‘பஞ்ச்’ பாலு
தயவுசெய்து முதலில் பின்குறிப்பைப் படித்து விடவும்.
பஞ்ச் டயலாக் விடும் பெருந்தலைகளுக்கே பஞ்ச் விடுவது தான் பஞ்ச் பாலுவின் பாலிசி!
அவரு எவ்வளவு பவரு உள்ளவரா இருந்தாலும் பஞ்ச் பாலுக்கிட்ட மாட்டினா பஞ்சு, பஞ்சா பறக்க வேண்டியதுதான்.
பின் குறிப்பு: கண்டிஷன்ஸ் அப்ளை மாதிரி இது என்னடா பின்குறிப்புன்னு பார்க்கறீங்களா. வழக்கமான மேட்டர்தான்.
பஞ்ச் பாலு அடிக்கும் கமெண்டுகள் சும்மா தமாசுக்குத்தான். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் எழுதப்படுவதில்லை.
சும்மா படிச்சுட்டு, ஆங்… அப்படியான்னு ரொம்ப ஈசியா எடுத்துக்கிட்டு போயிடனும். ஓ.கே?
…………………..
40 தொகுதிகளிலும் வெற்றிபெறச் செய்யுங்கள். இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைத்துத் தருவேன்.
-ஜெயலலிதா
இன்னொரு நாட்டுக்குள் ஒரு நாட்டை அமைத்துத் தருவேன் என்று இன்னொரு நாட்டில் ஓட்டு கேட்கற ஒரே தலைவர் நீங்களாகத்தான் இருக்க முடியும் மேடம். ஏற்கனவே 40 தொகுதியையும் வென்றவராலேயே எதுவும் சாதிக்க முடியவில்லை எனும்போது, மக்கள் உங்கள் பேச்சை எந்தளவுக்கு கேட்பார்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் உங்கள் பேச்சு மற்ற நாட்டு இறையாண்மையில் குறுக்கிடுவது போல் உள்ளதே. தேர்தலுக்காக மட்டுமே நீங்கள் பேசுகிறீர்கள் என்பது தேர்தலுக்குப் பின்னர் மக்களுக்குப் புரிய வந்தால் காலத்துக்கும் உங்களை மன்னிக்க மாட்டார்கள்.
40 தொகுதிகளிலும் வெற்றிபெற்றால் சாதிததுக் காட்டுவேன்.
-விஜயகாந்த்
40ம் வேணுமா? ஓண்ணு, ரெண்டு குறைஞ்சா ஏத்துக்க மாட்டீங்களா? இப்பவே புரியுது உங்க சுயநலம். 234 சட்டசபைத் தொகுதிகளில் நின்றாலும் விருத்தாசலத்தில் உங்களை மட்டும்தான் மக்கள் வெற்றிபெறச் செய்தார்கள். அவர்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?
அவர்களுக்காக எத்தனை முறை சட்டமன்றத்தில் பேசி உள்ளீர்கள்?
கோவையில் ராணுவ வாகனத்தைத் தாக்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும்.
-இ.கம்யூனிஸ்ட் செயலர் தா. பாண்டியன்.
இன்று ராணுவ வாகனத்தை மறித்தவர்கள் நாளை ராணுவத்துடன் மோத மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை உங்களால் தர முடியுமா?
உணர்ச்சிவசப்படுவதால் ஒன்றும் உருப்படியாக நடக்கப் போவதில்லை என்பது நன்றாகத் தெரிந்தும் எப்படித்தான் நாடகம் நடத்துகிறார்களோ புரியவில்லை.
தமிழகத்தில் வேலையில்லாதத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 60 லட்சம் பேர் பதிவு செய்துவிட்டு காத்திருக்கிறார்கள். இன்னும் ஓராண்டுக்குள் இது 85 லட்சமாக உயர்ந்துவிடும்.
-அன்புமணி ராமதாஸ்
நீங்க மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோது இதெல்லாம் கண்ணுக்குத் தெரியலையா? நீங்கள் அமைச்சராக இருந்த காலத்தில் குழந்தைகள் பிறப்பு சதவிகிதத்தை கொஞ்சமாகக் குறைத்திருநந்தால் கூட வருங்காலத்தில் ஏற்படக்கூடிய வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைத்திருக்கலாம். யோசித்திருக்கிறீர்களா இதைப்பற்றி.
சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போதும் இந்த நெருக்கடி இந்தியாவைத் தாக்கவில்லை. இதற்கு காரணம் இடதுசாரிகளின் முறையான வழிகாட்டுதலே.
-டி.ராஜா இ.கம்யூ.,தேசிய செயலர்
அப்ப, இந்தியா நல்லாயிருக்கிறது பிடிக்காமத்தான் ஆதரவை விலக்கினீர்களா?
Punch Balu’s Old punches
Related Posts Title































