» Disease relief plants - Akbar Kausar .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 1 May 2009

Disease relief plants - Akbar Kausar

akbar-kausar.jpgமணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள்

- வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

சனி பகவான் கோவிலில் வணங்கப்படும்
வன்னி மரம் ( LINN)

திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் பாடல் :
வம்பார் கொன்றை வன்னி மத்தம்
மலர்தூவி
நம்பா வென்ன நல்கும் பெருமான்
உறைகோயில்
கொம்பார் குரவு கொகுடி முல்லை
குவிந்தெங்கும்
மொய்ம்பார் சோலை வண்டு பாடும்
முதுகுன்றே

வன்னி மரத்தைப் பற்றி ரிக்வேதம், மகாபாரதம் மற்றும் ராமாயணத்திலும் கூறப்பட்டிருக்கின்றது. நவக்கிரங்களில் இது சனி பகவான் () தொடர்பு கொண்டது. பெண் தெய்வம் நீலாதேவிக்குப் படைக்கப்படுகிறது.

விருத்தாசலத்திலுள்ள விருதகிரீஸ்வரர் கோவிலிலுள்ள வன்னி மரத்தை பக்தர்கள் 9 முறை சுற்றி வந்து மரத்தின் தண்டில் நூலைக் கட்டி நேர்த்திக் கடன் செலுத்துவார்கள். இதனால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். சொத்து சுகம் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர். இம்மரத்தின் பட்டையைத் துண்டு செய்து சாப்பிடுகின்றனர். இதனால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது என்று நம்புகின்றனர்.

திருச்சி மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வன்னிய சமுதாய மக்கள் வன்னி மரத்தைப் புனித மரமாகக் கருதுகின்றார்கள். வன்னிய சமுதாய மக்கள் மரணம் அடைந்தபின் வன்னிமரக்கட்டைகளின் மீது பூத உடலை வைத்து எரித்து சாம்பலாக்கும் பழக்கம் இன்றும் காண முடிகிறது.

வேலூர் மாவட்டம் பொன்னை அருகே உள்ள விநாயகபுரம் ஒட்டநேரியிலுள்ள அருள்மிகு ஸ்ரீநவக்கிரக கோட்டை ஆலயத்தில் வன்னி மரத்திற்கு பூஜை செய்யப்படுகிறது. சனி பகவான், நீலாதேவி பெண்அம்மன், காக வாகனத்தில் கருப்பு நிற ஆடை அணிவித்து எள் தானியத்துடன், நவரத்தினத்தில் நீலக்கல் பதித்து, வன்னி மரத்தின் அடியில் மேற்கு திசையை நோக்கி மகரம், கும்ப ராசியில், இந்த ஆலயத்தில் சிறப்பான பூஜைகள் நடைபெறுகின்றன.

ராமபிரான் ராவணணுடன் போரிடப் புறப்படுவதற்கு முன் வன்னி மரத்தைத் தொட்டு வணங்கியபின் போர் புரியச் சென்றார் என்று ராமாயணத்தில் கூறப்பட்டிருக்கின்றது.

பாண்டவர்கள் தங்கள் போர் ஆயுதங்களை வன்னி மரத்தடியில் புதைத்து, மறைத்து வைத்திருந்ததாக மகாபாரதத்தில் கூறப்பட்டிருக்கின்றது.

மராட்டிய போர் வீரர்கள் போருக்குப் புறப்படும் முன் வன்னி மர இலைகளைப் பிரசாதமாகப் பெற்றுக் கொண்டு புறப்படும் பழக்கமிருந்தது. வன்னி மரத்தைச் சுற்றி பூஜை செய்து வந்தால் குழந்தை பிறக்கும

Related Posts Title


Leave a Reply