» Parrot Treatment .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 10 Apr 2009

Parrot Treatment

green-parrot.jpgவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்

கிளி வைத்தியம் – கே.எஸ்.சுப்ரமணி

செல்லப் பிராணிகளைப் பயன்படுத்தி நோய்களைக் குணமாக்கிக் கொள்வது பழைய செய்தி. அமெரிக்காவில் பல மருத்துவமனைகளில் நாய், பூனை, பறவை, மீன் முதலியவற்றை நோயாளிகள் தனியாக வளர்க்கிறார்கள். இதனால் விரைந்து குணமாகிறார்களாம்.

கலிபோர்னியாவில், ஸாண்டாமோனிகாவில் உள்ள பெர்க்லே வெல்ட் கன்வாலஸ் ஸெண்ட் என்ற மருத்துவமனை இதில் ஒரு படி முன்னேறியுள்ளது! அதாவது, மோசமாக முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டுக் கை, கால் செயலிழந்து, பேச முடியாமல் இருப்பவர்களும், ஞாபக சக்தி இல்லாதவர்களும், நோயிலிருந்து முழுக்குணம் பெற்றாலும் பழையபடி நன்கு உடல் தேறாதவர்களும் ஒரு கிளியை வளர்த்து வந்தால் வெகு வேகமாக உடல் நலம் பெற்றுப் பேச ஆரம்பிப்பார்கள் என்ற நிரூபிக்கப்பட்டுள்ளது.

நாய், பூனை போன்று நாம் அனைத்து மகிழும் விலங்குகளை விட கிளிகளிடம் மக்கள் அதிகம் பேச விரும்புகின்றனர். பேசும் கிளிகளோ சொன்னதைச் சொல்லி மகிழ்ச்சியை உண்டாக்கும். சிறிய பொம்மைக்காரை ஓட்டும். ஊஞ்சல் ஆடும். வித்தைகள் கற்றுக்கொடுத்தால் அதையும் செய்யும். பேசாத கிளிகளோ ‘ஆம்’ ‘இல்லை’ என்பதற்கு ஏற்பச் செயல்படும். இதனால், நடக்க முடியாத, பேச முடியாத நோயாளிகூட இவ்விரண்டையும் உள் எழுச்சியின் மூலம் ஊக்கம் பெற்றுச் செய்து காட்டிவிடுவார்.

கிளிகளுக்கு அறிவு, திறமை, முக்கியமான வேலைகளைச் செய்யும் ஆற்றல், மனிதர்கள் பேசுவதை புரிந்துகொள்ளும் ஆற்றல் முதலியன உள்ளன. அதனால்தான் கிளிகளைத் தேர்வு செய்தார்கள். அடுத்து, ‘ஏ பேர்ட் இன் தி ஹேண்ட்’ என்று இந்தத் திட்டத்திற்கு பெயர் சூட்டினார்கள்.

பறவைகளைப் பண்ணைகளிலோ அல்லது கூண்டுகளிலோ தினசரி பார்க்க வேண்டும். புறாவை எப்போதும் கையில் வைத்து அன்புடன் வளர்க்கலாம். தூங்கும்போது கூட்டில் அடைத்துவிடலாம். சிலருக்கு பறவையே தோழனாய், பாதுகாவலனாய் இருக்கும். இவை இரவில் நம்முடனேயே தூங்கும். நம்மை பாதுகாக்கவும் கூடும். போட்டிக்காகப் பறவைகளை பேசவும் வேறு வித்தைகள் செய்யவும் பழக்கலாம். இப்படி நான்கு பிரிவுகளில் நோயாளிகளின் குணநலன்களுக்கு ஏற்பப் பறவைகள் வளர்க்கச் சொல்கிறார்கள்.

பேசும்கிளி வளர்த்தால், இருவர் உரையாடும்போது அதைக்கேட்டு அப்படியே அது மிமிக்ரி செய்யும். மூன்று நோயாளிகளையும் ஒரு பேசும் கிளியையும் வைத்துப் பேசப் பயிற்சி அளித்தால் போதும். எஞ்சிய நேரங்களில் கிளியே கொஞ்சி கொஞ்சிப் பேசி நோயாளிகளைப் பேச வைத்துவிடுமாம்.

டாக்டர் இரீன் பெப்ர்பர்க் என்பவர் பறக்கும் பறவைகளின் அறிவுத்திறமை, பேசுவதைப் புரிந்து கொள்ளும் தன்மை, செயல்படும் ஆற்றல் முதலியவற்றைப் பல ஆண்டுகள் ஆராய்ந்து இந்த உண்மைகளைக் கண்டுபிடித்தார். பரிசோதனையிலும் வெற்றி பெற்றார்.

ஆஸ்திரேலிய நாட்டுப் பெரிய கிளிகளும், இதே நாட்டின் சிறிய கிளிகளும்தான் பெரும்பாலும் இதற்கு ஏற்றக் கிளிகள் என்கிறார்கள். டாட்ஸ் என்ற பெண்மணி இப்படிக் கிளிகளைச் சேகரித்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்துவிட்டார். நோய் குணமாக உற்சாக வெள்ளம் பாய்ந்ததால், இந்தப் பறவை வைத்தியத்தை இரண்டு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சொல்லிக்கொடுத்துக் குணப்படுத்தியும் வருகிறார்.

வீட்டில் கிளி வளர்க்க ஆரம்பித்தால் குழந்தைகளும் பெரியவர்களும் மிகுந்த நலத்துடன் இருப்பார்கள். நடுத்தர வயதுக்காரர்கள், பெரிய பறவைக்கூண்டில் பல்வேறு வகையான கிளிகளை வளர்த்து வந்தால் குடும்பச் சூழ்நிலைகளில் உள்ள கடுமை, கோபம் முதலியன குறையுமாம். குருவி வகைகளும் இதே அளவு நன்மைகள் செய்கின்றன.

செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் கிளியையோ குருவியையோ வளர்த்து வந்தால் உடலும் மனமும் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது உறுதி.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

Most Commented Posts


Leave a Reply