» Disease relief plants - Akbar Kausar .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 17 Apr 2009

Disease relief plants - Akbar Kausar

akbar-kausar.jpgமணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள்

- வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி
(ACHYRANTHES ASPERA)

நவக்கிரக மரங்கள்

புதன் கிரகத்தைக் குறிக்கும் வகையில் புதன்கிழமை நாள் அமைந்திருக்கின்றது. இந்தக் கிரகத்தில் பிறந்தவர்கள், மிதுனம், கன்னி ராசிக்காரர்களாக இருப்பார்கள். புதன் கிரகத்திற்கு என்று பெயர். புதன் பகவான் அமைச்சராக ஆட்சி புரிகிறார். இவர் உத்யோகம், கல்வி, கலை, அறிவு, வெற்றி, புகழ் மற்றும் நல்வாழ்வை அளிக்கிறார் என்று இந்து சமுதாய மக்கள் நம்புகின்றனர்.

இந்து சமுதாய மக்கள் புதன் கிரகத்திற்குக் கோவில் ஒன்று அமைத்து பகவானுடன், ஞானாதேவி, நாயுருவி செடி, இம்மூன்றையும் ஒரே சமயத்தில் வணங்குகின்றார்கள். இதனால் இக்கிரகத்தின் நன்மைகள் கிடைக்கும் என்றும், உயிரைக் குடிக்கும் நோய்களான கிட்னி ஃபெயிலியர், எய்ட்ஸ் போன்ற நோய்களில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்றும் நம்புகின்றனர்.

வேலூர் மாவட்டம் பொன்னை அருகில் உள்ள விநாயகபுரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீநவக்கிரக கோட்டை ஆலயத்தில் புதன் பகவானுடன், ஞானாதேவி அம்மன் மற்றும் நாயுருவி செடியைச் சேர்த்து ஒரே சமயத்தில் காலை, மாலை இரண்டு வேளைகள் பூஜை செய்யப்படுகின்றன. புதன் பகவான் கோவில் இங்கு தனியாக அமைந்திருக்கிறது.

பழங்காலத்தில் ஒருவருக்கு மரணத்தை உண்டாக்கும் நோய் ஏற்படும் போது மூலிகை மருத்துவர்களையும், சம்பந்தப்பட்ட கோவிலையும் தேடிச் செல்வார்கள். முன் காலங்களிலெல்லாம் டயாலிஸிஸ் சிறுநீரகம் மாற்றுச் சிகிச்சை கிடையாது. இந்து சமுதாய மக்கள், புதன் பகவான்-ஞானாதேவியை வணங்கிவிட்டு, நாயுருவிச் செடியால் தயாரிக்கப்பட்ட மருந்துகளைச் சாப்பிட்டு குணம் பெறுவார்கள். “வைத்தியர் மருந்து அளிப்பார். இறைவன் குணம் அளிப்பான்” என்ற தத்துவம் இருந்தது. அதனால் கொடிய நோய்களில் இருந்து மக்கள் நிவாரணம் பெற்று நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தார்கள். ஆனால், சூப்பர் ஸ்பெசலிஸ்ட் என்ற பெயரில் டாக்டர்கள் மருந்து மற்றும் அறுவை சிகிச்சை அளித்து இயற்கையான மரணத்திற்கு முன் மரணத்தை வரவழைத்துவிடும் காலம் வந்துவிட்டது.

நாயுருவியின் முழு செடியும் மருத்துவ குணங்கள் கொண்டவையாக இருப்பதால்தான் நம் பெரியோர்கள் இந்தச் செடியை மக்கள் பார்வையில் படும்படி கோவில்களில் வைத்து வணங்கி வந்தார்கள் என்ற உண்மை புரிகிறது.

* இலையை அரைத்து அதன் சாற்றை தோல் மீது பூசினால் தேம்பல், படை குணம் பெறும். இதையே தேள் கொட்டிய இடத்தில் தேய்த்தால் விஷம் நீங்கும். இதன் வேரை டூத்பிரஷ்ஷாக பல் துலக்க பயன்படுத்தலாம்.
* விதையை சமைத்துச் சாப்பிட்டால் ஒரு வாரம்வரை பசி இருக்காது. மீண்டும் பசி எடுக்க, சிறிதளவு மிளகு எடுத்து அதை வறுத்து இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து காலையில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும்.
* 20 கிராம் விதையை பவுடராக்கி துத்திக் கீரையில் கொதிக்க வைத்து காலை உணவில் தினசரி ஒரு வேளை சாப்பிட்டால் மூலம் குணம் பெறும்.
* 10 கிராம் விதையை அரைத்து இரண்டு வேளை சாப்பிட்டால் பேதி குணம் பெறும். சிவப்பு, வெள்ளை நிறம் இரண்டு வகை நாயுருவி இருக்கின்றன. இரண்டும் பயன்படுத்தலாம்.
* முழுச் செடியைக் கஷாயமிட்டுக் குடித்தால் சிறுநீரக நோய்கள் குணம் பெறுகின்றன. உலர்ந்த செடி இரத்தத்தைச் சுத்தம் செய்கிறது. விபச்சார நோயைக் குணமாக்குகிறது.
யுனானி மருத்துவத்தில் நாயுருவிச் செடியின் அனைத்து பாகங்களும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை முறையாக பதப்படுத்தி கிட்னி ஃபெயிலியர், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாகத் தரப்படுகிறது.

புதன் மேலப் பெரும்பள்ளத்துக்கு அருகில் அமைந்துள்ள தலம் சீர்காழியிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ளது. திருவெண்காடு.

இது புதனுக்கு உரிய தலமாகும். நான்கு புறங்களில் ராஜகோபுரம் உடையதும், பரப்பளவில் பெரியதான கோயில், 3 குளங்கள் கோவிலுக்கு முன்பாக உள்ளன.

புத்திக்கு நாயகன் புதன், கல்வி உயரவும், நரம்புத் தளர்ச்சி முதலான வியாதிகள் தீரவும் செய்வார். அந்தந்த கிரகங்களுக்கு உரித்தான பூஜை முறைகளை செய்து அருள் பெறலாம். வித்யாகாரகன் எனவும், கணிதம், வைத்தியம், கம்ப்யூட்டர் என அனைத்துக்கும் அதிபதி. நாடகம், நடனம், புத்தக பிரசுரம் ஆகியவற்றிற்கு புதன் பலம் இன்றியமையாதது. நவக்கிரகங்களுள் 4வது இடத்தைப் பெறுபவர்.

இந்து சாஸ்திரப்படி புதன் பகவான்
(MERCURY) பற்றிய குறிப்புகள்

கிரகப் பெயர் - புதன் பகவான் (புதன்)
அம்மன் - ஞானாதேவி
வியாபாரம், உத்யோகம், கல்வி, கலை, புத்தி, வெற்றி, புகழ்
ராசி - மிதுனம், கன்னி, ஆயில்யம், கேட்டை, ரேவதி.
அதிதேவதை - விஷ்ணு
ப்ரீத்தி தேவதை - நாராயணன்
உலோகம் - பித்தளை
நவக்கிரகத்தில் - கிழக்கு முகம் (புதன்கிழமை)
வாகனம் - குதிரை
நிறம் - பச்சை
தானியம் - பச்சைப் பயிறு
நவரத்தினம் - மரகதம்
விருட்சம் - நாயுருவி
திக்கு - வடகிழக்கு.

அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்

2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்

2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்

2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி

Related Posts Title


Leave a Reply