ஒவ்வொரு படத்திலும் புதுமை: சூர்யா ஆசை

தமிழில் வெற்றி பெற்ற அயன் திரைப்படம் தெலுங்கில் வீடு ஒக்கடே என்ற பெயரில் வெளியாகிறது. அதற்காக ஐதராபாத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு நடிகர் சூர்யா கூறுகையில்,
”எனக்கு மிகவும் பிடித்தப் படம் அயன். அதனால்தான் அதன் தெலுங்கு பதிப்புக்கும் அக்கறை செலுத்தி வருகிறேன். நம்பும்படியான ஆக்ஷனை படு த்ரில்லாகக் கொடுத்திருக்கிறது அயன். தமிழக ரசிகர்களுக்குப் பிடித்ததைப் போலவே தெலுங்கு ரசிகர்களுக்கும் இது பிடிக்கும்.
நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு புதுமை செய்யவே விரும்புகிறேன். அதனால்தான் ஒரேமாதிரியான வேடங்களை ஏற்பதில்லை. அதே சமயம் பெண் ரசிகைகளும் எனக்கு முக்கியம். அவர்களின் விருப்பம் என்ன என்பதையும் மனதில் கொண்டே நடிக்கிறேன்.
ஜோதிகாவுடன் திருமண வாழ்க்கை சுகமாக, சிறப்பாக இருக்கிறது. அவர் நன்றாக சமைக்கிறார். மகள் தியாவை நன்றாகப் பார்த்துக் கொள்கிறார். அவர்களுக்காக அதிக நேரம் செலவிட விரும்புகிறேன். அதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் படப்பிடிப்பு வைத்துக் கொள்வதில்லை” என்றார் சூர்யா.
Related Posts Title































