஃபைப்ரோ பிளாஸ்ட்ஸை அடைந்ததும் புதிய புரதப் பொருள்கள் வேகமாக உற்பத்தியாகின்றன. நான்கு மாதங்களில் இவை நன்கு சதைப்பற்றுடன் வளர்ந்து முகம் முழுவதும் சரியான விகிதப்படி பரவிவிடுகிறது. இதனால் முகத்தில் உள்ள சுருக்கங்கள், கோடுகள் முதலியன மறைந்துவிடுகின்றன.

முதல் முறை லேசர் சிகிச்சை பெற்ற ஆறாவது வாரத்திலேயே முகத்தில் உள்ள சுருக்கங்கள் எல்லாம் இருபது வயதுக்காரரின் தோல் போல் மிகவும் மென்மையாகி விடுவதைப் பார்த்து ஒவ்வொருவரும் வியக்கின்றனர். நம்ப முடியாத உண்மை என்கின்றனர்.

ஆறு முதல் பன்னிரண்டு மாதங்களுக்கு ஒருமுறை முகத்தை ஒரு முறை இது போல ஒளியால் ஸ்பிரே செய்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

முதல் கட்டமாக 212 பேர் இந்த முறையில் இளமையைப் புதுப்பித்துக் கொண்டார்கள். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் முதல் சிகிச்சையிலேயே இளமையான முகத்தைப் பெற்றார்கள். மற்றவர்கள் இரண்டாவது முறை சிகிச்சை பெற்றதும் இளமையான முகத்தைப் பெற்றார்கள். இது லண்டனில் நடைபெற்ற சிகிச்சையில் கிடைத்த விபரங்கள்.

பிரிட்டனில் ஹார்வே மெடிக்கல் குரூப் எல்லாப் பகுதிகளிலும் இந்தச் சேவையைச் செய்து வருகிறது.

டாக்டர் கிரிகோரி செர்னாப் என்ற அமெரிக்கர் முறைப்படி லைசென்ஸ் பெற்று கலிபோர்னியாவில் உள்ள லாண்டா ரோஸாவிலும், இண்டியானாவில் உள்ள இண்டியானா போலிஸ் நகரிலும் உள்ள தனது மருத்துவமனையில் பலருக்கு இந்தச் சிகிச்சை அளித்து வெற்றி பெற்றுள்ளார். குறைந்த நேரத்தில் வலி இன்றி முகத்தில் சுருக்கங்கள் நீங்குவதால் இங்கேயும் கூட்டம் அலைமோதுகிறது.

முப்பது வயது முதல் நாற்பது வயதுக்குள் உள்ளவர்கள் இந்தச் சிகிச்சையை செய்து கொண்டால் முகத்தில் சுருக்கமே விழாது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டு அல்லது மூன்று முறை சிகிச்சை எடுத்துக் கொண்டால் போதும். தோலின் அடியில் உள்ள ஃபைப்ரோ பிளாஸ்ட்ஸ் என்னும் நார்ப்பொருள்தான் உண்மையில் முகத்தில் பரவி இளமையான முகத்தை ஏற்படுத்துகிறது. தோல் சுருக்கத்தையும் நீக்குகிறது.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

Most Commented Posts


Leave a Reply