Monday, 4 May 2009
சூர்யா-அனுஷ்கா நடிக்கும் சிங்கம்

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ‘ஆதவன்’ படத்தில் நடித்து வரும் சூர்யா, இதையடுத்து ‘சிங்கம்’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இது அவருடைய 25-வது படம்.
‘சில்லுனு ஒரு காதல்’, ‘பருத்தி வீரன்’ படங்களைத் தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், பிக் பிக்சர் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தை ஹரி இயக்குகிறார். ‘ஆறு’, ‘வேல்’ படங்களுக்குப் பிறகு ஹரி-சூர்யா இணையும் மூன்றாவது படம் இது.
இதில் தெலுங்கின் முன்னணி நடிகை அனுஷ்கா (அருந்ததீ- யில் கலக்கியவர்) கதாநாயகியாக நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், விவேக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.
சூர்யா காவல்துறை அதிகாரியாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நெல்லை, தூத்துக்குடி, அம்பாசமுத்திரம், ஹைதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இசை -தேவிஸ்ரீபிரசாத். ஒளிப்பதிவு -ப்ரியன். கலை -கே.கதிர். படத்தொகுப்பு -வி.டி.விஜயன். தயாரிப்பு -ஞானவேல்ராஜா.
































