Punch Balu
‘பஞ்ச்’ பாலு
தயவுசெய்து முதலில் பின்குறிப்பைப் படித்து விடவும்.
பஞ்ச் டயலாக் விடும் பெருந்தலைகளுக்கே பஞ்ச் விடுவது தான் பஞ்ச் பாலுவின் பாலிசி!
அவரு எவ்வளவு பவரு உள்ளவரா இருந்தாலும் பஞ்ச் பாலுக்கிட்ட மாட்டினா பஞ்சு, பஞ்சா பறக்க வேண்டியதுதான்.
பின் குறிப்பு: கண்டிஷன்ஸ் அப்ளை மாதிரி இது என்னடா பின்குறிப்புன்னு பார்க்கறீங்களா. வழக்கமான மேட்டர்தான்.
பஞ்ச் பாலு அடிக்கும் கமெண்டுகள் சும்மா தமாசுக்குத்தான். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் எழுதப்படுவதில்லை.
சும்மா படிச்சுட்டு, ஆங்… அப்படியான்னு ரொம்ப ஈசியா எடுத்துக்கிட்டு போயிடனும். ஓ.கே?
…………………..
பாமகவைப் பார்த்து பத்திரிகை நிருபர்கள், ‘ஏன் மாறி, மாறி கூட்டணி?’ என கேள்வி கேட்கின்றனர். ம.தி.மு.க., கம்யூ., காங்., கட்சிகளைக் கேட்பதில்லை.
- பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு
அந்தக் கேள்விக்குச் சரியான பதில் சொல்ல முடியாத ஒரே ஆள் நீங்கதானே! அதனால்தான் அப்படி. மேலும், எல்லோரும் வெற்றிக்காகத்தான் கூட்டணி வைப்பார்கள். நட்பு, நம்பிக்கை, நன்றி இந்த மூன்று விஷயங்களை முதலில் வைத்துக்கொண்டு அதற்குப் பிறகு வெற்றி என்கிற கொள்கையை வைக்கிறார்கள் மற்றவர்கள். நீங்கள் அப்படியில்லையே வெற்றிக்காக மட்டுமே கூட்டணி வைப்பவர் அல்லவா. அதனால்தான் அப்படி.
சூது, சூழ்ச்சி, வஞ்சகம் நிறைந்த தேர்தல் அரசியல் களத்தில் என்னால் தாக்குபச் பிடிக்க முடியவில்லை. மனச்சோர்வின் விளிம்புக்கே சென்று சென்று திரும்புகிறேன்.
-விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்
அரசியல் அரிச்சுவடி படிக்காமலா அரசியலுக்கு வந்தீங்க? இப்பவே இப்படி சலிச்சிக்கிட்டா எப்படீங்க, குறை காலத்தை எப்படித்தான் ஓட்டப்பபோறீங்க? ராமதாஸ் அண்ணன் எதுவும் கத்துக் கொடுக்கலையா?
மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி வரக்கூடாது. இனியார் ஆட்சிக்கு வந்தாலும் ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்தால் இதுதான்கதி என்று நினைக்க வேண்டும்.
-ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ
ஹலோ வைகோ சாரா? எங்கே… இலங்கையில் இருந்து பேசறீங்களா? ஏன் சார்… ஈழத் தமிழர்கள் படும் பாட்டை உங்கள் அரசியல் வெற்றிக்குப் பயன்படுத்தப் பார்க்கிறீங்க? நம் கத்தல் காதில் விழுந்தாலும் ராஜபக்சே கண்டுக்க மாட்டார். ஒரே நாடு என்பது அவர் கொள்கை. தனி ஈழம் என்பது விடுதலைப் புலிகளின் கொள்கை. இதற்கிடையே மாட்டிக்கொண்டு அப்பாவித் தமிழ் மக்கள்தான் பலியாகுகிறார்கள். நீங்க வேற டென்ஷன் பண்றீங்க. இங்கேயிருக்கிற பிரச்னையைச் சொல்லி வெற்றி பெறுங்கள். உங்களுக்குச் சாதகமாகவோ பாதகமாவோ முடிவு வந்தாலும் மத்திய அரசுகிட்ட சொல்லி ஈழப் பிரச்னையை தீர்த்து வைங்க. என்ன சரிங்களா?
தேர்தலில் நான் தனித்து நிற்பது போல் ஜெயலலிதாவோ, கருணாநிதியோ தனித்து நிற்க முடியுமா?
அவர்களுக்கு என்ன தலையெழுத்தா இருக்கற காசையெல்லாம் இழப்பதற்கு அல்லது வீம்புக்கு தனியாக நிற்பதுக்கு? வெற்றிக்காக சிலர் கூட்டணி அமைப்பதில் தவறு இருப்பதுபோல நீங்கள் பேசுகிறீர்கள். நீங்கள் கூட சினிமாவில் வெற்றிப் பெற்றீர்கள். தனியாகவா? உங்களுக்குத் துணையாக வெற்றிகரமான கதாநாயகி, வெற்றிகரமான இயக்குநர், வெற்றிகரமான ஒளிப்பதிவாளர், வெற்றிகரமான சண்டைப் பயிற்சியாளர், வெற்றிகரமான தயாரிப்பாளர் என நிறைய பேருடன் கூட்டணி வைத்துதானே வெற்றி பெற்றீர்கள். அப்புறம் என்ன சார், எப்பப் பார்த்தாலும் தனியா தன்னந்தனியா ன்னு புலம்பிக்கிட்டு. அவங்கதான் சோலோ விளையாட்டுக்கு வர மாட்டேங்கிறாங்கள, விடுவீங்களா அதையே பிடிச்சுக்கிட்டு.
Punch Balu’s Old punches
Related Posts Title
Tags: திருமாவளவன், மனச்சோர், வைகோ