» Disease relief plants - Akbar Kausar .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 15 May 2009

Disease relief plants - Akbar Kausar

akbar-kausar.jpgமணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள்

- வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

கேது பகவான் கோவிலில் வணங்கப்படும்
தர்ப்பை புல் ()

, VAR, KINIGII; DUR; GRAMMEAE

திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் - பாடல்
உள்ளா றாததோர் புண்டரி
கத்திரள்
தெள்ளா றாச்சிவ சோதித்
திரளினைக்
கள்ளா றாதபொற் கொன்றை
கமழ்சடை
நள்ளா றாஎன நம்வினை
நாசமே

ஒன்பது கிரகங்களில் கடைசி கிரகம் நெப்டியூன் () ஆகும். இதனைத் தமிழில் கேது பகவான் என்பார்கள். இவருக்கு சொந்த இடமில்லாமல் ஏழு கிரகங்களிலும் சுற்றிக் கொண்டு இருப்பார்.

ஏழு கிரகங்களில் சிறிது காலம் தங்கியிருப்பார். இவர் ஞானம் தருதல், வம்சத்தை விருத்தி செய்தல், மோட்சம் கொடுத்தல், மரணத்தை உண்டாக்குதல் போன்ற பணிகளைச் செய்பவர்.

இதை ‘எமகண்டம்’ என்பார்கள்.

இந்நேரத்தில் எந்தச் செயல் செய்தாலும் சிறிதளதாவது காயம் ஏற்படும் அல்லது விபத்து ஏற்படும். சில சமயம் மரணமும் ஏற்படும். இவை தவிர்ப்பதற்காக இந்து சமுதாய மக்கள் கேது பகவானுக்குக் கோயில் அமைத்து, அதற்குள் சித்திரலேகா தேவியுடன் தர்ப்பைபுல், வைத்து வணங்குவார்கள். நெப்டியூன் கிரகம் கேது பகவானுடன் நேரடியாக தர்ப்பை புல்லுக்கு தொடர்பு இருப்பதால் மரணத்தை ஏற்படுத்தும் நோய்களுக்கு தர்ப்பை புல் மருந்தாக அமைந்திருக்கின்றது என்று வேதங்கள் கூறுகின்றன.

தர்ப்பை புல்லுக்கு இன்னொரு பெயர் ‘குசா’ என்பதாகும். இராமபிரானின் இரண்டாவது மகனின் பெயர் குசா. அவருடைய பெயரைக் குறிக்கும் அளவில் இந்தப் புல்லின் பெயரை வைத்துள்ளார்கள்.

நாகப்பட்டினம் மாவட்டம், திருநள்ளாரிலுள்ள ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் சிவன் கோவிலில் தர்ப்பை புல்லுக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது.

மேலூர் மாவட்டம், பொன்னை அருகே உள்ள விநாயகபுரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீநவக்கிரக கோட்டை ஆலயத்தில் கேது பகவான் கோவில் உள்ளது. அங்கு தெய்வத்துடன் தர்ப்பை புல்லையும் சேர்த்து வணங்குகிறார்கள்.

* தர்ப்பைப்புல் உஷ்ணத்தை அகற்றி உடலைக் குளுமை செய்கிறது.
* பாலும், சிறுநீரும் அதிகளவில் சுரக்கச் செய்கிறது.
* சிறுநீரக வலிக்குக் குணமளிக்கிறது.
* பாம்புக் கடி விஷத்தை அகற்றுகிறது.
* தர்ப்பை புல் பித்தம், வாதம், கபம் ஆகிய மூன்று தோஷங்களை சுத்தம் செய்கிறது.
* சிறநீரக கற்களைக் கரைக்கிறது. இரத்தத்தில் தேங்கும் யூரியா, கிரியாட்டினின் கழிவுப் பொருட்களை அகற்றகிறது.
* உடல் எடையைக் குறைக்கவும் பயன்படுகிறது. மொத்தத்தில் இது சிறுநீரக நோய் நிவாரணி என்று வேதங்கள் கூறுகின்றன.

உயிரைக் குடிக்கும் நோய்களில் கிட்னிஃபெயிலியர்தான் மோசமானது. ஆயுர்வேத, யுனானி மருத்துவர்கள் தர்ப்பை புல்லை பதப்படுத்தி மருந்தாகத் தருகின்றனர். அதனால் டயாலிஸிஸ்  செய்யத் தேவையில்லை. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் தேவைப்படுவதில்லை.

50 வருடங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை இல்லாத காலக்கட்டத்தில் மக்கள் இறைவனை வணங்கிவிட்டு வைத்தியர் தரும் தர்ப்ைப்புல் மருந்தைத்தான் பயன்படுத்தியதாக வேதங்கள் கூறுகின்றன.

இந்து சமுதாயத்தில் நன்றியைச் செலுத்தும் பழக்கம் அதிகளவில் இருப்பதால் தனக்கு வாழ்வளித்த தர்ப்பைப்புல்லை வணங்கும் பழக்கம் உள்ளது.

யுனானி மருத்துவத்தில் தர்ப்பைப்புல் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை முறையாகப் பதப்படுத்தி கிட்னி ஃபெயிலியர், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாகத் தரப்படுகிறது.

தர்ப்பைப் புல்:
காரைக்கால் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் போக மார்த்த பூண் முலையாள் கோயிலில் தர்ப்பைப்புல் தலவிருட்சமாக உள்ளது. இது காரைக்காலில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

இங்கு மரகதலிங்கத்தைத் தரிசிக்க வேண்டியது அவசியம். இக்கோயிலில் சனி பகவானைத் தவிர மற்ற கிரகங்களுக்குக் கோயில் கிடையாது.

இங்குள்ள லிங்கம் தர்ப்பைப் புற்களை ஒன்றாகச் சேர்த்து அமைத்தது போல காணப்படுகிறது.

தர்ப்பையின் மகிமை, இந்துக்களின் நம்பிக்கை:
தர்ப்பையை தேவ காரியங்களுக்கு கிழக்கு நுனியாகவும், பித்ரு காரியங்களுக்கு தெற்கு நுனியாகவும் பயன்படுத்துவார்கள். தர்ப்பை உஷ்ண வீரியமும், அதிவேகமும் கொண்டது.

மேலும் பஞ்ச லோகங்களில் தாமிரத்தில் உள்ள மின்சார சக்தி தர்ப்பையிலும் உண்டு. எனவேதான் கோவில் கும்பாபிஷேகங்களில் தங்க, வெள்ளி கம்பிகளின் இடத்தில் அருளைக் கடத்த தர்ப்பையைப் பயன்படுத்துவார்கள்.

தர்ப்பையின் சாம்பலால்தான் கோவிலில் உள்ள விக்ரங்களையும், பாத்திரங்களையும் துலக்குவார்கள். எல்லா விதமான ஆசனங்களையும்விட தர்ப்பாசனம் சிறந்தது என்பார்கள். பிரேத காரியங்களில் ஒரு தர்ப்பையாலும், கப காரியங்களில் இரண்டு தர்ப்பைகளாலும், பித்ரு காரியங்களில் மூன்று தர்ப்பைகளாலும் தேவகாரியங்களில் ஐந்து தர்ப்பைகளாலும் சாந்தி, கர்மா போன்றவற்றில் ஆறு தர்ப்பைகளாலும் மோதிரம் போல் முடிய வேண்டும். இறைவழிபாடு, ஜபம், ஹோமம், தானம், பித்ரு தர்ப்பணம் முதலியவற்றில் கையில் தர்ப்பை மோதிரம் போட்டுக் கொள்ளாமல் செய்வது உரிய பலனைத் தராது என்பார்கள்.

கிரகண காலங்களிலும், அமாவாசையிலும் தர்ப்பைக்கு வீரியம் அதிகம். எனவேதான் கிரகண காலங்களில் உணவுப் பண்டங்களில் நுண்ணிய கிருமிகளால் கெடமாமலிக்க தூய்மையான தர்ப்பையைப் பரப்புகிறார்கள். தர்ப்பை மோதிரத்தை அணிந்துதான் பிராணாயாமம் செய்ய வேண்டும் என்பதும் வழக்கமாக உள்ளது.

தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்:
திருநள்ளாறு கோயிலில் தருப்பைப்புல் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.

சங்க இலக்கியம்:
‘தருப்பை’ என்பது ஒருவகையான நீளமான புல் ஆகும். இதனைக் கொண்டு கூரைவேயப்படும் என்கிறார் கடியலூர் உருத்திரங்கண்ணனார். பெரும் பாணாற்றுப்படை என்னும் நூலில் சங்க இலக்கியப்பெயராக தருப்பை எனவும், உலக வழக்குப் பெயராக தர்ப்பை, குசப்புல், தருப்பை, நாணல் எனவும் வழங்கப்படுகிறது. இது புதர்ச் செடியாகத் தரையடி மட்டத் தண்டிலிருந்து செழித்து வளரும்.

“வேழம் நிரைத்து வெண்கோடு வரைகி
தாழை முடித்து தருப்பை வேய்ந்த

குறியிறைக் குரம்பைப் பறியுடைமுன்றில்” என்று பெரும்பாணாற்றுப்படைப்பாடலில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் தருப்பைப்புல்லைக் குறிப்பிட்டுள்ளார். இதனையே நச்சினார்க்கினியர் பின்வருமாறு உரை கண்டுள்ளார்.

‘வஞ்சி மரமும் காஞ்சி’ மரமுமாகிய வெள்ளிய கொம்புகளைக் கைகளுக்கு நடுவே கலந்து, நாற்றி, வேழக்கோலை வரிச்சாக நிரைத்துத் தாழை கலந்து, நாரால் கட்டி தருப்பைப் புல்லாலே வேயப்பட்ட குறிய இறப்பையுடைய குடிலினையும் என்பதால், கூரை வேய்தற்குத் தருப்பைப்புல் பயன்படுத்தப்பட்டது என்பதும் இவற்றை வேழக் கோலாலே வரிசை நிரைத்துத் தாழையின் நாரினால் கட்டுவர் என்பதும் அறியப்பட்டுள்ளது.

கேது:
காரைக்கால் தரங்கம்பாடி வழியே பூம்புகார் செல்லும் வழியில் மேலையூருக்கு அருகில் அமைந்துள்ள கிராமம் மேலப்பெரும்பள்ளம். இது கேதுவுக்கு உரிய தலமாகும்.

ஞானகாரகன், புகழ் பெறுபவன், மோட்சகாரகன் இவனே, விஞ்ஞானம், மெய்ஞானம் ஆகிய அனைத்து துறைகளையும் தன்வசம் வைத்திருப்பவர்.

வேற்று மொழியில் தேர்ச்சி தருபவன், தாய்வழிப்பாட்டனுக்கு காரகன் எனவும், கீழ் பெரும்பள்ளம் கேதுவுக்கு உரிய தலம் எனவும் அறியலாம்.

கேது - நவக்கிரகங்களுள் 9-ஆவது இடத்தைப் பெறுபவர்.

இந்து சாஸ்திரப்படி கேது பகவான் () பற்றிய குறிப்புகள்

கிரக பெயர் - கேது பகவான்
அம்மன் - சித்ரலேகாதேவி வம்ச விருத்திகாரகன் மோட்சம் கொடுப்பவர். சர்வராசி (எல்லா ராசிக்கும் உரியர்) அஸ்வினி, மகம், மூலம்.
அதிதேவதை - கணபதி
ப்ர்த்தி தேவதை - பிரம்மாஹ்
நவக்கிரகத்தில் - தெற்கு முகம் தலைபாம்பு (எமகண்டநேரம்)
வாகனம் - ஆடு
நிறம் - பல நிறம்
தானியம் - கொள்ளு
நவரத்தினம் - வைடூரியம்
விருட்சம் - தர்ப்பை
திக்கு - வடமேற்கு

அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்

2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்

2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்

2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்

2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி

2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்

2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்

2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி

Most Commented Posts


One Response to “Disease relief plants - Akbar Kausar”

  1. sudhakar

    send details related the நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள்

Leave a Reply