Friday, 8 May 2009
சுனேனாவுடன் காதலா?: நகுலன் பதில்

சுனேனாவுடன் நெருங்கிய நட்பு இருக்கிறது. அது எப்படி காதலாகும்? எனக் கேட்கிறார் நகுலன்.
நகுலன் - சுனேனா ஜோடி நடிக்கும் புதிய படம் மாசிலாமணி.
இப்படம் குறித்து நேற்று நிருபர்களிடம் பேசினார் நாயகன் நகுலன். அப்போது அவர் கூறுகையில்,
”காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சுனேனாவுடன் நடிக்கிறேன். அவருக்கும் எனக்கும் காதல் என்கிறார்கள். இருவரும் நெருங்கிய நண்பர்கள். நட்பு எப்படி காதலாகும்?
படப்பிடிப்பில் எனக்கும் அவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக வேலை செய்கிறது. அதனால் அவரும் நானும் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளும் பாடல் காட்சிகளும் ரசிக்கும்படி அமைகின்றன. முந்தைய படத்தின் சாயல் எதுவும் இல்லாமல் இதில் நடிக்கிறேன்.
அடித்தட்டு மக்கள் வாழும் பகுதியைச் சேர்ந்த நான், உயர் குடும்பத்தைச் சேர்ந்த சுனேனாவைக் காதலிக்கிறேன் (கதையில்தான்). அதற்கு ஏற்படும் ஏகப்பட்ட தடைகளை எப்படி கடக்கிறேன் என்பது தான் கதை.
இதில் அதிரடி சண்டைக்காட்சிகளும் அதிவேக நடனமும் பேசப்படும் விஷயமாக அமையும். குறிப்பாக க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை வேறு எந்தப் படத்திலும் பார்த்திருக்க முடியாது.
ஆக்ஷன், காதல், சென்டிமென்ட், காமெடி கலந்த ஜனரஞ்சகப் படமாக மாசிலாமணி இருக்கும்.
அதிகம் சம்பளம் கேட்பதாக வரும் வதந்திகளை தவிர்க்கிறேன். இப்போதைக்கு திருமணம் பற்றியும் பேசமுடியாது” என்றார் நகுலன்.
பேட்டியின்போது இயக்குநர் ஆர்.என்.ஆர். மனோகர், கதாநாயகி சுனேனா ஆகியோர் உடனிருந்தனர்.
































