Wednesday, 8 Apr 2009

Asal will be a super hit movie like Chandramuki: Rajini

சந்திரமுகி போல அசல் படமும் வெற்றி பெறும்: ரஜினி வாழ்த்து

asal-ajith.jpg

சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜீத் நடிக்கும் அசல் திரைப்படம் தான் நடித்த சந்திரமுகி போல பெரிய வெற்றியைப் பெறும் என்று ரஜினி கூறினார்.

சந்திரமுகி திரைப்படத்திற்கு அடுத்ததாக, சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில், பிரபு தயாரிக்கும் படம் அசல். இதில் அஜீத் கதாநாயகனாக நடிக்கிறார். சரண் இயக்குகிறார். இந்தப் படத்தின் தொடக்கவிழா மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் இல்லத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு ரஜினி பேசுகையில்,

”இங்கு வைரமுத்து பேசும்போது இந்த வீட்டில் இருந்துதானே சிவாஜி சார் திருவிளையாடல், பாசமலர், பாலும் பழமும், வீரபாண்டிய கட்டபொம்மன் என எத்தனையோ படங்களின் படப்பிடிப்புக்குச் சென்றார் எனக் குறிப்பிட்டார்.

சிவாஜி வாழ்ந்த அன்னை இல்லம் தமிழ்த் திரையுலகுக்கு மட்டுமல்ல தென்னிந்தியத் திரையுலகுக்கே தாய் வீடு போன்றது.

பிரபுவும் ராம்குமாரும் அவருடைய தந்தை பெயரைக் காப்பாற்றி வருகின்றனர்.அவர்களைப் போல இருக்கவேண்டும் என என் மகள்களுக்கும் கூறியுள்ளேன்.

என் மகள் செளந்தர்யாவை எந்தப் படவிழாவுக்கும் அழைத்துச் சென்றதில்லை.இங்கே அழைத்து வந்துள்ளேன்.இங்கு வருவது சென்டிமென்டாக ராசியான இடம்.

நான் நடித்த சந்திரமுகி படத்தின் பூஜையும் இதே வீட்டில்தான் நடந்தது. அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. இங்கே பூஜை போடப்படும் அசல் படமும் சந்திரமுகி போலவே மிகப் பெரிய வெற்றியைப் பெறும். படத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் என் வாழ்த்துகள்” என்றார் ரஜினி.

Related Posts Title


Leave a Reply