» 2009 » May .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.
JeyamRavi weds Aarthi

Posted on Sunday 31 May 2009

ஆர்த்தியை 4ஆம் தேதி கைப்பிடிக்கிறார் ஜெயம்ரவி

arthi.jpg

ஜெயம்ரவி திருமண பந்தத்தில் நுழைகிறார். வரும் 4ஆம் தேதி அவருக்கும் ஆர்த்திக்கும் திருமணம் நடக்கவிருக்கிறது. மணமகள் ஆர்த்தி தயாரிப்பாளர் விஜயகுமாரின் மகள் ஆவார். 7ஆம் தேதி வரவேற்பு நடக்கிறது.

தன்னுடைய திருமணம் குறித்து, ஜெயம்ரவி நிருபர்களிடம் கூறியதாவது:

”இது காதல் திருமணம்தான். ஆர்த்தியை எனக்கு சில ஆண்டுகளாகவே தெரியும். அவரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என் காதலைச் சொன்னேன். ஏற்றுக்கொண்டார். இப்போது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடக்கிறது.

திருமணம் தொடர்பாக எங்கள் குடும்பத்திற்குள் பிரச்னை வந்தது எனக் கூறப்பட்ட செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. நான் கேட்காமலேயே என் விருப்பங்களைப் பூர்த்தி செய்து வரும் பெற்றோர் என் காதலை ஏற்க மறுப்பார்களா என்ன?

ஆர்த்தியைக் கைப்பிடித்தப் பிறகு திரைத்துறையில் மிக உயர்ந்த இடத்தை நான் அடைவேன் என என் உள்மனம் கூறுகிறது. திருமணம் செய்வதால் என் ரசிகைகளை இழந்துவிடமாட்டேன். என்னுடைய சினிமா இமேஜும் எந்தவிதத்திலும் பாதிக்காது” என்று கூறினார்.

admin @ 10:29 pm
Filed under: kollywood
Lanka needs help in dismantling LTTE’s global network

Posted on Sunday 31 May 2009

விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புகளை ஒடுக்கவேண்டும்:
உலக நாடுகளுக்கு இலங்கை வேண்டுகோள்

rohitha_bogollagama.jpg

லங்கையில் விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டிவிட்டதாகக் கூறும் இலங்கை அரசு, சர்வதேச அளவில் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவு ஒருங்கிணைப்பு அமைப்புகளை ஒழித்துக்கட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளது. இதற்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிங்கப்பூர் தலைநகர் சிங்கப்பூர் சிட்டியில் உலக நாடுகளின் ராணுவ அதிகாரிகளின் ஆண்டுக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில் இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகலகாம் கலந்துகொண்டார். அப்போது அவர் இலங்கையின் வேண்டுகோளை முன்வைத்தார்.

இக்கூட்டத்தில் பொகலகாமா பேசுகையில்,

”இலங்கையில் விடுதலைப் புலிகளை ராணுவம் ஒடுக்கிவிட்டது. ஆனால் அந்த இயக்கத்துக்கு உலக அளவில் உள்ள ஆதரவு ஒருங்கிணைப்பு அமைப்புகள் இன்னமும் அப்படியே உள்ளன.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் தலையெடுக்க செய்வதற்காக இந்த ஆதரவு இயக்கத்தின் தலைவர்கள் உலக நாடுகள் பலவற்றில், அரசியல் ரீதியாகத் தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். சர்வதேச அளவிலான இந்த விடுதலைப் புலிகள் ஆதரவு ஒருங்கிணைப்பு அமைப்புகளை ஒடுக்க, உலகநாடுகள் இலங்கைக்கு உதவவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

தமிழ் ஈழத்திற்கான போராட்டம் தொடங்கிய 1972 ஆம் ஆண்டு முதலே போராட்டத்திற்குத் தேவையான நிதியைத் திரட்டித்தந்தது உலகம் முழுக்க பரவியுள்ள ஈழத் தமிழர்கள் தான் என்பதால், விடுதலைப் புலிகள்ஆதரவு அமைப்புகளை ஒடுக்க சர்வதேச நாடுகள் உதவவேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார் பொகலகாமா.

admin @ 9:46 pm
Filed under: srilanka news
First session of parliament starts today

Posted on Sunday 31 May 2009

புதிய மக்களவை இன்று கூடுகிறது

parliament.jpg

புதிய மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் 2 நாட்கள் புதிய எம்.பி.,க்கள் பதவியேற்கின்றனர். 4ஆம் தேதி நடைபெறும் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரையாற்றுகிறார்.

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான 79 பேர் கொண்டி அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 23ஆம் தேதி புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெற்றது. அதில், ஜூன் 1ஆம் தேதி 15ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தைக் கூட்டுவது என தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி இன்று கூட்டத் தொடர் தொடங்குகிறது. இன்றும் நாளையும் புதிய எம்.பி.,க்கள் பதவியேற்கிறார்கள். 3ஆம் தேதி சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது. மறுநாள் 4ஆம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரையாற்றுகிறார். அவருடைய உரை மீதான விவாதம் ஜூன் 5, 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மக்களவை ஒத்தி வைக்கப்படும்.

தற்போதைய மக்களவையின் தற்காலிக சபாநாயகராக காங்கிரஸை சேர்ந்த மாணிக்ராவ் காவித் நியமிக்கப்பட்டுள்ளார்.

admin @ 8:28 pm
Filed under: news
TN govt., staffs gets 30% increase in salary

Posted on Sunday 31 May 2009

govt-of-tamil-nadu.jpgதமிழக அரசு ஊழியர்களுக்கு 30% ஊதிய உயர்வு

றாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 30 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ. 5,155.79 கோடி தொடர் செலவினம் ஏற்படும்.

இந்த உயர்வு, ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அடுத்த மாதம் உயர்வுடன் சம்பளம் பெறலாம். படிகள் இரட்டிப்பு ஆக்கப்பட்டுள்ளன.

ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 40 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும்.

மத்திய அரசின் ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகளை, தமிழகத்தில் அமல்படுத்த அலுவலர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது பரிந்துரைகளை முதல்வர் கருணாநிதியிடம் கடந்த 27-ம் தேதி அளித்தது.

குழுவின் பரிந்துரைகளை ஏற்று, முதல்வரின் ஆணைப்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவு ஆணையில்,

‘அனைத்து அரசு அலுவலர்களுக்கும் இப்போது பெற்று வரும் ஊதிய விகிதத்துக்கு இணையான திருத்திய ஊதிய விகிதம் வழங்கப்படும்.

இப்போதுள்ள ஊதிய விகித முறைக்கு ஏற்ப ஊதியத் தொகுப்புக்கான தர ஊதியம் வழங்கப்படும்.

பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனம் மூலம் இப்போது நடைமுறையில் உள்ள ரூ. 8 ஆயிரம் முதல் ரூ. 13,500 ஊதிய விகித முறையில் உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் ஒரே ஊதிய விகிதம் மற்றும் தர ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப, அமைச்சுப் பணி கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர்கள் இப்போது பெற்று வரும் ஊதிய விகிதத்தை விட ஒரு நிலை மேம்படுத்தி புதிய ஊதிய விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டது.

அதன்படி, கடந்த 2007 டிசம்பர் 12 முதல், ரூ. 7,000 - 225 - ரூ. 11,500 என நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு இணையாக திருத்திய ஊதிய விகித முறையில், ரூ. 9,300 - 34,800 என்ற ஊதிய விகிதம் மற்றும் தர ஊதியமாக ரூ. 4,800 நிர்ணயிக்கப்படும்.

அமைச்சுப் பணி கண்காணிப்பாளர்களுக்கு வழங்கப்படவுள்ள மேம்படுத்தப்பட்ட திருத்திய ஊதிய விகிதம், அதுபோன்ற இதர பணிகளில் உள்ள அலுவலக கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் இந்தப் பணியிடங்களில் பரிமாற்றம் செய்யத் தகுந்த பிற வகைப் பணியிடங்களான துணை வட்டாட்சியர், உதவி வணிகவரி அலுவலர் மற்றும் சார் பதிவாளர் போன்ற பணியிடங்களுக்கும் நீட்டிக்கப்படும்.

அமைச்சுப்பணி கண்காணிப்பாளர்களுக்கு மேம்படுத்தபட்ட ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதன் பதவி உயர்வு பணியிடங்களின் ஊதிய விகிதத்தினை கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 12 முதல் ரூ. 7,500 - 250 - ரூ.12,000 என நிர்ணயம் செய்யப்பட்டது.

தற்போது திருத்திய ஊதிய விகித முறையில் ரூ. 9,300 - 34,800 என்ற விகிதத்திலும், தர ஊதியமாக ரூ. 4,900-ம் வழங்கப்படும்.

மத்திய அரசு அலுவலர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ள வழிமுறைகளே மாநில அரசு அலுவலர்களுக்கும் கடைப்பிடிக்கப்படும்.

ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக, தற்போது நடைமுறையில் உள்ள நிலையே தொடரும். மேலும், திருத்திய ஊதிய விகித முறையில் ஆண்டு ஊதிய உயர்வு மத்திய அரசில் உள்ளவாறு, அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் மூன்று சதவீதம் சேர்த்து வழங்கப்படும்.

மாநில அரசு அலுவலர்கள் தற்போது பெற்றுவரும் சிறப்பு ஊதியம் திருத்திய ஊதிய விகித முறையில் அதே அளவில் தொடர்ந்து வழங்கப்படும். படிகள் இரட்டிப்பாக்கப்படும்.

அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தினப்படி இரட்டிப்பாக்கப்படும். வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி உள்பட அனைத்து படிகளும் இரட்டிப்பாகும்’ என்று கூறப்பட்டுள்ளது.

admin @ 8:02 pm
Filed under: news
Central treats anti Tamils policy, says Veeramani

Posted on Friday 29 May 2009

தமிழர் விரோதப் போக்கு: ம‌த்‌திய அரசு விலை தரவேண்டியிருக்கும் - வீரம‌ணி எச்சரிக்கை

.நா.‌வி‌ன் ம‌னித உ‌ரிமை கவு‌ன்‌சி‌லி‌ல் இ‌ந்‌திய அரசு இல‌ங்கையை ஆத‌ரி‌த்த செய‌ல் ப‌ச்சை‌த் த‌மிழ‌ர் ‌விரோத ‌நிலை‌ப்பாடு எ‌ன்று‌ ‌திரா‌விட‌ர் கழக‌‌த் தலைவ‌ர் ‌கி.‌வீரம‌ணி கூறியுள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெள‌ி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல்,

‘ஐ.நா.‌வி‌ன் ம‌னித உ‌ரிமை கவு‌ன்‌சி‌லி‌ல் இல‌ங்கை‌யி‌ன் இன‌ப்படுகொலையையு‌ம், ப‌ல்லா‌யிர‌க்கண‌க்கான ம‌க்களை ‌சி‌த்ரவதை செ‌ய்து ம‌னித உ‌ரிமை ‌மீற‌ல்களையு‌ம் ‌நியாய‌ப்ப‌டு‌த்‌தி ‌சில ஆ‌சிய நாடுக‌ளி‌ன் ஒ‌த்துழை‌ப்போடு இல‌ங்கை அர‌சி‌ன் ‌‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டு வெ‌ற்‌‌றி பெ‌ற்று‌ள்ளது.

‌சீனா போ‌ன்ற நாடுகளுட‌ன் சே‌ர்‌‌‌ந்து இ‌ந்‌திய அரசு‌ம் இல‌‌ங்கை அர‌சுக்கு ஆதரவாக வா‌க்க‌ளி‌த்‌திரு‌ப்பது ப‌ச்சை‌த் த‌மிழ‌ர் ‌விரோத ம‌னித நேய‌த்து‌க்கு எ‌திரான ‌நிலை‌ப்பாடாகு‌ம்.

இது கு‌றி‌த்து ‌பிரதம‌ரு‌க்கு முதலமை‌ச்ச‌ர் கருணா‌‌நி‌தி இர‌ண்டு நா‌ட்களு‌க்கு மு‌ன்பு எழு‌திய கடித‌ம் செ‌விட‌‌ன் கா‌தி‌ல் ஊ‌திய ச‌ங்காக மா‌‌றி‌வி‌ட்டது.

கா‌ங்‌‌கிர‌ஸ் க‌ட்‌சி‌க்காக ப‌ழியை சும‌ந்து த‌மிழ‌ர்க‌ளி‌ன் ஆவேச‌த்து‌க்கு‌ம் ஆளா‌கியு‌ள்ள கருணா‌நி‌தி‌யி‌ன் கரு‌த்தை அல‌ட்‌சிய‌ப்படு‌த்துவது க‌ண்டி‌‌க்க‌த்த‌க்கதாகு‌ம்.

முத‌ல்வ‌ரி‌ன் உண‌ர்வு த‌மிழ‌ர்க‌ளி‌ன் உ‌ண‌ர்வாகு‌ம். அ‌தை அல‌ட்‌சிய‌ப்படு‌த்‌தினா‌ல், அத‌ற்காக கொடு‌க்க வே‌ண்டிய ‌விலை ப‌ற்‌றி ‌‌பி‌ன்னா‌ல் வ‌ரு‌ந்த வ‌ே‌ண்டிய‌ிரு‌க்கு‌ம்’ எ‌ன்று ‌கூறியு‌ள்ளா‌ர்.

admin @ 10:56 pm
Filed under: srilanka news
Kavya Shivshankar Wins Spelling Bee 2009

Posted on Friday 29 May 2009

ஆங்கில வார்த்தை உச்சரிப்பு போட்டியில் கலக்கிய காவ்யா

kavya-shivshankar.jpg

மெரிக்காவில் வசிக்கும் இந்திய பெண், அங்கு நடந்த 82வது தேசிய அளவிலான ஆங்கில வார்த்தைகள் உச்சரிப்பு போட்டியில் () வெற்றி பெற்றார்.

அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் வசிப்பவர் காவ்யா சிவசங்கர்(13). கேரளாவைச் சேர்ந்தவர். இவர், வாஷிங்டனில் நடந்த 82வது தேசிய அளவிலான ஆங்கில வார்த்தைகள் உச்சரிப்பு போட்டியில் நேற்று முன்தினம் வெற்றி பெற்று, 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு பெற்றார்.

செவ்வாய் கிழமையன்று, வாஷிங்டனில் தேசியளவிலான ஆங்கில வார்த்தைகள் உச்சரிக்கும் போட்டி துவங்கியது. இப்போட்டி 15 சுற்றுக்களாக நடந்தது. இதில், ஒன்பது முதல் 15 வயது வரையிலான 293 பேர் கலந்து கொண்டனர். அதில், 117 பேர் ஆங்கிலம் அல்லாத மொழி பேசுபவர்கள். காவ்யா சிவசங்கர் இறுதிச் சுற்று வரை வென்று அபார வெற்றி


பெற்றார். காவ்யாவிற்கு நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் இந்திய பாரம்பரிய நடனம் போன்றவற்றில் விருப்பம் உள்ளது.

காவ்யா கலிபோர்னியாவில் உள்ள கலிபோர்னியா ட்ரையல் ஜீனியர் உயர்நிலை பள்ளியில் 8ஆம் வகுப்பு பயில்கிறார். இந்த சாம்பியன்ஷிப் பட்டம்பெற ஆசைப்பட்ட காவ்யா, கடந்த ஆறு ஆண்டுகளாக ஆங்கில அகராதியே கதியாகக் கிடந்து, ஆங்கிலத்தைக் கரைத்துக் குடித்திருக்கிறார்.

இப்போட்டியில் வெர்ஜினியாவைச் சேர்ந்த டிம் ருய்டர் இரண்டாம் இடம் பிடித்தார்.அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் மனைவி ஜில் பிடன், இப்போட்டியின் இறுதிச் சுற்றை நேரில் வந்து பார்த்து ரசித்தார்.

admin @ 10:06 pm
Filed under: American news
Gemini Ganesan life story - A documentary under production

Posted on Friday 29 May 2009

காதல் மன்னனின் கதை படமாகிறது

gemini.jpg

காதல் மன்னன் ஜெமினி கணேசனின் வாழ்க்கை காதல் மன்னன் என்ற பெயரில் படமாகிறது. ஜெமினி கணேசனின் மகள் டாக்டர் கமலா செல்வராஜ், அலமேலு கிரியேஷன்ஸ் சார்பில் இதை தயாரிக்கிறார்.

90 நிமிடங்கள் ஓடும் இந்த டாகுமெண்டரி படம் பல்வேறு மொழிகளிலும் வெளியாக உள்ளது. தாயன்பன் இசையமைக்க, எம்.வெங்கடேசன் இயக்குகிறார். தற்போது படப்பிடிப்பு நடந்துவருகிறது.

இத்தகவல்களை டாக்டர் கமலா செல்வராஜ் நிருபர்களிடம் தெரிவித்தார். பேட்டியின்போது தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், நடிகை சாவித்திரி மகள் விஜய சாமுண்டீஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.

admin @ 9:24 pm
Filed under: kollywood
Mamata Banerjee sent back TATA’s donation

Posted on Friday 29 May 2009

mamata-banerjee.jpgடாடா நன்கொடைக்கு டாடா சொன்ன மம்தா பானர்ஜி!

தேர்தல் செலவுகளுக்காக டாடா நிறுவனம் அளித்த ரூ.27 லட்சம் நன்கொடை(காசோலை)யை திருப்பி அனுப்பினார் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவியும், ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜி. ”தனியார் நிறுவனங்கள் தரும் நன்கொடையில் கட்சி நடத்தவில்லை. மக்கள் பிரச்சனையை வைத்துதான் கட்சி நடத்துகிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

டாடா நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் அறக்கட்டளை ஒன்றை நிறுவியுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவு வெளிவந்த பின்னர் அந்த அறக்கட்டளை சார்பில் தனக்கு அனுப்பி வைக்கப்பட்ட நன்கொடையை திருப்பி அனுப்பி விட்டதாக அவர் தெரிவித்தார்.

எந்த ஒரு வர்த்தக நிறுவனத்திடமிருந்தும் நாங்கள் நன்கொடையை ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஏனென்றால் எந்த ஒரு தனியார் நிறுவனத்தின் நலன் கருதி கடமை ஆற்ற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டுதான் நாங்கள் கடமையாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது என்றார்.

எனினும், டாடா நிறுவனம் அனுப்பி வைத்த நன்கொடை தொடர்பாக அந்நிறுவனத்துக்கு தன்மையுடன் ஒரு கடிதத்தையும் தான் எழுதிவிட்டதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

admin @ 8:33 pm
Filed under: news
UN enquiry on Lanka,India betrays Tamils : Vaiko

Posted on Friday 29 May 2009

ஈழத்தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம்: வைகோ

க்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், இலங்கை அரசுக்கு ஆதரவான தீர்மானத்தில் வாக்களித்து, ஈழத் தமிழர் பிரச்னையில் இந்திய அரசு மீண்டும் துரோகம் இழைத்துள்ளது என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.

திருநெல்வேலில் இன்று (மே 28) நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில்,

”இலங்கையில் நடைபெற்ற துயரங்களுக்கு இந்திய அரசுதான் காரணம். துயரம் என்றவுடன் வேறு எதையும் கற்பனை செய்து விட வேண்டாம். பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்.

துயரம் என்று நான் சொன்னதற்கு காரணம், இலங்கைத் தமிழர்களை கருவறுக்கும் இந்தச் செயலுக்கு இந்த அரசு துணை போகும்போது நாம் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருப்பதைதான் துயரம் என்றேன்.

இந்திய விடுதலைக்கு முதலில் போராடியது தென்னாடுதான். அந்த வீரச்சரித்திரம் இந்த மண்ணுக்கு உண்டு. அப்படிப்பட்ட இந்த மண்ணில் இன்று தமிழ் உணர்வு அழிக்கப்படுகிறது. ஈழத்தமிழர்கள் வரலாற்றில் இது ஒரு சிறிய இடைவெளி. நாடாளுமன்றத்தில் என் குரல் ஒலிக்காவிட்டாலும் மக்கள் மன்றத்தில் என் குரல் ஓங்கி ஒலிக்கும்.

ஐ.நா. சபையில் நடந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா ஓட்டு போட்டுள்ளது. உலகில் யாருக்கும் ஏற்படாத கொடுமை தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு இது தற்காலிக வெற்றிதான். அதுவும் இந்தியா உதவி செய்து ஆயுதங்களை, வீரர்களை அனுப்பியதால் கிடைத்த வெற்றி. கடந்த 5 மாதத்தில் மட்டும் ஒரு லட்சத்து 45 ஆயிரம் தமிழர்கள் அழிக்கப்பட்டுள்ளனர். மூன்றரை லட்சம் தமிழர்கள் பாதுகாப்பு இல்லாமல் உள்ளனர்.

இது, இந்திய அரசின் துரோகம். இதிலிருந்து அவர்கள் விரைவில் மீளுவார்கள். முதலில் பிரபாகரன் தப்பி ஓடும்போது சுட்டதாக கூறினார்கள். அதன் பிறகு உடலை கண்டு பிடித்ததாக கூறினார்கள். உண்மையில் பிரபாகரனை இலங்கை ராணுவம் சுட்டு கொன்றிருந்தால் மரபணு சோதனை நடத்தி இருக்கலாமே. இன்னும் பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளை உயிரோடு இருக்கிறார். அப்படியிருந்தும் மரபணு சோதனை நடத்த ஏன் முன்வரவில்லை.

பிரபாகரன் மறுப்பு தெரிவிக்கவில்லையே என்று கூறுகிறார்கள். மறுப்பு அறிக்கை வெளியிட அவர் என்ன அரசியல் கட்சியா நடத்துகிறார். அவரது குரல் வெளியே வந்தாலே அவரை அழிக்க தயாராக இருக்கிறார்கள். எனவே, நாங்கள் ஆராய்ந்து இந்த முடிவை வெளியே சொன்னோம்,” என்றார் வைகோ.

admin @ 8:06 pm
Filed under: srilanka news
Sania Mirza marries a industrialist

Posted on Friday 29 May 2009

ஹைதராபாத் தொழிலதிபரை மணக்கிறார் சானியா மிர்சா

saniamirza.jpg

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா (22), ஹைதராபாதைச் சேர்ந்த தொழிலதிபர் முகமது சோரப் மிர்சாவை மணக்க உள்ளார். இருவரும் சிறுவயது முதலே ஒன்றாகப் பழகியவர்கள்.

சோரப் மிர்சா ஹைதராபாத்தில் பேக்கரி மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார். 23 வயதான அவர் இங்கிலாந்தில் மேல்படிப்பு படிக்கவிருக்கிறார். அவருடைய தந்தை அடில் மிர்சா ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருககிறார்.  சானியா மிர்சாவின் தந்தை இம்ரானும் இவரும் ஒன்றாக தொழில் செய்வதாகக் கூறப்படுகிறது.

சானியா மிர்சா - முகமது சோரப் மிர்சா திருமண குறித்து சானியா மிர்சா தந்தை இம்ரான் மிர்சா கூறியதாவது:

”முகமது சோரப் மிர்சா (23), சானியா மிர்சா திருமண நாள் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. எங்களுக்கு சோரப் மிர்சா உறவினர் கிடையாது. ஆனால் இரு குடும்பத்தினரும் நீண்ட காலமாக நட்புடன் பழகிவருகிறோம்.
அவர் தொடர்ந்து விளையாடுவார்” என்றார் இம்ரான் மிர்சா.

admin @ 7:40 pm
Filed under: news